கடை திறந்து பலகையை தூக்கி வைக்கும்போதே ஒரு பெண் உள்ளே வந்தாள்.
கையில் ஒரு பத்து ரூபாய் தாள்.
"ஐயா, இந்தாங்க... உங்க பணம்" என்றாள் மெதுவாக.
கடைக்காரர் புரியாமல் பார்தார். "நான் எப்போ உனக்கு பணம் கொடுத்தேன் தாயி?"
"நேத்து மாலை. நான் 70 ரூபாய் சாமான் வாங்கினேன். 100 ரூபாய் கொடுத்தேன். நீங்க 30 ரூபாய்கு பதில் 40 ரூபாய் திருப்பி கொடுத்துட்டீங்க. தெரியாம நடந்த தப்பு தான். ஆனா அது உங்க பணம்."
சொல்லிட்டு அந்த பத்து ரூபாயை நீட்டினாள்.
கடைக்காரர் அந்த தாளை வாங்கி நெற்றியில் வைத்து கல்லாவில் வைத்தார். பிறகு கேட்டார்,
"சரி... வாங்கும்போது 5 ரூபாய்கு கூட பேரம் பேசுற நீ, இப்போ 10 ரூபாய்கு 7 கிலோமீட்டர் தூரம் வந்திருக்கியே? ஏன்?"
அவள் சிரித்தாள். "பேரம் பேசுறது என் உரிமை ஐயா. ஆனா விலை முடிஞ்ச பிறகு குறைச்சு கொடுக்கிறது பாவம். என் மனசாட்சி அதுக்கு சம்மதிக்காது."
"நேத்து ராத்திரியே வந்தேன். கடை மூடிட்டீங்க. அதான் இன்னிக்கு மறுபடி வந்தேன். மனசு லேசா இருந்தா தானே தூக்கம் வரும்?"
கடைக்காரருக்கு வாயடைத்துப் போனது. "எங்க இருக்கே தாயி?"
"செக்டார் 8 ஐயா."
7 கிலோமீட்டர். இரண்டாவது முறையா வந்திருக்கா. ஒரு பத்து ரூபாய்காக.
அவள் கிளம்பும்போது சொன்னாள்,
"என் கணவர் இல்லை ஐயா. போகும்போது ஒரே ஒரு வார்தை சொல்லிட்டு போனார் - 'பிறருக்கு சொந்தமான ஒரு பைசா கூட தொடாதே. மேலே ஒருத்தன் இருக்கான். அவன் கணக்கு கேட்டா, அந்த தண்டனை நம்ம புள்ளைங்களை பாதிக்கும்.'"
அந்த வார்தை கடைக்காரரை உலுக்கியது.
---
உடனே அவர் கல்லாவில் இருந்து 300 ரூபாய் எடுத்தார். ஸ்கூட்டரை உருட்டினார்.
பக்கத்து கடை பிரகாஷ் கிட்ட போய் நீட்டினார்.
"இந்தா... நேத்து நீங்க சாமான் வாங்கும்போது நான் 300 ரூபாய் அதிகமா வாங்கிட்டேன்."
பிரகாஷ் சிரித்தார். "இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம்? நான் வரும்போது கொடுத்திருக்கலாமே."
"நீங்க வரதுக்குள்ள நான் செத்துப் போனா? மேலே இருக்கிறவன் கணக்கு கேட்டா நான் என்ன சொல்வேன்? அந்த பாவம் என் புள்ளைங்களை சேருமே."
சொல்லிட்டு கிளம்பிட்டார்.
ஆனா பிரகாஷுக்கு தூக்கம் போனது.
---
10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நண்பன் கிட்ட 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மறுநாளே அவன் இறந்துட்டான். குடும்பத்துக்கு தெரியாது. யாரும் கேட்கலை.
பேராசை மனசை மறைச்சது. இன்னிக்கு வரை அந்த பணம் அவர் கிட்டதான் இருந்தது.
ஆனா அந்த நண்பனோட மனைவி... இன்னிக்கும் வேலைக்காரியா வேலை பார்து புள்ளைங்களை வளர்கிறா.
"மேலே இருக்கிறவன் கணக்கு கேட்டா?" - கடைக்காரரின் வார்தை காதுல ஒலிச்சது.
மூணாவது நாள் பிரகாஷ் வங்கிக்கு போனார். 13 லட்சம் எடுத்தார். வட்டியோடு.
