இந்து மத, ஜாதி ஆதிக்கப் பண்பாடுகளுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டைப் பின்பற்றுவோரின் அனுபவப் பகிர்வு I ஜாதியற்றோரின் ஒன்றுகூடல் I திராவிடர் இயக்கக் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு
#திராவிடர்_��ாழ்வியல்_விழா - ஒட்டன்சத்திரம் - ஆகஸ்ட் 2, ஞாயிறு
#DravidianLifeStyleFest #DravidarThalam
Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்ற���கக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம். (EVM மும் ஒரு காரணம்)
இந்து மதம், இந்துக் கடவுளர்கள், ஜாதி, குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், அவை தொடர்பான கதைகள் போன்றவை இந்தக் கதாநாயக வழிபாட்டின் அடிப்படையான காரணங்கள்.
இந்து மதத்தையும், ஜாதியையும், ஆணாதிக்கத்தையும், இவற்றைக் காப்பாற்றும் குல தெய்வங்களையும் நம்பி வ��ழும் தமிழ் மக்கள் - தங்களது அன்றாட வாழ்வில் செய்துவரும் பல காட்டுமிராண்டித் தனங்களில் ஒரு 10 சதவீதத்தைக்கூட இன்னும் விஜய் இரசிகர்களை செய்துவிடவில்லை.
விஜய் இரசிகர்கள் ஒரு கற்பனையை நம்பி வெறும் ஓட்டு மட்டும் தான் போட்டார்கள். ஜாதி, மதம் எனும் கற்பனைகளை நம்பி சக மனிதர்களையே கொல்வதும், ஒடுக்குவதும், ஒதுக்குவதும் அவைதான் நியாயம், அதுவே தர்மம் என்றும் வாழ்வதுமான ஒரு சமுதாயத்தில�� விஜய் இயல்பாக, எளிதாகத் தலைவனாக முடியும்.
நாளை தனுஷோ, சூர்யாவோ, பிரதீப் ரங்கனாதனோ, கயாடு லோகரோ கூட தமிழ்நாட்டின் முதல்வர்களாக வரமுடியும்.
விஜய் இரசிகர்கள் சமூகப்பொறுப்பு அற்றவர்கள் தான். அதேசமயம் அந்தத் தற்குறிகளை உருவாக்குவது இந்துச் சமுதாயம் தான்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், தற்குறிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்து மதம், ஜாதி, ஆணாதிக்கம் அவற்றைக் காக்கும் குல தெய்வம், கிராம தெய்வம், அவை தொடர்பான கதைகள், புராணங்கள் அனைத்தும் அழியவேண்டும்.
அதற்கு பெரியார் எனும் அழிவு வேலைக்காரன் வேண்டும். பெரியார் தான் ஆயுதம். பெரியாரியல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் களமாட இருப்பதை வரவேற்கிறோம்.
சண்டைக்குப் புறப்படு தோழா! சனாதனத்தோடு சண்டை செய் தோழா! உனக்குத் துணையாக பெரியாரியம் இருக்கும்! நாங்கள் இருப்போம்!
@SFDravidians @Dravidarthalam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்��்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்! - @mkstalin#DMKForever
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்��ுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத��துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்���ுரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்���த்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வ���க்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
"தமிழ்நாடு ��ாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விரு��்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலா��� வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தின��லும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect.
We aren’t just celebrating history; we are guiding tomorrow.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
🔗: https://t.co/vwXw8Xwsly
#PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar
நடிகர் விஜய், பெரியாரியலுக்கு மிகவும் ஆபத்தான எதிரியே!
தி.மு.க. வை மட்டுமே பெரியாரிஸ்ட்டுகள் ஆதரிக்க வேண்டுமா?
தி.மு.க. வைப் போலவே பெரியாரை ஒரு வழிகாட்டியாக ��றிவித்துள்ள விஜய்யை எதிர்க்காமலாவது இருக்கலாமே?
என்ற சில கேள்விகளைப் பார்க்கிறேன். நாம் இன்று வரை தி.மு.க.வை ஆதரிப்பதற்கான காரணம்:
பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை தி.மு.க. ஆட்சியில் அமரும் போதெல்லாம் பெரியாரின் கனவுத் திட்டங்கள் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது.
