நாங்கெல்லாம் வேலை செய்யும் போது வேலை மேல வேலையா வந்து முடிக்க முடியாம அது பஞ்சாயத்து ஆகுறதத்தான் அழுத்தம்னு சொல்லுவோம்.
இப்ப வேலைக்கு வரவனுவ வேல சொன்னாலே அழுத்தம்னு இருக்காங்க. அப்புறம் என்னதாண்ட பண்ணுவீங்க.
@skpkaruna பொதுவா சாதிய உணர்வு ரொம்ப organized ஆ அதிகரிச்சுட்டு வருது. மதம்/பக்தி என்ற போர்வையில், இந்துத்துவா இடம் பிடிப்பதற்கு சாதிய உணர்வு உதவும்னு தோனுது. நீங்க எப்படி பார்க்குறீங்க சார்?
@SolitaryReaper_ ஒன்றின் ( நாடு, மதம், சாதி ) மீது அதீத பற்று கொண்டு பிறர் அனைவரையும் எதிரிகளாக நினைத்து வெறுத்து அழிக்க முயல்வதே பாசிசம்.
நமது மொழிப்பற்று மிகத் தீவிரமானதுதான். ஆனால் அது பாசிச வரையறைக்குள் வராது. தன் தொன்ம அடையாளங்களை பதட்டத்துடன் இறுகப் பற்றிக் கொள்ளும், ஆதி குடி நாம்.
| 2
இப்படி நாமும் நம் ஆன்மிக வேர்களை ( இயற்கை/சிறுதெய்வ வழிபாடு, ஆசீவகம்?,பெளத்தம்?) அறிய முயற்சிக்கலாம்.
ஆனால் வந்தேறி இந்து மதம், புராண புருடா கதைகள் வழியாக எல்லா தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் மேலும் லேபிள் ஒட்டிக் கொண்டு, பிரித்தறிய முடியாதளவு கலந்துள்ளது. நாமும் பக்திக் குருடர்கள்.
இந்து மதம் என்று லேபிள் ஒட்டப்பட்ட, தமிழ்ப் பண்பாட்டின் நாட்டார் தெய்வங்கள் & கோவில்கள் ஏராளம். அதை நம் மக்கள் உணர்ந்து
விழிப்புணர்வு பெற்றுவிட்டால் முருகன்,மதுரை மீனாட்சி, இருக்கன்குடி மாரி முதல் முனி, கருப்பசாமி, அய்யனார் வரையான நம் கடவுள்களை & கோவில்களை reclaim செய்யலாம்.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு peaked here. அதனால் விளைந்த திராவிட ஆட்சிகளின் பலனை அரை நூற்றாண்டாக அறுவடை செய்திருக்கிறோம். அரசியல் தெளிவு இல்லாத அல்லது இருந்து பின் இழக்கிற சமூகம் மெல்ல அழிவை நோக்கிச் செல்லும்.
அரசியல் பிழைத்த சமூகத்துக்கு மதம் கூற்றாகும்.
என் சுழல் அத்தியாயத்திற்கு
தேவையில்லாத எந்தத் தகவலையும்
நான் நுகர்வதேயில்லை
என் புரிதல் மெலிந்தால்
வருந்துவதில்லை
எவரேனும் புரிதல் ஏழ்மையிலிருந்தால்
அவர்களை எள்ளி நகையாடுவதில்லை
எப்படி யோசித்துப் பார்த்தாலும்
எந்த மாற்றமும் நிகழலவேயில்லை என் வழக்கங்களில்
இப்போதெல்லாம்
அளவாக முட்டாள்தனம்
பயில்கிறேன்
அதுவே நிம்மதிக்குப்
போதுமானதாக இருக்கிறது.
சாளரன்
08.06.2026
யாருக்கும் பாரமில்லாமல்
நகர்கிறேன்
ஆதலால் மனம் பறவை
கிளைகள் சபித்தாலும்
வானம் மௌனம் பேசினாலும்
நிழலை ஏந்த நிலம் மறுத்தாலும்
திசைகள் தெளிவானதால்
கடந்து விடுகிறேன்
பிரிவுகள் தற்காலிகம்
நிகழ்வதும் வாழ்வதும் தொடர் பயணம்.
சாளரன்
01.06.2026
என்ன பெரிதாக
செய்துவிடப்போகிறது
வாழ்வு
எதையாவது வலுக்கட்டாயமாக
கொடுக்கும்
எதையாவது அனுமதியின்றி
எடுத்துச் செல்லும்
அவ்வளவு தான்
ஒரு ஞாயிறு மதிய தேநீர்
மிடறுகளில் வாழ்வு
சிறிது மட்டுமல்ல
சிறிய சுழல் என்று புரியும்.
அறம் பேசிப்பேசியே ஒழுங்கீனங்களை மறைச்சிடலாம்.
வள்ளுவர் காலத்திலிருந்து இதே வழக்கம் தான். அடுத்தவன் மீது கல்ல வீசிட்டே இருக்கனும். அட எவ்வளவு நல்லா வீசுறான் இவன் கண்டிப்பா நல்லவனாத்தான் இருக்பான்னு சமூகம் நம்பிடும். பின்னாடி எல்லா நச்சுத்தன்மையும் ஒளிச்சு வச்சுக்கலாம்.
என் தன்மானத்தை அடகு வைத்து உழைத்துச் சலிப்பது மட்டுமே எனக்கு பிடிப்பதில்லை
மற்றபடி இந்த வாழ்வு தரும் சின்னச்சின்ன உணர்வுகளை அனுபவித்தபடியே தான் வாழ்கிறேன்
இன்றும் கூட கோவில் தூண்களை மிக நேர்த்தியாக கடந்து
யார் கண்ணிலும் படாமல் விழுந்து கிடந்தது வெயில்
சுற்றி வந்த குழந்தை குங்குமம் படிந்த கைகளை நீட்டியது
ஒளிந்திருந்த வெயில் அவள் கைகளில்
பறவையாக அமர்ந்து கொண்டது
வருடங்களாக விழுந்தே கிடக்கும் ஒளியை ஏந்திக்கொள்ள சிறு கரங்கள் இருக்குமாயின்
இந்த உயிரின் விழுதலும் இயற்கையன்றோ.
சாளரன்
24.03.2026
புகைப்படங்களில் சாதரண பெண்ணாகத்தான் தெரிகிறாள்
ஆனாலும்
கிறுக்குப் பிடிக்க
வைக்கிறாள்
ஓர் அரேபிய
கவிதையைப்போல
இடமிருந்து
இடையிலிருந்து வாசித்தேன்
கம்பன் மேல் சத்தியம்
அவள் கவிதையே தான்
கண்களே சாட்சியம்.
திங்கள் கிழமை என்பது ஒரு படிமம்.
வரிசையாக விடுமுறை நாட்களை அனுபவித்து விட்டு, அடுத்து வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துடன் விடியும், முதல் விஷ நாள் எதுவானாலும், அதன் பெயர் திங்கள் கிழமை.
யாருமில்லாத விடுமுறை
சாலையில் அந்த பூ மரம்
ஓவியமாக தெரிகிறது
நிழல் இடம் மாறிக்கொண்டே
இருக்கும் போது ஓவியத்திற்கு
உயிர் வந்தது
ஜோடிக் கிளிகள்
கிளைகளில் வந்தமர
தென்றல் தன்னை அறிமுகம்
செய்து கொண்டது
தார்சாலையின் அடியில்
வாழும் வேர்கள் அதிர்வுகளை
மறந்து பறவைகளுக்கு
வாழ்த்துச் செய்தி அனுப்பியது !
சாளரன்
21.12.2025