தகவல்கள் வெற்றி கழகம் எந்த முடிவையும் தன்னிச்சையா தீர்க்கமா எடுக்குது இல்லை,அவனுக சாய்ஸ்ல வைச்சிருக்க ஒவ்வொரு ஆப்சனையும் சமூக வலைதளங்கள்,நீயூஸ் ,மீடியானு தகவலா கசிய விடுவானுக.உடனே எல்லா செய்தி சேனல்களும் அதை விவாதத்துல எடுத்து பேசுவாங்க.செந்தில்வேல், கோடீஸ்வரன்,மதூர்சத்யா,நெல்சன்,ஷானவாஸ்னு எல்லா அரசியல் விமர்சகர்களும் ஏன் திமுக,அதிமுக தலைவர்கள் கூட அதை அக்குவேற ஆணி வேற பிரிச்சு மேஞ்சு அதுல இருக்க சாதக பாதகங்களை இஞ்ச் பை இஞ்ச்சா விளக்கி சொல்லிருவாங்க. அவங்களாம் வாய்வழி குடுத்த ஸ்டேட்மென்ட் வைச்சு அதுல அதிக லாபம் இருக்க அல்லது குறைந்த பட்ச பாதிப்பு இருக்க முடிவை தேர்ந்தெடுக்குறானுக.
இதை ஒரு பேட்டனாவே ரெண்டு வருசமா பாலோ பண்றானுக. அவனுகளை பத்தி வர்ற எந்த செய்தியும் கட்சி சம்மந்தப்பட்ட யார் வாய்ல இருந்தும் வந்துருக்காது,நம்ம எல்லாரும் சேர்ந்து நமக்கு தெரியாமலே அவனுக்காக வேலை பாத்துட்டு இருக்கோம்.OLA, UBERலாம் எப்புடி சொந்தமா ஆட்டோ,டாக்சி இல்லாமலே வெரும் APP வைச்சு கமிஷன்ல கோடில கொழிக்குறானுகளோ அதே மாதிரி சோசியல் மீடியாவ மட்டும் கைல வைச்சு அரசியல்ல நூறுசதவீத ஆதாயம் அடையிறானுக.இப்போதைக்கு அவனுகளை எதுவா இருந்தாலும் முடிவெடுத்து செயல்பட வைச்சு அதுல இருக்க குறைகளை,தவறுகளை மட்டுமே விமர்சனம் செய்யனும்.அவன் செய்யாத விஷயத்தை அவனுக வாய்ல இருந்து வராத விஷயத்தை பத்தி பேசி பேசி அவனை கலாய்க்கிறேன்,அம்பலபடுத்துறேன்னு மறைமுகமா அவனுக்காக வேலைபாக்குறதை மொதல்ல நிப்பாட்டனும்.எதிரிய தவறு செய்ய விடுங்க,உங்க அரசியல் இன்டலெக்சுவலை அதுக்கப்புறம் காட்டுங்க போதும்..
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
சிட்டிங் CMமை தூக்கி உள்ள வச்சு ஊதுபத்தி உருட்ட வைத்தும்
சட்டம் போராட்டம் எப்படி நடத்தி ஜெயிக்கனும்னு இந்தியாவுக்கே பாடம் எடுத்தவர் கலைஞர்
ஆனால் இந்திய நீதிமன்றங்களால் கலைஞரை தொடவே முடியல
"என்ன யாராலும் அடிக்க முடியாது, நான் அடிச்சா உன்னால திரும்ப எந்திரிக்க முடியாது"
ஆட்சியாளரை நம்பி தான் தங்கள் வாழ்க்கைத்தரம் இருக்கு என்கிற நிலைல majority தமிழ்நாடு இல்லை இன்னிக்கு.. 60 ஆண்டு திராவிட ஆட்சியின் சாதனை அது... எனவே வாக்கு என்பது ஒரு non-serious இனிமே. ரொம்பலாம் யோசிக்க வேணாம்... நாளை TTF வாசன்னு ஒரு ஆப்சன் வந்தாலும் தாராளமா தேர்ந்தெடுப்பாங்க...
இதுதான் வட மாநில முற்பட்டதாக தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் வகுப்பு மக்களின் மனநிலை. அவர்கள் சனாதனத்தில் ஊறிப்போய் இருக்கிறார்கள்.
இதே வட மாநில, தங்களை முற்பட்டதாக சொல்லிக் கொள்ளும் ஜாதியினர் தான், மண்டல் கமிஷன் வழங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடினார்கள். அதை அமல்படுத்த விடாமல் பல ஆண்டுகள் நிறுத்தி வைத்தார்கள்.
அதனாலேயே ஒன்றிய அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்திக்கொண்டே சென்றார்கள்.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அதற்காகவே இடங்களை அதிகரித்தார்கள்.
கடைசியாக EWS என பத்து சதவிகித இட ஒதுக்கீட்டையும் வாங்கி இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நாங்கள் தான் ஆண்டு அனுபவிப்போம் இந்த இந்திய நாட்டில் என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் எவ்வளவு இழிவாக தாழ்த்தப்பட்டவர்களை பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள். இதை எதிர்த்து தான் நாம் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
#JUSTIN | திருச்செந்தூரில் காயல்பட்டிணம் செல்லும் பெண்ணை, பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் - பேருந்து ஓட்டுநர், நடத்துநரை அழைத்து வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணை
நடத்துநர் வீரபத்திரனின் நடத்துநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யவும், பேருந்து மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர் தகவல்
#SunNews | #Tiruchendur | #PrivateBus | #RTO