இந்த வாரிசு நடிகரைப் போல, நிறைய கட்சிகள் 'பெரியார் வாழ்க!' எனச் சொல்கின்றன. பெரியார் படத்தை Political Marketing ���் ஒரு வடிவமாக வைத்துள்ளனர். ஆனால் பெரியாரின் கனவுகளைச் செயல் வடிவமாக்கிக் கொண்டே இருப்பது தி.மு.க. மட்டுமே!
1. இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் ஜாதி மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு 1951 ல் தடை விதிக்கப்பட்டது. அப்போது பெரியாருடன் இணைந்து போராடி இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத்தந்தது தி.மு.கழகம்.
2. ஜாதியை நிலைநிறுத்தும் குலக்கல்வித் திட்ட ஒழிப்புப் போரில், திராவிடர் கழகத்துடன் இணைந்து போராடி, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறை சென்று, 10 மேற்பட்ட தொண்டர்களைத் துப்பாக்கிச் சூட்டில் பலிகொடுத்து அந்தத் திட்டத்தை ஒழித்தது தி.மு.கழகம்.
3. கல்வி வள்ளல் காமராசர் என்று ஒரு பட்டம் காமராசருக்கு உண்டு. அவர் அப்படி ஏராளமான பள்ளிக் கூடங்களையும், கல்லூரிகளையும் திறந்து வைப்பதற்கான ஆட்சியை அவருக்கு அளித்தது தி.க.வும், தி.மு.க. இணைந்து நடத்திய குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம்.
4. 1928 லிருந்து 1967 வரை பெரியாரின், சுயமரியாதைத் திருமண முறையில் மணம் செய்த இலட்சக்கணக்கானவர்களின் பிள்ளைகள் அனைவரும் சட்டப்படி Illegitimate Child ஆகவே வாழ்ந்தனர். தி.மு.க. தலைவர�� அறிஞர் அண்ணாவின் சுயமரியாதைத் திருமணச் சட்டம் அந்த இலட்சக்கணக்கான Illegitimate குழந்தைகளைச் சட்டப்பூர்வமான பிள்ளைகளாக அங்கீகரித்தது. அப்படி அங்கீகரிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
5. இன்றும் ஆர்.எஸ்.எஸ். கவர்னர் க��ுக்குக்கூட எரிச்சலை உண்டாக்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை இந்த நாட்டுக்குச் சூட்டியது தி.மு.கழகம்
6. 1929 முதல் சுயமரியாதை மாநாட்டிலிருந்து பெரியார் நடத்திய போர் பெண்களுக்கான சொத்துரிமை. அம்பேத்கரின் பதவிப் பறிப்புக்கும் காரணம் அவர் கோரிய பெண் சொத்துரிமை. அதைச் சாதித்துக் காட்டியது தி.மு.கழகம்.
7. பெண்கள் இராணுவத்திலும் போலீஸ் வேலைக்கும் செல்ல வேண்டும் என 1929 ல் பெரியார் கேட்டார். அதைச் சாதித்தது தி.மு.கழகம்.
8. நில உரிமை, மின்சார விநியோக உரிமை, பேருந்துகளை நடத்தும் உரிமை அனைத்திலும் பார்ப்பன, உயர் ஜாதிகளின் ஆதிக்கங்களைத் தகர்த்து அனைத்தையும் எளிய மக்களின் சொத்தாக அதிரடிப் புரட்சியைச் செய்தது தி.மு.கழகம்.
9. MBC என்ற உள் ஒதுக்கீடு, அருந்ததியருக்கான SCA உள் ஒதுக்கீடு, இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீடு வழங்கி இட ஒதுக்கீட்டு உரிமையை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செ���்றது தி.மு.கழகம்.
10. பெரியாரின் கனவான 'சமத்துவபுரங்களை' உருவாக்கியது தி.மு.கழகம்.
11. பெரியாரின் சமதர்மத் திட்டங்களில் ஒன்றான உழவர் சந்தைத் திட்டத்தைச் செயல்படுத்தியது தி.மு.கழகம்.
12. இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையைக் கொண்டு வந்த (1980) போது தி.க.வுடன் இணைந்து போராடி அதை ஒழித்தது தி.மு.கழகம்.
13. NEET அடிப்படையிலான உ��ர் மருத்துவக் கல்வியில் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமையை மீட்டுக் கொடுத்தது தி.மு.கழகம்.
14. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைக் கொடுத்தது தி.மு.கழகம்.
15. அம்பேத்கர் தொகுப்பு வெளியீடு, பெரியார் நூல்கள் பிற மொழிகளில் வெளியீடு என அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்களை விதைத்து வருவது தி.மு.கழகம்.
