தமிழ்நாட்டு அரசியலின் மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரி ஒன்று சொல்லவா?
இனி இடதுசாரி கட்சிகள் என்னும் கட்சிகளே தமிழ்நாட்டில் இருக்கப்போவது இல்லை. விசிக, பாமக இரண்டுமே ஒரு ஜாதி கட்சிகள் தான். உள்ளே வேண்டுமானால் கொஞ்ச பேரை tokenism இக்கு வைத்து கொள்வார்கள்.
ஆனால் விசிகவின் வாக்குவங்கி முழுக்க தவெகவில் கரையும். ஒரே சமுதாயத்தை சார்ந்த 6 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருப்பதால் அதன் மீதும் ஒரு ஜாதி பிரதிநித்துவம் என்று polarization நடக்கும்.
பாமக பிழைக்கும் என்றைக்கும். இரண்டு கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்க அளவில் சுருங்கி போவார்கள்.
இஸ்லாமிய கட்சிகளில் எஸ்டிபிஐ மட்டுமே தப்பித்து பிழைக்கும். அதற்கு ஒரே காரணம் அதன் யூத் பேஸ்.
இனி தமிழ்நாட்டின் லெஃப்ட் டு சென்டர் என்பதும் இருக்காது. சென்டர் டு ரைட் விங் அல்லது extreme ரைட் விங் என்பது மட்டுமே இருக்கும். அதில் யார் எந்த ரோலை எடுப்பார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.
சரி அந்த 5 லட்சம் கைய்யெழுத்தை யார் போய் வாங்குவது ??
ஒரு தொகுதிக்கு 2-5 lakh voters இருக்காங்க. அந்த மக்கள் கிட்ட பேசி, அவர்கள் தேவையை கேட்டு அரசிடம் கோரிக்கையாக வைத்து விவாதிக்க தான் MLA-ன்னு ஒருத்தரை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்புறாங்க.
ஒரு MLA-வோட குறைந்தபட்ச வேலையே அது தான். நீ வீட்ல வெட்டியா உக்கந்திருப்ப. உன் வேலையையும் சேர்த்து மக்கள் செய்யணுமா ? என்னடா கேனத்தனமான ஒரு வாக்குறுதி இது. மக்கள் எதுக்குடா 5 லட்சம் பேர் கிட்ட பேசி கையெழுத்து வாங்கி அதை சட்டமன்றத்துக்கு அனுப்பணும் ?? அப்ப நீ எதுக்கு இருக்க ? MLAs எதுக்கு இருக்காங்க ?
பேசாம https://t.co/jMP6qXvR4J வச்சி ஆட்சி நடத்துறீங்களா ராசா ?? @TVKVijayHQ இன்னும் சுலபமா இருக்கும்.
பரப்புரையை ரத்து பண்றதுக்கு புதுசு புதுசா காரணங்கள் தேடுறதுலயே இவன் பாதி நேரத்தைச் செலவு பண்றான்😂😂😂
இவனுக்குப் பேரு "தளபதி" இல்ல, 'தப்பியோடி'னு தான் வைக்கணும். 🤣🤣🤣
“விஜயை தனியாக சந்தித்து, நீங்க கட்சி ஆரம்பிங்க” என சொன்னதே மோடி தான் என வலதுசாரி நபர் குமார் ஒரு வாக்குமூலம் கொடுக்கிறார்.
அருகிலேயே அமர்ந்து இருக்கும் தவெக காரர் எதிர்ப்பே தெரிவிக்காமல் உம் என உக்காந்து இருக்கும் அற்புத காட்சி…
விஜய் உருப்படியா ஒரு காரியம் பண்ணிருக்கான்...
திமுகவை எதிர்க்குறேனு நினைச்சி!
பழைய திமுக,புது திமுகனு மொத்த பேரையும் உசுப்பி விட்டான்..
உடன் பிறப்புகள் Social media & களம்னு வெறித்தனமா களமாட ஆரம்பிச்சிட்டாங்க..
#திமுக 🖤❤️
'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.
60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் ஒன்றிய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.
'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.
'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது.
ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்.
#AloorShanavas #VCK
#Congress #RahulGandhi