உதும்பரா கல்மலர்*🌹
3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலர்வதாகக் கருதப்படும் *'உதும்பரா' (Udumbara)* மலர்களைக்காணும் அரிய வாய்ப்பு தைத்திரீய சம்ஹிதை, மகாபாரதம் பல இந்தியத் திருநூல்களில் இம்மலர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன
பிரம்மகமல் வருடம் ஒருமுறை பூக்கும் - இமயமலை
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
Tragic horror in Thailand as an 11-year-old boy steals his parents' pickup truck and crashes into a procession of Buddhist monks in Mukdahan.
At least 9 monks are confirmed dead, with over a dozen injured.
Details unfolding.
இது பற்றி தெரியவில்லை.
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி முருகன் கோவிலில் பிள்ளைகளை கோவிலுக்கு நேர்ந்து விட்டு பின்ன திரும்ப அழைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அப்படி கோவிலுக்கு கொடுத்து வீட்டுக்கு அழைத்து வரும்போது புதிதாக ஜாதகம் எழுதலாமா என்று தெரியவில்லை.
குன்றத்தூர் முருகன் கோவில் (எம் மகன் திரைப்படத்தில் சரண்யா குழாயடியில் உருளுவாரே அந்த கோவில்) மலை மீது அமைந்திருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில். குடும்பமாக ஜாலியாக மலை ஏறி வரலாம்.
கீழே நல்ல சைவ ஹோட்டல்கள் உண்டு.
சிவகங்கை மாவட்டம் ஆன்மீக சுற்றுலா சிலர் செல்வார்கள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், குன்றத்தூர் முருகன், பட்டமங்கலம் குரு பகவான், காளையார் கோவில் சிவன் கோவில் என மிகப் பழமையான ஆலயங்கள் பல உள்ளன.
நகரத்தார்களால் நிர்வகிக்கப்படும் இன்னும் ஒரு பழமையான ஆலயம் இருக்கிறது. அந்த கோவில் பேர் ஞாபகம் வரவில்லை. அங்கே ஒரு மரம் இருக்கும். அந்த மரத்தை சென்று பார்த்தால் நம் பூர்வ ஜென்ம ஞாபகம் வரும் என்று சொல்வார்கள். அந்த கோவில் பெயர் தெரிந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும்.
சிவகங்கை மாவட்டம் ஒரு வறட்சியான பகுதி என்பதால் அங்கு சுற்றுலா செல்ல யோசிப்பார்கள். ஆனால் இது போன்ற ஒரு ஆன்மீக சுற்றுலா போய் வரலாம்.
1987 ஹிந்தி ராமாயணம் தொடர்...
ஸ்ரீ ராமர்,
தமிழின் பெருமையை , தெற்கின் ஆன்மீக உயர்வை அப்படி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்...
தமிழும், முருகனும், சிவபெருமான் உலகிற்கு கொடுத்த பரிசு...
பாரத பண்பாடு அதை என்றும் மதிக்கும்..
திராவிட பாவாடைகள் கதறலாம்
#Murugan
#புக்கொளியூர்_போடா_சித்தர்
காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோயில் முக மண்டபத்தில் அனாதையாக வீற்றிருந்து கோடிக்கணக்கான மக்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ புக்கொளியூர் போடா சித்தர் 1989 ம் ஆண்டு சமாதி கொண்டார்.
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்களைப் பார்த்து ”அந்தச் சித்தரைத் தரிசனம் செய்தேளா?” என்று அடிக்கடி கேட்பதுண்டு.
மகா பெரியவர் சொல்லி இவரிடம் ஒரு வெளிநாட்டுகார பக்தர் வந்தார் அந்த வெளிநாட்டு காரர் தன் பாஸ்போர்ட் விசா பணம் போன்ற முக்கிய ஆவணங்கள் உள்ள பெட்டியை காஞ்சிபுரத்தில் தொலைத்துவிட்டார்
அது கிடைக்க வேண்டும் எனறு சித்தரிடம் வேண்டினார். சித்தர் அவருடைய இன்னொரு பெட்டியை பிடுங்கினார்
தன்னை சுற்றி உள்ள குப்பைகளை எல்லாம் எடுத்து அதில் போட வெள்ளை காரர் கடுப்பாகி சாமியிடம் இருந்த தன் பெட்டியை வாங்கி அதில் இருந்த குப்பைகளை கீழே கொட்டினார்
அதிலிருந்து தொலைந்த ஆவணங்கள் அனைத்தும் விழுந்தன இதை கண்ட வெள்ளை காரர் காலில் விழுந்து கதறி தவறுக்கு மன்னிப்பு கேட்டு விடை பெற்றார்.
புக்கொளியூர் போடா சித்தர் என்ற பெயரைப் பெற்ற இந்த சித்த மகரிஷி பல கோடி யுகங்களாகப் பல்லாயிரங் கோடி அண்டங்களை இயக்கி வருபவர்.
பல்வேறு பெயர்களை உடைய இந்தச் சித்த மகா புருஷர் சிவபெருமானாலேயே “புக்கொளியூர் போடா சித்தர்” என்று அழைக்கப்பட்டார்.