16. புதுமைப் பெ���், நான் முதல்வன் என ஏராளமான திட்டங்களின் மூலம் ஒரு சமுதாயத்தையே அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டிருப்பது தி.மு.கழகம்.....
இவை ஒரு சில சான்றுகள் மட்டுமே! ஒரு தனிப் புத்தகமாகவே அச்சிட வேண்டிய அளவுக்குப் பெரியாரின் கனவுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கும் தி.மு.கழகத்தை ஆதரிக்காமல் ஒரு பெரியாரிஸ்ட் வேறு யாரை ஆதரிக்க முடியும்?
75 ஆண்டுகளாகப் பெரியாரியலை அரசின் திட்டங்களா���ச் செயல் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பை, ஒரு வாரிசு நடிகர் 'ஒழிப்பேன்' என்கிறார்.
இதுவே இன்றைய சூழலில் பெரியாரியலுக்கு மிகவும் ஆபத்தான, எதிரான அறிவிப்பு ஆகும்.
பெரியாரியலை நடைமுறைப்படுத்தும் தி மு க வை, பெரியாரின் படத்தையே கேடயமாக வைத்து அழிக்கத் துடிக்கும் விஜய், சீமானைவிட மிகவும் ஆபத்தானவர்.
@TVKVijayHQ
@TVKHQITWingOffl
@dmk_youthwing
தலைமுறை தலைமுறையாக குப்பை அள்ளுவதையும், மலமள்ளுவதையும் குலத்தொழிலாகச் செய்து வந்த மக்களை அந்த வேலைகளில் இருந்து வெளியேற்று!
அவர்களுக்கு 15 இலட்சம் இழப்ப���டு வழங்கு! அவர்களின் மறுவாழ்வுக் காக தனியாக ஒரு வங்கியை உருவாக்கு! பன்னாட்டு வணிக நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். தொகையில் 25% அளவுக்கு அந்த வங்கிக்கு நிதி ஒதுக்கீடு வழங்கச் சட்டமியற்று! TAHDCO, DICCI போன்ற வழிகாட்டும் அமைப்புகளை தனியாக உருவாக்கு!
கழிவுகள் அகற்றும் வேலைகள் அனைத்தையும் இயந்திரமயமாக்கு!
பல்கலைக் கழகங்களில் துப்புரவுப் பொறியியல் Sanitation Engineering, Sanitation Technology போன்ற புதிய துறைகளை உருவாக��கு! பள்ளியிலிருந்தே துப்புரவுப் பணி, கழிவு அகற்றும் பணிகளில் அனைத்துப் பாலின மாணவர் களுக்கும் பயிற்சிகளை வழங்கி, அதற்கு Internal Marks வழங்கும் முறையைத் தொடங்கு!
பள்ளி - கல்லூரிகளில் துப்புரவுப் பணியாளர் என்ற பதவிகளை முற்றிலுமாக ரத்து செய்! “நாம் கழிந்ததைக் கழுவுவதற்கு வேறு ஒருத்தி வருவாள்” என்ற ஜாதி ஆதிக்க, ஆணாதிக்கப் புத்தியைக் கற்கும் காலத்திலேயே ஒழிக்க நடவடிக்கை எடு!
கழிவுகளை உருவாக்குபவர்தான், அவற்றை அகற்றவும், சுத்தப் படுத்தவும் வேண்டும் என்பதைக் கட்டாயச்சட்டம��க்கு! ஒவ்வொரு தெருவிலும், கேட்டட் கம்யூனிட்டிகள், அப்பார்ட்மெண்ட்கள், பெரும் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள் என ஒவ்வொன்றிலும் கழிவுகளைச் சுத்திகரிக்கும் சிறு அலகுகளை நிறுவி, அவற்றை இயக்க அவரவர்களுக்கே பயிற்சிகளை வழங்கு! சுத்திகரிக்கும் அலகை நிறுவாத கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காதே!
அரசு விழாக்கள், தனியார் நிறுவன விழாக்கள், ஜாதி மத நிறுவனங்கள், ஜாதி மத விழ���க்கள், புரட்சிகர அமைப்புகளின் நிகழ்வுகள், அரசியல் கட்சி நிகழ்வுகள் என அனைத்து நிலைகளிலும் விழாக்களை நடத்துபவர்களே - நடத்தும் ஜாதியினரே கழிவுகளை அகற்றவும் வேண்டும் என்பதைக் கட்டாயச் சட்டமாக்கு!
