பொதுவாக ஒரு அதிகாரி அல்லது அரசியல் பிரமுகர் ஓர் இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ போய் அமர்வதையே கௌரவமாகக் கருதுவார்கள். "நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவார்கள். இது காலம் காலமாகத் தொடரும் ஒரு அதிகார வர்க்க மனோபாவம்.
ஆனால் தலைமை மருத்துவரின் இருக்கையில் அமராமல், அவருக்கு எதிரே இருக்கும் மக்கள் இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஆய்வு செய்த விதம் சாதாரணமானதல்ல. அது ஒரு அரசியல் புரட்சி!
நான் உங்களை மிரட்ட வரவில்லை, கேள்வி கேட்க வரவில்லை, உங்களோடு இணைந்து பணியாற்ற வந்திருக்கிறேன்" என்ற இணக்கமான சூழலை இந்த ஒரே ஒரு நகர்வு உருவாக்கிவிடுகிறது. எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தாமல், அவரோடு சமமாக அமர்ந்து பேசும் போதுதான் உண்மையான கள நிலவரமும், குறைகளும் வெளியே வரும் என்பதை உணர்ந்த மக்களின் முதல்வர் மனோபாவம் இது.
இதற்கு முன்பு எந்த முதல்வரும் இதைச் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் இப்படித்தான் எளிமையாக இருப்பார் எனப் படித்திருக்கிறேன்.
அப்படிப் பார்த்தால் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியலில் இது ஒரு வரலாற்றுப் படம், அரசு நிர்வாகம் எப்படி இணக்கமாக செயல்பட வேண்டும் என பிற அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஒரு பாடமும் கூட.
#CMOTamilNadu #cmvijay
நன்றி: ஹரிஹர சுதன் தங்கவேலு முகநூல் பதிவு
Hariharasuthan Thangavelu
முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் தன்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொண்டு பதவி ஏற்பது தான் இதனால் வரை சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு பரஸ்பர மரியாதை கூட செலுத்தாமல் பதவி ஏற்று கொண்டார். திமுகவின் இந்த மிகப்பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது இவர்களின் இந்த ஈகோ தான்.
நல்லா கேட்டுக்கோங்க டா..
கருணாநிதி மவனுங்களா👇
@arivalayam
திமுக தயவுல யாரும் இங்க இல்ல...🤣
நீங்க தான் கூட்டணி தயவுல விஜய்யை எப்டியாச்சு ஜெயிக்க கால்ல விழுந்திருக்கீங்க..🤡😁
(We are indipendent party)
வெற்றி... வெற்றி மட்டுமே நமது இலக்கு!
சொகுசான வாழ்க்கை, ஆடம்பரம் என அனைத்தையும் துறந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்க களம் கண்டுள்ளார் நம் தலைவன்.
வலிகள், கண்ணீர், தடைகள், அவதூறுகள் என அத்தனையையும் கடந்து நமக்காக நிற்கும் அவரை நாம் கைவிட்டு விடக்கூடாது. 🤝
நம் தலைவனின் கரத்தை வலுப்படுத்துவோம். உங்கள் ஜனநாயக கடமையை சரியாக ஆற்றுங்கள்.
நல்லதே நடக்கும், வெற்றி நமதே! 🙏
#WeTrustVIJAY
இன்றைய தினம் என்ன மாதிரி பேச்சுத் தலைவா 🔥.
1.சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை.
2. பாஜக மற்றும் பலருக்கு சவுக்கடிகள்.
3. திமுகவுக்கு மறக்க முடியாத பதிலடிகள்.
4. ஒரு நல்லாட்சி கான அனைத்து அறிகுறிகளும் உருவாக்கம்...
Feel complete Thalaiva ✅.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,
அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.
நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.
இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை
‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..
என்னடா நடக்குது இங்க? OMG..even PM கூட இப்பிடி ஒரு protection என் lifela பாத்தது இல்லடா…🔥🔥🔥 தலைவர் விஜய் CM ஆகணும்னு காவல் துறையே முடிவு பண்ணிடுச்சு.🔥🔥🔥😡
ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கப்போவது நம் தலைமுறைக்கான தேர்தல்! நமக்கான தேர்தல்!
மாற்றத்திற்கான 'விசில்' சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும்!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026