புக்கொளியூர் எனபது தற்போதைய அவிநாசி என்ற நகரத்தின் பெயராகும்.
நான்முகனான பிரம்மன் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து உற்பவித்த போது ஐந்து முகங்களுடன் அருள் பாலித்தார்.
ஒரு முறை ‘கோடிக்கணக்கான ஜீவன்களைப் படைப்பது நாமே’ என்று அவருடைய ஐந்தாவது சிரசு (தலை) செருக்குற்ற போது பரமசிவன் அத்தலையைக் கிள்ளி எறிந்திடவே அது பல லோகங்களையும் கடந்து பூலோகத்தில் வந்து விழுந்தது.
இதற்குப் பிராயச்சித்தம் பெற வேண்டி பிரம்மன் பூலோகத்தின் பல்வேறு திருத்தலங்களில் தவம் இயற்றி இறுதியில் சிவபெருமானின் அருளைப் பெற்றான்.
அவ்வாறு சிவபெருமானால் கிள்ளி எறியப்பட்ட பிரம்மனுடைய ஐந்தாவது தலை அக்னிக் குழம்பாகப் பூலோகத்தில் வந்து விழுந்திட, தேவர்கள் உட்பட எவருமே அதன் அருகில் செல்ல முடியவில்லை.
அப்போது புக்கொளியூரில் பிரசன்னமாகி இருந்த போடாசித்தர் அவ்வழி வந்து எவரும் தொடயியலா பிரம்மனுடைய ஐந்தாம் சிரசைத் தம் கரத்தில் ஏற்றுக் கொண்டார்.
இந்த ஈர ஓட்டைத் தம் கையில் ஏந்தியாவாறே போடா சித்தர் சுவாமிகள் பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார்.
அவ்வாறு அவர் புக்கொளியூர் வந்து சேர்ந்த போது, மகா ப் பிரளய முடிவிற்குப் பின் ருத்ர தாண்டவத்தின் அங்கமாக அக்னித் தாண்டவம் ஆடி நின்ற சதாசிவனாம் சிவபெருமான் பெரிய அக்னி ஜ்வாலையாக, ஜோதிப் பிரகாசத்துடன் புக்கொளியூர் சிவாலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தில் ஐக்கியமானார்.
திருக்கையிலையில் ருத்ர தாண்டவத்தினைக் கண்டு கொண்டிருந்த உமையவள் “ஈசன் எங்கு சென்றார்?“ எனத் தெரியாமல் வருத்தமுற்றுப் பல லோகங்களுக்கும் சென்று ஈசனைத் தேடித் தவமியற்றத் தொடங்கினாள்.
இவ்வாறு பல லோகங்களுக்கும், பூலோகத் திருத்தலங்களுக்கும் சென்று வந்த பார்வதி தேவி புக்கொளியூர் போடா சித்தரின் மகிமைகளை அறிந்து அவரை நாடி வணங்கி நின்றாள்.
போடா சித்தரும் உரிமையாகப் புக்கொளியூர் நாதரை, அவினாசி லிங்கேஸ்வரரை அழைத்து “என் அம்மையை எத்தனை ஆண்டுகள் காக்க வைத்தனை?” என்று அன்புடன் சினந்து கொண்டார்.
சிவபெருமானும் அசரீரியாக, “எங்கு, எவ்வாறு, எங்ஙனம், மணம் கொள்வேனோ?” என்று கேட்டார்
“இங்கே இவ்விடம் இப்பொழுதே இம்மாமரத்தின் அடியில் மணம் புரிவாயாக! ஏனைய மணத்தைப் பிறிதோரிடத்தில் காட்டுகிறேன்” என்று புக்கொளியூர் போடா சுவாமிகள் அருளிட சிவபெருமானும் பார்வதியை மணம் புரிந்தார்.
இவ்வாறு புக்கொளியூர் மாமரத்து அடியில் நிகழ்ந்த தெய்வீகத் திருமணக் காட்சியைக் கண்டு களித்தவரே போடா சித்தர் ஆவர்.
பிறகு பரமேஸ்வரன் ஏகாம்பரேஸ்வரராகக் காஞ்சியில் நான்கு வேதங்களுக்கு ஒப்பான மாமரத்தடியில் அம்பிகையாம் பார்வதியை மணந்து பிறிதோரிடத்தினில் திருமணத்தையும் பூர்த்தி செய்து கொண்டார்.
இவரே காஞ்சீபுரத்தில் பல லட்சம் ஆண்டுகள் அமர்ந்திருந்து “போடா, போடா, போடா” என்றுரைத்துப் பல விந்தைகளைப் புரிந்தவர்.
இவர் எப்போதும் “போடா, போடா” என்று கூறியமையால் இவருக்குப் “புக்கொளியூர் போடா சித்தர்” எனச் சிவபெருமானே மனமுவந்து பெயரிட்டார்.
“இவர் ‘போடா’ என்றிட்டால் கர்ம வினைகள் கரைந்து விடும்”.
பாவங்கள் பொசுங்கிவிடும்.