பார்ப்பனக் கடவுள் முருகனின் அறுபடைவீடுகள், மேல்மருவத்தூர், வடலூர் போன்ற ஊர்களில் நடக்கும் தைப்பூசம் மற்றும் சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், ஸ்ரீரங்க சொர்க்கவாசல் திறப்பு, திடீர்த் திருவிழாக்களாக வரும் புஷ்கர யாகம், அத்திவரதர் தரிசனம் போன்ற அனைத்துப் பார்ப்பன மத விழாக்களிலும் - கிராமக் கோவில் திருவிழாக்கள், நாட்டார் தெய்வ, குலதெய்வ வழிபாடுகள், கிராமத்துப் பொங்கல் விழாக்கள், ஜல்லிக் கட்டுகள் ��ோன்ற தமிழர் விழாக்களிலும் “ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மட்டுமே துப்புரவுப் பணி செய்ய வேண்டும்” என்ற தீண்டாமை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. “கழிவதற்குப்பல ஜாதி, அதை அள்ளுவதற்கு ஒரே ஜாதி” என்று கொடுமையான, உலகில் எங்கும் இல்லாத தீண்டாமை இழிவைப் பயிற்றுவிக்கும் பயிற்சி மய்யங்களாக உள்ள மேற்கண்ட விழாக்களைத் தடைசெய்!
ஜாதி, தீண்டாமை, குலத்தொழில் இழிவுகளைத் திணித்து இந்திய அரசியலை��ும், பொருளாதாரத் தையும் பண்பாட்டையும், மனிதத் தன்மையையும் சீரழித்துக் கொண்டுள்ள பகவத்கீதை, மனுசாஸ்திரம் போன்ற பிரிவினை நூல்களைத் தடைசெய்!
(2019 ல் திராவிடர் தளம் முன்னெடுத்த கோரிக்கைகள்)
@Dravidarthalam
@SFDravidians
@dmk_youthwing
#greaterchennaicorporation
#ChiefMinisterMKStalin
நாங்கள் இந்துக்கள் அல்லர்! திராவிடர்கள்!!
இந்து மதத்திற்கு எதிரான பெரியாரின் "திராவிடர் வாழ்வியலை - திராவிடர் பண்பாட்டைப் பின்பற்றி வாழும் மக்களுக்குத் தனி சிவில் சட்டம் உருவாக��க ஒன்று கூடுவோம்!
திராவிடர் வாழ்வியல் விழா - பெரியாரிய, அம்பேத்கரியத் தோழர்களின் படைப்புகளின் தொகுப்பாக, 'திராவிடர் பண்பாட்டு ஆவணம்' வெளியீடு - 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' நூல் வெளியீடு
அக்டோபர் 12, ஞாயிறு, கோவை. விரைவில் விரிவான அறிவிப்புகள் வரும்.
@Dravidarthalam @SFDravidians
சென்னை & கோவையில் பணியைத் தொடங்கியது SFD திராவிடர் மாணவர் கூட்டமைப்பு. 26.07.25 சனி காலை கோவை ஹோப் காலேஜ் பகுதியிலும், 27.07.25 ஞாயிறு மாலை சென்னை மண்ணடி பகுதியிலும் மாணவர் சந்திப்புகள் நடைபெற்றன.
அடுத்த கட்டமாக, சென்னை பிரசிடென்சி கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம், SOEL, லயோலா, IIT.M, அண்ணா பல்கலைக் கழகம், கோவை அரசுக் கல்லூரி, கோவை அரசு பாலிடெக்னிக், ஈரோடு அரசு கலைக் கல்லூரி, அவிநாசி அரசு கலைக் கல்லூரி, மேட்டுப் பாளையம் அ���சு கலைக் கல்லூரி, திருப்பூர் அரசு கலைக்கல்லூரி, திருச்சி பெரியார் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களை அவர்களது தங்குமிடங்களில் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட அனைத்துக் கல்வி் நிறுவனங்களிலும் தற்போது படித்து வரும் SFD மாணவர்களுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் "ஜாதி ஒழிப்பில் பெரியாரிய நாத்திகத்தின் தேவை" & "பெண் விடுதலையில் பெரியாரிய நாத்திகத்தின் தேவை" எனும் அடிப்படையான 2 தலைப்புகளில் வகுப்புகளை நடத்துவது என்றும்,
அனைத்து நிறுவனங்களிலும் இந்தத் தலைப்புகளை ஒட்டிய துண்டறிக்கைகளை வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டன. தோழர் Elaiyakumar AR Saran Dravidian ஆகியோர் இவற்றுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
@Dravidarthalam
திருச்சியில் ஜாதி ஒழிப்பு மாவீரர்களின் கல்லறையைச் சீரமைத்து அங்கு ஒரு நினைவகம் உருவாக்குமாறு திராவிட மாடல் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்!