அந்த விதவையோட வீட்டு வாசல்ல போய் காலில் விழுந்தார்.
"என்னை மன்னிச்சிடும்மா" என்று அழுதார்.
13 லட்சம் பார்த அவள் கண்ணீர் விட்டாள். ஆசீர்வதித்தாள்.
ஆச்சரியம் என்ன தெரியுமா?
அந்த விதவைதான்... 10 ரூபாயை திருப்பி கொடுக்க 7 கிலோமீட்டர் இரண்டு முறை நடந்து வந்த அந்த பெண்.
---
*நீதி:*
நேர்மை ஒருவேளை உன்னை சோதிக்கலாம். கடவுள் தள்ளிப்போடலாம்.
ஆனா கைவிட மாட்டார்.
ஒரு பத்து ரூபாயின் நேர்மை, 13 லட்சத்தின் சுமையை இறக்கியது.
மேலே ஒருத்தன் இருக்கான். அவன் கணக்கு தப்பாது.
நீ நேர்மையா இரு. மிச்சத்தை அவன் பார்துப்பான் 🙏
*படித்ததில் பிடித்தது*
இது போன்ற பயணத்தை நினைத்துப் பார்க்க முடியுமா?
வேலையில் இருந்த போதே, காரில் பயணம் செய்வது என்றால் என்னுடைய நண்பர் அனந்தபத்மநாபாவிற்கு அலாதி ஆசை (Self Driving) – கார் ஓட்டுவதில் அவ்வளவு ஆர்வம் (வெறி) உள்ள ஒரு நபரை இதுநாள் வரை நான் பார்த்ததில்லை – ரிட்டயர் ஆகும் முன்பு பழைய காரை விற்றுவிட்டு, அவருக்கு மிகவும் பிடித்தமான கார் ஒன்றை வாங்கினார்
போனவாரம், பெங்களூரில் ஒரு விவரம் தேவையாயிருந்தது – சரி அனந்திடம் கேட்போம் என்றபோது இப்போது தான் மும்பையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் போய் கொண்டிருக்கிறேன் என்றார் – எந்த டிரையினில் என்ற போது காரில் என்று சொன்னார்
அவர் அடுத்து சொன்னது தான் அதிர்ச்சியான விஷயம் – 54 நாட்களாக காரில் அவரும், அவர் மனைவியும், எல்லா ஊர்களுக்கும் போய் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் – நான் ஃபோனை வைத்து விட்டு, அப்புறம் கூப்பிடுகிறேன் என்றேன்
நேற்று அவருக்கு ஃபோன் பண்ணி விலாவாரியாகப் பேசியபோது அவர் சொன்னது:
ரிட்டயர் ஆன பின் இது போன்ற ஒரு Trip போக வேண்டும் என்று அவர் ரொம்ப நாட்களாக சொல்லி வந்த நிலையில், அவருடைய மனைவிதான் அதை திடீரென்று நினைவு படுத்தியிருக்கிறார்
மகளுக்கு திருமணம் ஆகி இப்போது மகளும் எல்லோரும் இருக்கும் நாட்டில் இருக்கிறார் (அதான் USல ஏதோ ஒரு ஊரில்)
இவரும் மனைவியும் மட்டுமே வீட்டில் – ஒரு நல்ல நாளில் பயணத்தை ஆரம்பித்து, பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மங்களூர், சிருங்கேரி என்று போய், அங்கிருந்து ராஜஸ்தான் பயணம் – ஜெய்ப்பூர், உதய்பூரைப் பார்த்தபின், கயா, ராமர் கோவில், பின் அங்கிருந்து குஜராத் – அங்கு பார்க்கவேண்டிய இடங்களை பார்த்தாகிவிட்டது.
