புரிதலிலும் புரிதல் தகப்பனை புரிந்துகொள்வது
யாருக்காக இவன் வாழ்கிறான் என்று எண்ணிய வாரிசுகளுக்கு காலம் கடந்துதான் உரைக்கிறது
என் தகப்பன் வாழ்வதே எனக்காக என்று
என் முதல் நாயகனே என் தகப்பனே🫂
-சால்ஸ் வில்சன் சா
2 Days, Endless Learning & One Unforgettable Compliment! 💯🌟
திண்டுக்கல் "சமூக ஆய்வகத் திட்டம்" நிகழ்வில் காட்சிக் கலைகள் (Visual Arts) வகுப்பு எடுத்த அனுபவம்.
தேவைக்காக பேசுபவனும்,
தேவையின்றி பேசுபவனும்
இருவரும் வேறு வேறானவர்கள்
இவர்கள் இருவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
எதை யாரிடம், எந்த நேரத்தில் என்ன பேசுவது என்றுதான்
இவர்கள் இருவரிடமும் குறைவாக பேசிப்பாருங்கள் விடை கிடைக்கும்
-சால்ஸ் வில்சன் சா
மானுடனை வெறுக்கிறேன்
கவலையுலர்ந்த கையும் வாயும்
இப்போது அதை எட்டிக் கூட பார்ப்பதே இல்லை எதை?
அழுகும் மானுடனைப் பார்த்து
அரக்கன் ஆகிறான்…
-சால்ஸ் வில்சன் சா
பத்து ரூபாயில் நேர்மை தேடும் சட்டம்
துகளளவு துரோகத்தை தூக்குமேடையில் ஏற்றும் தராசு
பேரண்டக் கொள்ளைக்குத் தன் தட்டுகளையே பரிசளிக்கிறது
அதிகாரத்தின் கண்கள் குருடல்ல
அது எளியோரின் சிறு
நாணயங்களை மட்டுமே கூர்ந்து பார்க்கும் நுண்ணோக்கி
இதுதான் மாற்றம் உங்கள் கவர்ச்சி மாற்றம்
வயிற்றுக்காக ஊமையாக நடித்த ஒருவன்
வயிறு நிறைத்தவுடன் குருடனாக நடிக்கிறான்
குருடனைப் பார்த்து மக்கள் கண்ணீர்
மக்கள் கண்ணீரைப் பார்த்து குருடன் எள்ளல் சிரிப்பு
-சால்ஸ் வில்சன் சா
துப்பாக்கி வைத்து குருவியைச் சுட்டவனுக்கு அரண்மனை காவலாளி பதவி
தேரை வைத்து மக்களை நசுக்கிக் கொன்றவனுக்கு தேசத்து ராஜா பதவி
போரை நிறுத்த தெரியாமல் வேடிக்கை பார்க்கும் முன்னாள் படைத் தளபதி அவருடன் பெரும் முதலாளிகளுடன்
பிச்சை எடுக்க காத்திருக்கும் மக்கள்
-சால்ஸ் வில்சன் சா
Announcement poster released
Production No#01
https://t.co/serwPJhSD9 Presents
Produced by
Salamon Elizabeth rani
#untitledproject
Written & Direction & Editing
@sa.salsh.vilson
Director of photography
@subhas_bharathi
Music
@shaamcs
Co-writer
@sendhil.fdl