தந்தையை இழந்தவர்களுக்குத் தந்தை நிகர் மாமனார் கிடைப்பது வரம். என் மாமனார் எனக்கு அந்த வகைக் கொடுப்பினை. “யப்பா…” என அவர் என்னை அழைக்கும்போது உயிர் உருகும். என் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை வந்தால் எப்போதுமே என் பக்கம்தான் நிற்பார். எல்லோர் மீதும் பேரன்பு காட்டுகிற மனிதர்.
சில வருடங்களுக்கு முன் காலில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு கேன்சராக மாறி முழங்காலுக்குக் கீழ் எடுக்க வேண்டிய சூழல். நிலைம��யை மருத்துவர்கள் எங்களுக்குச் சொல்ல, மாமாவிடம் எப்படி அதனைச் சொல்வது எனத் தத்தளித்தோம். ஒருகட்டத்தில் அவருக்கே தெரியவர, அத்தனை காலம் தன்னைத் தூக்கிச் சுமந்த காலை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டார். விரல்களுக்குச் சொடக்கு எடுத்தார். இனி இந்தக் கால் நம் உடம்பில் இருக்காது என்பதை யார் மனம்தான் ஏற்கும்? “கவலைப்படாதீங்க மாமா… செயற்கைக் கால் வைச்சுக்கலாம்” என்றேன். நிமிர்ந்தவர், ���ேசாகச் சிரித்தார். “கால் போனா என்ன கை போனா என்ன? நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” என்றார். அறுவை சிகிச்சை முடிந்து செயற்கைக் கால் மாட்டியதும் பழைய உற்சாகத்திற்குச் சட்டென மாறிக் கொண்டார். எதையும் இழப்பெனக் கருதாத அந்த மனநிலை என்னை எப்போதுமே வியக்க வைக்கும்.
வயது முதிர்வால் அவ்வப்போது மருத்துவமனை அல்லாட்டாங்கள்… ஆனாலும் எதையும் அவஸ்தையாகக் காட்டிக் கொள்ளாமல், அத்தையை ம��்டுமே அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போய் வருவார். யாரையும் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இருவருமே அவ்வளவு கவனமானவர்கள்.
அத்தை, என் அப்பாவின் உடன்பிறந்த தங்கை. மரியாதை நிமித்தம் இன்று வரை அத்தையும் நானும் பேசிக் கொண்டதில்லை. நிமிர்ந்துகூடப் பார்த்ததில்லை. “தம்பி பொறந்தப்ப மொத ஆளா நாந்தான் கைநீட்டி வாங்கினேன். ஆம்பளை புள்ளைன்னு தெரிஞ்ச உடனே பரவசத்துல நர்ஸ் கையில��� அம்பது ரூபா காசு கொடுத்தேன். தம்பியே எனக்கு மருமகனா வரும்னு நினைச்சதே இல்ல…” என அவ்வப்போது நெகிழ்வார் அத்தை. தீவிர வாசிப்பாளர். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் கையில் இருக்கும். இவருடைய வாசிப்புப் பழக்கம்தான் வம்சாவழியாய் எனக்கும் வந்திருக்குமோ என்னவோ…
தாய் நிகர் அத்தைக்கும் தந்தை நிகர் மாமாவுக்கும் நேற்று திருமண நாள். மிக எளிமையாகக் கொண்டாடி வாழ்த்து பெற்றோம். எளிய புன்ன��ையில் நிறைந்திருக்கிறது 49 வருட இணை வாழ்வு!
#ONEMAN என்ற படத்தை யூடியூப் தளத்தில் நாளை வெள்ளிக்கிழமை 11-9-2026 மாலை 7 மணி மு���ல் பார்க்கும்படி தயார் செய்திருக்கிறேன். 119 ரூபாய் கட்டணம் செலுத்தி படத்தை பார்க்கலாம். மேலும் இந்த கட்டணத்தின் மூலம் ONE MAN படத்தில் ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தேன் என்ற மேக்கிங் காட்சிகள் ஒவ்வொன்றையும் அதே தளத்தில் பார்க்க முடியும்.
ONE MAN படத்தின் லிங்க்:
https://t.co/Cln9L3V2gQ
#SankagiriRajkumar
One person. All crafts. One incredible cinematic journey. 🎬🔥
A heartfelt thank you to all the press and media friends who watched #OneMan and showered the film with immense appreciation and support. ❤️🙏
The journey of #OneMan doesn’t end here. It continues with a new opportunity to reach an even wider audience.
The film is coming to #YouTube next week! 📺✨
Hoping to receive the same love and support from everyone as we begin this new journey. ❤️
#OneMan_Raj @Rajkumar_Dir