பின் ஒரு வாரம் முன்பு மும்பாய், பின் அங்கிருந்து கர்நாடகாவில் பார்க்காத ஊர்களைப் பார்த்துவிட்டு, பெங்களூரில் வீட்டிற்கு – நான் சுருக்கமாகச் சொல்லிவிட்டாலும், அவர் மனப்பாடமாகச் சொன்னது ஒரு பெரிய லிஸ்ட் – பார்த்த இடங்கள் மற்றும் அனுபவங்களை எழுதி வைத்திருக்கிறார் - லிஸ்டை வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்
எனக்கு கேட்கும் போதே தலை சுற்றியது – ஒரே ஒரு நாள் மைலாப்பூருக்குப் போய்விட்டு வந்தாலே, அங்கு நடக்கும் மெட்ரோ வேலைகளைப் பார்த்தால் மனது டயர்டாகி விடுகிறது – இவர் சொன்ன லிஸ்ட் மிகப் பெரிது
என்னுடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டேன்
மொத்தம் 54 நாட்கள் – 11740 கிமீ
இவரும், இவர் மனைவியும் மட்டுமே – இரண்டு பேருக்கும் காரில் ஊரைச் சுற்றுவதில் பிரியம் என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது – புறப்படும் முன்பு எங்கிருந்து ஆரம்பித்து எங்கெல்லாம் போகவேண்டும் – எங்கு தங்க வேண்டும் என்று லிஸ்ட் ரெடி பண்ணியிருக்கிறார்
காரின் முன் சீட்டுக்களில் இவர்கள் இருவரும்
தினமும் 6 மணியுடன் டிரைவிங் க்ளோஸ்ட் – ஒரு நல்ல லாட்ஜில் தங்கல் – லாட்ஜில் உள்ள ஸாப்ட் பெட்டில் படுத்தால் தூக்கம் வராது என்பதால் தலைகாணி, பெட் ஷீட், Bed Spread பின் சீட்டில் – தரையில் தான் படுத்து தூங்கியிருக்கிறார்கள் – அதுவே பழக்கம் என்றார்
எடுத்துப் போனது 7 நாளுக்கான டிரஸ் – 4வது அல்லது 5 வது நாள் டிரஸ் முடித்தவுடன், ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கும் போது, அங்கு டிரை கிளீனிங் கொடுத்து, அழுக்கான டிரஸ்களை ரெடி பண்ணியிருக்கிறார்கள் – அவ்வாறு தங்கும் இடங்களில் பார்க்கக் கூடிய வகையில் நிறைய இடங்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் – ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தங்குவதற்கு ரூமிற்கு சிரமப்பட்டிருக்கிறார்கள் – கொஞ்ச அலைச்சலில் கிடைத்ததாம்
மனைவி கேட்ட, மற்றும் விருப்பப் பட்ட பொருட்களை எல்லாவற்றையும் போகும் இடங்களில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் – அவை டிக்கியில்
வண்டியை 20 நாளுக்கு ஒரு முறை எந்த ஊரில் 2 நாள் தங்க நினைக்கிறாரோ அங்கே சர்வீஸூக்கும் கொடுத்திருக்கிறார்
போகும் போது, அவசரத் தேவைக்கான மாத்திரைகளை (தலைவலி, ஜலதோஷம், மற்றபிற இத்யாதிகள்) எடுத்துப் போயிருக்கிறார்கள்
எந்த ஒரு வெளி இடத்திலும் கொடுக்கபட்ட தண்ணீரைக் குடிக்கவில்லை – இவர்கள் வாங்கி வைத்திருந்த பாட்டில் தண்ணீர் மட்டுமே
இரண்டு பேருக்குமே ரைஸ்-சப்பாத்தி, Dal, தயிர் சாதம் போன்ற ஐட்டங்கள் மட்டுமே பிடிக்கும் – வெஜிடேரியன் – எந்த ஒரு புது உணவையும் டிரை பண்ணிப் பார்க்கவில்லை – இதனால் வயிறு மக்கர் பண்ணவில்லை என்றார் – Fruits/Dry Fruits எப்போதுமே காரில் வைத்திருந்திருக்கிறார்கள்
ஒரே ஒரு முறை மனைவிக்கு cold வந்து, 1 நாள் லாட்ஜில் ரெஸ்ட் எடுத்தபின் மீண்டும் பயணத்தை தொடர்ந்ததாகச் சொன்னார்
முதுகு வலியைப் பற்றி கேட்டபோது, soft pillows இருந்ததால், எங்களுக்கு அந்தப் பிரச்சனையே வரவில்லை என்றார்