திருச்சியைத் தோழர் பெரியாரின் கோட்டையாகக் கட்டி எழுப்பிய தோழர்களுள் தோழர் ஃபிரான்சிஸ் மிக மிக முக்கியமானவர். அவரது பெயரில் பெரியார��� உருவாக்கிய படிப்பகம் சொல்லவே முடியாத அளவுக்குச் சிதைந்து கிடந்தது. அதைச் சீரமைக்க வேண்டும் என்று கடந்த 17 ஆண்டுகாலமாக பல்வேறு பெரியாரியத் தோழர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அக் கோரிக்கையை ஏற்று படிப்பகத்தை வெகு சிறப்பாகச் சீரமைத்த தி.மு.க. அரசுக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோருக்கும் மனம் ��னிந்த நன்றிகள்!
இப்போது அதைவிட முக்கியமான ஒரு வேண்டுகோளை திராவிட மாடல் அரசுக்கு முன்வைக்கிறோம். முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும், திருச்சியின் அமைச்சர் பெருமக்களும் இக்கோரிக்கையை அவசியம் கவனத்தில் எடுத்துச் செயல்படுத்தி முடிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கையை முன்க்கிறோம்.
இந்திய வரலாற்றில் ஜாதி ஒழிப்புக்காக நடந்த மிகப் பெரிய வீரம்செறிந்த போராட்டம் 1957 நவம்பர் 26 ல் நடந்த இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் எரிப்புப் போராட்டம் ஆகும். அப்போரில் திருச்சி சிறைக்குள்ளேயே பட்டுக்கோட்டை இராமசாமி - மணல்மேடு வெள்ளைச்ச��மி ஆகிய தோழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களின் கல்லறை திருச்சி காவிரிக் கரையில் ஓயாமாரிச் சுடுகாட்டில் இன்றும் சிதைந்து கிடக்கிறது. 14.06.1958 ல் தோழர் பெரியாரால் வைக்கப்பட்ட கல்வெட்டைக்கூடத் தேடிக் கண்டுபிடித்து அந்த இடத்தில் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று முழங்கால் சேற்றில் இறங்கித்தான் வீரவணக்கநாள் உறுதிமொழியை எடுக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.
ஜாதி ��ழிப்புக்காக வீரமரணம் எய்திய ஜாதி ஒழிப்பு மாவீரர்களின் கல்லறையைச் சீரமைத்து அங்கு ஒரு நினைவகம் உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். சுடுகாட்டில் இடம் இல்லாவிட்டால், அந்தக் கல்லறையை முடிந்த அளவு சீரமைத்துவிட்டு, திருச்சியில் ஏதேனும் ஒரு இடத்தில் இரு போராளிகளுக்கும் ஒரு நினைவு இல்லம் - நூலகம் உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
@Dravidarthalam
@arivalayam @dmk_youthwing
@Udhaystalin
#KNNehru
@Anbil_Mahesh
@InigoIrudayaraj
‘பொதுச் சமையலறைகள் உருவாகட்டும்! வீட்டுக்கொரு சமையலறை எனும் முறை ஒழியட்டும்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து திராவிடர் தளம் நடத்திய 'சமையலறை உடைப்புப் போராட்டம்.'
தோழர் பெரியாரின் கனவை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு, கலைஞர் பொதுச் சமையலறைகளை உருவாக்க வேண்டும்!
@mkstalin@Udhaystalin
முதற்கட்டமாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் "கலைஞர் பொது சமையலறைகள்! - சமை���லறை உடைப்புப் போராட்டத்தில் திராவிடர் தளம் கோரிக்கை!
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய தளங்களில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு சட்டமன்றத் தொடரிலும், ஒவ்வொரு முற்போக்குத் திட்டங்களை அறிவிக்கிறது. இன்னும் பலவற்றைச் சாதிக்கத் தயாரா�� உள்ளது. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற் கான சமுதாயச் சூழலை உருவாக்குவதே, இன்றைய சமுதாய இயக்கங்களின் முக்கியக் கடமை. அதை திராவிடர் தளம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அதன் ஒரு வடிவம் தான் இன்றைய ‘சமையல் உடைப்புப் போராட்டம்.’
பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் 'திராவிடர் தளம்' பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 'சமையலறை உடைப்புப் போராட்ட'த்தை நடத்துவது என்றும் அறிவித்தது. அதற்காக கடந்த 2023 செப்டம்பர் முதல் 2025 மே 1 வரை பல வடிவங்களில் தொடர் பிரச்சாரங்களை நடத்தியது.
அந்தக் கோரிக்கைகளில் சில தமிழ்நாட்டு அரசின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்களிலும் சில அறிவிப்புகள் வழியாகவும் செயலுக்கு வந்தன. அதாவது,
��� விஸ்வகர்ம யோஜனா திட்டத்திற்கு எதிராக ‘கலைஞர் கைவினைத் திட்டம்.’
• பணிபுரியும் பெண்களுக்காக 17 சிப்காட் வளாகங்களில் ‘குழந்தைகள் காப்பகத் திட்டம்.’
• முதியோர்களைப் பராமரிக்க ‘அன்புச்சோலை’கள் திட்டம்.
• தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் இரண்டு ‘முதியோர் இல்லங்கள்.’
• உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் பட்டியல் ஜாதி மக்களுக்கும் உரிமை வழங்கும் ‘தாட்கோ வணிக வளாகத் திட்டம்.’
• பட்டியல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளை காலனி என்று ஒதுக்குவதைத் தடுக்கும் அறிவிப்பு.
இவை அனைத்தும் திராவிடர் தளம் எழுப்பிய கோரிக்கைகள். எங்களைப் போல, மேலும் சில இயக்கங்களும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
இருப்பினும், பாலின சமத்துவப் பார்வையில், முக்கியக் கோரிக்கையான ‘கலைஞர் பொதுச் சமையலறை’ போன்ற சில முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘பொதுச் சமையலறைகள் உருவாகட்டும்! வீட்டுக்கொரு சமையலறை எனும் முறை ஒழியட்டும்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து மே 1 ஆம் தேதி, திருப்பூர் மாநகர���ட்சி அலுவலகம் முன்பாக ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ நடத்தத் திட்டமிடப்பட்டது.
பொது இடத்தில் சமையலறை போன்ற ஒரு வடிவத்தை உடைப்பது சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாறும் எனக்கூறி, சமையலறையை உடைப்பதற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது.
எனவே, தோழர்கள் அவரவர் வீடுகளில், அவரவர் பணத்தைக் கொண்டு அவரவரது எண்ணத்தின் அடிப்படையில் அடுப்பங்கரையை உருவா���்கினோம். ��ந்த வடிவத்தை, இன்று (01.05.2025) காலை அனைவரும் தங்களது வீடுகளில் உடைத்தெறிந்தனர். அதன் பிறகு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் சேவூர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையலறைகளை உடைத்தெறிந்த பெருந்துறை பரிமளா, புவனா, அவிநாசி திவ்யா, பெதப்பம்பட்���ி கவிதா, பல்லடம் தீபா, தாமரை, சுமதி, ரேவதி, கௌரி ஆகிய தோழர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் யாழ்.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் இல.அங்கக்குமார், மாவட்டப் பொறுப்பாளர் அகிலன், மாஸ்கோ நகர் இரமேஷ், ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் அர.விடுதலைச்செல்வன், தமிழ்ப்புலிகள் கட்���ியின் பொதுச்செயலாளர் தோழர் இளவேனில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர் தோழர் ஜெய்.அப்துல்லா, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் தோழர் பாரதி சுப்பராயன், சாக்கிய அருந்ததியர் ச���்கப் பொறுப்பாளர் தோழர் தம்பி, மற்றும் காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள்.
திராவிடர் தளம் தோழர்கள் திருப்பூர் பாலு, சண்முகம், பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், பெருந்துறை செந்தில் ஆகிய தோழர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு ஊரிலும் சேரிகள், காலனிகள், ஊர் – சேரி எதுவாக இருந்தால��ம், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சமையலறை, ஒவ்வொரு சமையலறையிலும் மனைவி, மகள், சகோதரி போன்ற யாரோ ஒரு பெண் சமையலறை அடிமையாக இருப்பது என்ற இந்த சமுதாய அமைப்பு ஒழியும் வரை சமையலறை உடைப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும். இன்று ஒரு தொடக்கம்.