தீவினைகள் தீய்ந்து விடும். அதர்மங்கள் அழிந்து விடும்.
இவருக்கே “மாம்பட்டிடைச் சித்தர்” என்ற பெயரும் உண்டு.
மாமரத்தடியில் பார்வதி பரமேஸ்வரன் திருமணக் காட்சியைக் கண்டு உய்க்கும் பேறும் பெற்றமையால் இப்பெயரை அவர் பெற்றார்.
ஹிந்து கோவில் வருமானத்தை, முறைப்படி பராமரித்து,ஹிந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்த தவறியதன் விழைவு.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் !!
கேரளா விஜிநாராயணன் குடும்பம் நதியில் விழுந்து உ*யிரை மாய்த்து கொள்ளும் முன் கடவுளை வணங்கி கையில் இருந்த காசை காணிக்கை செய்த சம்பவம்
கண்குறைபாடுள்ள மனைவி இரண்டு பிள்ளைகள் வறுமை கடைசியில் தற்கொலையில் முடிந்தது. ஒரு குழந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை
அடுத்து வேறொரு விவாதத்திற்கு வருவோம் :-
ராவணன் தமிழனா..???
ராவணனின் பூர்வீகம்
நோய்டா
அதாவது இன்றைய உத்திரப்பிரதேச எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன்.
புலஷ்திய வம்சத்தில் வந்தவன் ராவணன்...
விஷ்வத்திய குலத்தவன் ராவணன்.
குபேரனின் சகோதரன் ராவணன்.
எனவே
தமிழுக்கும் ராவணுக்கும் சம்மந்தம் இல்லை.
வால்மீகி ராமாயணத்தின் தழுவளே கம்பராமாயணம் இதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள்.
தமிழ் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டதே கம்பராமாயணம்.
ஸ்ரீராமஜெயம்
அப்படி என்ன பெரிதாய் செய்துவிட்டார் ஸ்ரீ ராமானுஜர்?
கேளுங்கள்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தார்.
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
அவர் துலுக்க நாச்சியாரையும் கொண்டாடிய சமரச சன்மார்க்க வள்ளல்.
-------
என்ன செய்தார் ராமானுஜர்?
மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம் இன்றைக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமில்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?
இன்றைக்கும் கண்டதேவி என்னும் ஊரில் தலித்துக்கள் வடம் பிடிக்க முடியாமல், ஆயிரம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசே ஒன்றும் செய்யும் முடியாத நிலைமை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்...
காந்தியடிகள் “ஹரிஜன்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…
மேலக்கோட்டையில் அவர்களை “திருக்குலத்தார்” என்று அழைத்து ஆலயத்தின் உள்ளே அரவணைத்துக் கொண்ட பெருந்தகை அவர்.
சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
திருக்கச்சி நம்பிகளின் சாதி பார்க்காது அவரை வீட்டுக்குள் உணவருந்த வைத்து, அவர் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாவது ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணினார். அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு
எம்பெருமானின் அடியவருக்காக,
தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீவைஷ்ணவத்தையும் சம்பிரதாயத்தையும் காக்க நின்ற உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
-------
என்ன செய்தார் ராமானுஜர்?
எங்கோ வயலில் வேலை செய்யும் ஒரு விவசாயி யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க அவரும் சரியான வழி சொன்னதற்கு
மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேரருளாளன்.
அந்த வழிகாட்டியைக் காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன் என்று
ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய பெருமகன் தான் ராமானுஜர்…
------
என்ன செய்தார் ராமானுஜர்?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் நிறைவேறாமல் வெறும் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!
"கோதை பொய் சொல்லி விட்டாள்!
சும்மா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்ற வில்லை!" என்ற பேர் வராது. அதைத் தவிர்க்க அண்ணன் பொறுப்பில் அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!
ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காவது தோன்றிற்றா?
வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது இருநூறு வருடங்களுக்குப் பிறகு
அதை பக்தியோடு சுவாசிக்கும் உள்ளம் அவருடையது...
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட அந்த உள்ளம் வேறு யாருக்கு வரும்?
அரங்கன் ஆலயத்தில் ஆகம விதிகளை ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில் காவிரிக் கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத சிறிய குழந்தைகளின், சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கியது அந்த உயர்ந்த ஜீவன்.
------
என்ன செய்தார் ராமானுஜர்?
வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்! அதே சமயம், தமிழ் உணர்வால் அன்பினால் கரைந்து வாழ்ந்த ஆழ்வார் உள்ளம்!
இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர் அவர்.
------
என்ன செய்தார் ராமானுஜர்?
திருமலை திருப்பதியில் எம்பெருமான் திருவேங்கடமுடையான்.
அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று
புறநானூறு, கலித்தொகை., சிலப்பதிகாரம் என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டி, மற்ற வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பாங்கு கொண்டவர்.
--------
என்ன செய்தார் இராமானுஜர்?
இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும், சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்! ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது 120 வருடங்களும் கால்நடையாகவே அலைந்து அலைந்து