வண்டி மக்கர் பண்ணவில்லையா என்றபோது, அது போல் எதுவும் நடக்கவில்லை – தினசரி 9 மணியில் இருந்து 6 மணி வரையில் மட்டுமே ஓட்டுவதால் பிரச்சனை இல்லாது திரும்பி விட்டோம் – மனதில் அதற்கும் தயாராகத் தான் இருந்தேன் என்றார் (திரும்பப் போய்விடலாம் என்று மனதில் தோன்றினாலோ அல்லது வண்டியில் பெரிய பிரச்சனை என்றாலோ வண்டியை கன்டெயினரில் போட்டுவிட்டு, flightல் ஊர் திரும்புவதாக முடிவு பண்ணியிருந்தேன் என்றார்)
பஞ்சர் ஆனால் ஸ்டெப்னியை இந்த வயதிலும் மற்றவர்கள் தயவில்லாமல் அவரால் மாற்ற முடியும் என்பது எனக்குத் தெரியும்
கடைசிக் கேள்வியாக எத்தனை லட்சம் செலவானது என்றபோது, உங்களிடம் சொல்வதற்கென்ன என்று தொகையையும் சொன்னார் – அவருக்குச் சொந்தமான ancestral property ஒரு கிராமத்தில் இருந்தது என்றும் அதை விற்ற பணத்தின் ஒரு போர்ஷனில் இந்த டூரை முடித்தேன் என்றும் சொன்னார்
அவர் முக்கியமாகச் சொன்னது: நான் சேமித்த பணத்தை எதிர்பார்த்து மகள் இல்லை – இங்கு ஏடாகூடாமாக ஏதாவது நடந்து வீட்டை விற்கணும் என்றால் கூட அவர்கள் வருவார்களா என்பது சந்தேகமே – நாம் 30 ஆண்டுகளில் சம்பாதித்ததை அவர்கள் 5 வருடத்தில் சம்பாதித்து விடுகிறார்கள் – எனக்கோ, மனைவிக்கோ உடல்நிலை சரியில்லாது போனால், நான் டூருக்கு செலவழித்த தொகையை 4 நாளில் ஹாஸ்பிட்டல் காரன் பிடுங்கி விடுவான் – மனது இப்போது தயாராயிருந்ததால், இந்த டூர் நடந்தது என்றார்
எதிர்காலத்திற்கு என்று ஒரு தொகையை வைத்திருக்கிறேன் – அதைத் தொடமாட்டேன் – அதை விட்டுவிட்டு, மற்ற தொகைகளை செலவழிக்கும் மூடில் தான் இருக்கிறேன் என்றார்
கடைசியாகச் சொன்னது : இனி லாங்க் டூர் கிடையாது – ஒன்லி லோக்கல் டிரிப் தான் – முந்தாநாள் தான் மங்களூர் வரை போயிட்டு நேத்து திரும்ப வந்தேன் என்றார்
ஏதே!!! Mangalore-Bangalore லோக்கல் டிரிப்பா!!!!
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.
தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..💭
நற்காலை வணக்கம்
Arjun
என்ன படம்டா எப்பாஹ்…..
இறந்து போன காதலனை மறக்க முடியாமல் இருக்கும் நாயகிக்கு கட்டாயத்தின் பேரில் அவரது பெற்றோர்கள் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இந்நிலையில் திருமணமான இரண்டாவது நாளிலேயே நாயகனிடம் விவாகரத்து கேட்கிறாள் நாயகி.
"ஒரு வருடம் ஒன்றாக வாழ்க்கை நடத்திய பின்னர்தான் விவாகரத்து கிடைக்கும்" என்ற சூழலில் நாயகன் நாயகி இருவருக்குள்ளும் எப்படி காதல் மலர்ந்து இறுதியில் ஒன்று சேர்கிறார்கள் என்பதனை கவிதை போல திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
15-ஆகஸ்ட்-1986-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் "சந்திரகுமார்" என்ற நாயகன் கதாபாத்திரத்தில் மோகன் நடித்திருப்பார்.
"சந்திரகுமார்" கதாப்பாத்திரம் இடம்பெறும் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களாகட்டும் அவரின் நடவடிக்கைகளாகட்டும் ஆரம்பத்தில் இருந்தே நம்மை கவனிக்க வைத்திருக்கும்.
அதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சிகளையும் அதில் நாயகன் பேசும் வசனங்களையும் இப்போது பார்க்கலாம்.
''குழந்தை ஏன் அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா…
இந்த உலகத்துக்கு வர விருப்பம் இல்லைன்னு அழல…
வந்த இடம், மொழி, சூழல் எல்லாம் புதுசா இருக்குன்னு அழுது.
கிட்டத்தட்ட அதே மாதிரிதான் உன் நிலமையும்.
புது இடம், புரியாத மொழி, அறிமுகமில்லாத புருஷன்.
அந்த கஷ்டம் எனக்கு புரியுது.