-@Dravidarthalam
Dravidar Thalam organized the "Demolish Kitchen" protest in Tituppur on International Labour Day.
As long as each caste has its village, every village has segregated colonies, and
#DemolishKitchen#DravidarThalam
முதற்கட்டமாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் "கலைஞர் பொது சமையலறைகள்! - சமையலறை உடைப்புப் போராட்டத்தில் திராவிடர் தளம் கோரிக்கை!
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய தளங்களில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு சட்டமன்றத் தொடரிலும், ஒவ்வொரு முற்போக்குத் திட்டங்களை அறிவிக்கிறது. இன்னும் பலவற்றைச் சாதிக்கத் தயாராக உள்ளது. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற் கான சமுதாயச் சூழலை உருவாக்குவதே, இன்றைய சமுதாய இயக்கங்களின் முக்கியக் கடமை. அதை திராவிடர் தளம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அதன் ஒரு வடிவம் தான் இன்றைய ‘சமையல் உடைப்புப் போராட்டம்.’
பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிய, மாந���ல அரசுகளுக்கும், மக்களுக்கும் 'திராவிடர் தளம்' பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 'சமையலறை உடைப்புப் போராட்ட'த்தை நடத்துவது என்றும் அறிவித்தது. அதற்காக கடந்த 2023 செப்டம்பர் முதல் 2025 மே 1 வரை பல வடிவங்களில் தொடர் பிரச்சாரங்களை நடத்தியது.
அந்தக் கோரிக்கைகளில் சில தமிழ்நாட்டு அரசின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்��ு பட்ஜெட்களிலும் சில அறிவிப்புகள் வழியாகவும் செயலுக்கு வந்தன. அதாவது,
• விஸ்வகர்ம யோஜனா திட்டத்திற்கு எதிராக ‘கலைஞர் கைவினைத் திட்டம்.’
• பணிபுரியும் பெண்களுக்காக 17 சிப்காட் வளாகங்களில் ‘குழந்தைகள் காப்பகத் திட்டம்.’
• முதியோர்களைப் பராமரிக்க ‘அன்புச்சோலை’கள் திட்டம்.
• தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் இரண்டு ‘முதியோர் இல்லங்கள்.’
• உள��ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் பட்டியல் ஜாதி மக்களுக்கும் உரிமை வழங்கும் ‘தாட்கோ வணிக வளாகத் திட்டம்.’
• பட்டியல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளை காலனி என்று ஒதுக்குவதைத் தடுக்கும் அறிவிப்பு.
இவை அனைத்தும் திராவிடர் தளம் எழுப்பிய கோரிக்கைகள். எங்களைப் போல, மேலும் சில இயக்கங்களும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
இருப்பினும், பாலின சமத்துவப் பார்வையில், முக்கியக் கோரிக்கையான ‘கலைஞர் பொதுச் சமையலறை’ போன்ற சில முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘பொதுச் சமையலறைகள் உருவாகட்டும்! வீட்டுக்கொரு சமையலறை எனும் முறை ஒழியட்டும்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து மே 1 ஆம் தேதி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ நடத்தத் திட்டமிடப்பட்டது.
பொது இடத்தில் சமையலறை போன்ற ஒரு வட��வத்தை உடைப்பது சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாறும் எனக்கூறி, சமையலறையை உடைப்பதற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது.
எனவே, தோழர்கள் அவரவர் வீடுகளில், அவரவர் பணத்தைக் கொண்டு அவரவரது எண்ணத்தின் அடிப்படையில் அடுப்பங்கரையை உருவாக்கினோம். அந்த வடிவத்தை, இன்று (01.05.2025) காலை அனைவரும் தங்களது வீடுகளில் உடைத்தெறிந்தனர். அதன் பிறகு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் சேவூர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையலறைகளை உடைத்தெறிந்த பெருந்துறை பரிமளா, புவனா, அவிநாசி திவ்யா, பெதப்பம்பட்டி கவிதா, பல்லடம் தீபா, தாமரை, சுமதி, ரேவதி, கௌரி ஆகிய தோழர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற���றனர்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் யாழ்.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் இல.அங்கக்குமார், மாவட்டப் பொறுப்பாளர் அகிலன், மாஸ்கோ நகர் இரமேஷ், ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் அர.விடுதலைச்செல்வன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் இளவேனில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர் தோழர் ஜெய்.அப்துல்லா, ந��ீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் தோழர் பாரதி சுப்பராயன், சாக்கிய அருந்ததியர் சங்கப் பொறுப்பாளர் தோழர் தம்பி, மற்றும் காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள்.