அது தானா மறையுற வரைக்கும் நான் காத்திருக்க தயாரா இருக்கேன்''
என்று பொறுமையாக நாயகியிடம் பேசும் காட்சிகளாகட்டும்
''உனக்கு எல்லா சுதந்திரமும் இந்த வீட்ல இருக்கு.
எந்த விதத்துலயும் உன் வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்.
இந்த ஒரு வருஷம் உன் விருப்பம் போல இருக்கலாம்''
என்று பக்குவமாக சொல்லும் காட்சிகளாகட்டும்
''உன் அப்பா,அம்மாகிட்ட அன்பா மரியாதையா நடந்துக்க ஆசைதான்.
ஆனா ஒரு வருஷம் கழிச்சு நீ உன் வீட்டுக்குப் போகும் போது விவாகரத்துக்கு காரணம் நீ மட்டும் தான்னு நினைப்பாங்க.
இப்போ அப்படி ஒரு புருஷனோட வாழ்றதை விட தனியா வந்ததே நல்லதுன்னு உன்னை வரவேற்பாங்க''
என்று "ஜென்டில் மேன்" போல் நடந்து கொள்ளும் காட்சிகளாகட்டும்
எது நடந்தாலும் அது நாயகியின் எண்ணத்தின் படி நடக்கட்டும் என அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகி நிற்கும் காட்சிகளாகட்டும்
எல்லா தருணங்களிலும் நாயகியின் ஆசைகள், தவிப்புகள், சிக்கல்கள் போன்ற விஷயங்களை உளவியல் ரீதியாக புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் பொறுமையுடன் நடந்து இறுதியில் தன் மீது காதல் கொள்ள வைக்கும் "சந்திரகுமார்" கதாப்பாத்திரம் பல காட்சிகளில் என்னை வெகுவாக கவர்ந்தது….
சென்சார் போர்டையே திணறடித்த
கவிஞரின் வரிகள்…!
தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.
பாசமலர்.
இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.
முதல் இரவுக்கு முன்ப முன் ஒரு
தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.
பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.
மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.
திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது.
படித்ததில் பிடித்தது
நேத்திக்கு ஒரு பேய் படம் பார்க்க நைட் ஷோ போயிருந்தேன்.
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு....
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டரவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னார்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அது என் ஏரியாவுக்கு போற வண்டி மாதிரி தெரிந்தது...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
மெதுவாக வந்துகொண்டே இருந்தது.
பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். மூணாவது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஜர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேலை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு,
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு நாகூரு, வேளாங்கண்ணி, திருப்பதி எல்லாத்துக்குமே வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!"
ரொம்ப வெட்டியா இருந்த ன்னு வையி ஓரளவுக்கு சுமாரா பிரியாணி செய்ற ஒருத்தன புடி… இது வரைக்கும் எதுல குடுக்கலயோ அதுல ஒன்னு கோன் பிரியாணி, கப் பிரியாணி, கொட்டாங்கச்சி பிரியாணி ன்னு பேர் வச்சுக்க… ஒரு குட்டியானை எடுத்துக்க.. அந்த பேர் பிரிண்ட் அடிச்ச ஃப்ளக்ஸால டாப்ப கவர் பண்ணி சீரியல் லைட்டு போட்டு அண்ணா நகர் பக்கம் நிப்பாட்டிடு… முக்கியமா அதுக்கு முன்னாடி “அன்னைக்கு ஒரு நாள் எதேச்சையே அண்ணா நகர் பக்கம் போகும் போது… டேஸ்டு வேற லெவல்” னு இன்ஃப்ளூயன்ஸர்ஸ் வச்சி ரீல்ஸ் ரெடி பண்ணி வச்சிடு… அவ்ளோ தான்.., அடுத்த சனிக்கிழமை ஏன் எதுக்கு ன்னே தெரியாம ஒரு கூட்டம் க்யூ கட்டி நிக்கும்….
தூத்துக்குடியில் இருந்து
சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார். கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். "பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 4 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம். நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 4.00மணிக்கு எழுப்பி இறக்கி விட்டுவிடு. நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு. நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு" என்றாள்.
அவன் சொன்னான் " பாட்டி இதென்ன உதவி.. கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்" என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.
காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். "நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன்... முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே , இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே" என்று திட்டிக் கொண்டே இருந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்துசாத்து என்று சாத்தினார்கள். அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் கேட்டார்கள் "ஏன்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 4.00மணிக்கு தரதரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்...
😳😳😳😳