திராவிடர் தளம் தோழர்கள் திருப்பூர் பாலு, சண்முகம், பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், பெருந்துறை செந்தில் ஆகிய தோழர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஒவ்வொரு ஜாதிக்க���ம் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு ஊரிலும் சேரிகள், காலனிகள், ஊர் – சேரி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சமையலறை, ஒவ்வொரு சமையலறையிலும் மனைவி, மகள், சகோதரி போன்ற யாரோ ஒரு பெண் சமையலறை அடிமையாக இருப்பது என்ற இந்த சமுதாய அமைப்பு ஒழியும் வரை சமையலறை உடைப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும். இன்று ஒரு தொடக்கம்.
-@Dravidarthalam
பெரியாரின் சுயமரியாதையையும், அண்ணாவின் சுயநிர்ணய உரிமையையும், அம்பேத்கரின் அரசியல் சட்ட உரிமையையும் துணையாகக் கொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய ஆரிய எதிர்ப்புப் போரில் மற்றுமொரு வெற்றி!
அண்ணாமலை பி.ஜே.பி.யின் தலைவரான போது, "தி.மு.க. வுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது" என்றார்கள். ஆர்.என்.ரவி ஆளுநரான போது, "தி.மு.க.அரசுக்கு முடிவுரை எழுதப் போகிறார்" என்றார்கள். ஆனால் இன்று அந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். தயாரிப்புப் போலீசுகளும் அவரவர் பதவிகளையே தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பரிதாபமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
முன்னாள், இந்நாள் சினிமா இரசிகர் மன்றங்களுக்கும், பாலியல் குற்ற ரசிகர் மன்றங்களுக்கும் இது ஒரு பாடம். எவர் எவரோ வந்தார்கள், போனார்கள், போகிறார்கள், போவார்கள்...தி.மு.க. என்றும் தமிழ்நாட்டுக்கான உரிமைப் போரில் தொடர்ந்து களத்தில் நிற்கும்! வ��ல்லும்!
- @Dravidarthalam @SFDravidians
உதயநிதி ஸ்டாலின்: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரா? தி.மு.க. இளைஞரணிச் செயலாளரா? இரண்டும் இல்லை. திராவிடர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக��ே களமிறங்கி, அடித்து ஆடுகிறார். அவரது கொள்கைத் தெளிவுக்கும், எவ்விதத் தயக்கமும் இல்லாமல் அவற்றைப் பரப்பும் துணிவுக்கும் முதலில் நன்றியைத் தெரிவிப்போம்.
90 களில் திராவிடர் கழகம் வீதிநாடகம் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தது. தோழர்கள் தெற்குநத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன், பாப்பாநாடு பாஸ்கர் போன்ற பல தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்திய வீதி நாடகங்களில் என்னென்ன வசனங்கள��� பேசப்பட்டனவோ, அவை அப்பட���யே இந்த "அசுரகீதம்" நாடகத்திலும் இடம் பெற்றுள்ளன.
அந்த வீதிநாடகங்களின் வீச்சை நேரடியாகப் பார்த்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தி.மு.க. தலைமைக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறோம்.
"இந்த அசுரகீதத்தை அடிப்படையாக வைத்து மாவட்டத்துக்கு ஒரு வீதி நாடகக் குழுவை உருவாக்க வேண்டும். அவை ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டுகளிலும் அசுரகீதத்தை நடத்த வேண்டும்"
"பகல் நேரங்களில் வாய்ப்புள்ள கல்லூரி வாயில்களிலும் அவசியம் நடத்த வேண்டும். நாடகத்தின் இறுதியாக புதிய இளம்பேச்சாளர்கள் மட்டும் ஒரு 20 நிமிடம் உரையாற்ற வேண்டும்"
தேர்தல் வெற்றிக்கும் திராவிடர் இன விடியலுக்கும் அசுரகீதமும் ஒரு பெரும் கருவியாகப் பயன்படும். பயன்படுத்துவோம்!
- @Dravidarthalam @SFDravidians
https://t.co/9UJmZZDqSq
@dmk_youthwing @Udhaystalin