வியட்நாம் நாட்டி��் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு விரைந்து அவர்களின் குடும்பத்தி���ரிடம் ஒப்படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்!
"சிகை கொற்றனை" அடுத்து "அளர் வைரதன்"
===
இரண்டு நாட்களுக்குமுன் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த மோதிரத்தில் ���ள்ள எழுத்துக்கள் ��மிழி எழுத்துக்கள்தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
---
" அளர் வைரதன் "
என்பதுதான் சரியான வாசிப்புமுறையாக இருக்கிறது.
ஏற்கனவே கரூரில் கிடைத்த மோதிரம் ஒன்றில் தமிழி எழுத்துப் பொறிப்பில் இருந்த பெயர் - #பேரஅவதன்.
இதே தாய்லாந்தில் கிடைத்த உரைகல் ஒன்றில் இருந்த தமிழி எழுத்துப்பொறிப்பில் இருந்த பெயர் -
#பெரும்பதன்கல்.
இந்த வரிசையில் இப்போது கிடைத்த மோதிரத்தில் உள்ள தமிழிப்பெயர் -
#அளர்வைரதன்.
தொடர்ந்து மீண்டெழும்
தமிழ் வரலாற்று பழமை.
#இந்தோனேசியா
#அளர்வைரதன்
#தமிழி
#தமிழர்வரலாறு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி, கணபதி புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலங்கோட்டை பக��தியில் இயங்கிவந்த அரசு மதுபானக்கடை (எண்-4801) பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் அதை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். நாம் தமிழர் கட்சியும் போராட்டத்தில் இணைந்து அம்மக்களுக்கு ஆதரவாக களத்தில் ��ின்றதோடு அரசு அதிகாரிகளுக்கு பலகட்ட மனுக்களையும் கோரிக்கைகளையும் அளித்திருந்தோம்.
தவெக அரசு அமைந்ததும் மூடப்போவதாக அறிவித்த 717 மதுக்கடைகள் பட்டியலிலும் இந்த கடை குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் தொடர் முயற்சிகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து இந்த அரசு மதுபானக்கடை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வை தருகிறது.
இந்த போராட்டம் வெற்றிபெற தொடர்ந்து களத்தில் உழைத்த, போராடிய ஊர்மக்கள், செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாற்று கட்சியினர், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தின் ஆரம்பகட்டம் முதல் ஒருங்கிணைத்து உறுதியாக வழிநடத்திய சமூக செயல்பாட்டாளர் ஐயா சுரேன் ஜோயல் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் @collectorkki , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @stalin_ips மற்றும் துறை��ார் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் போராட்டத்தால் வெல்ல முடியாத அதிகாரம் என்று எதுவும் இல்லை என்பதற்கான சான்றுகள் தான் இதுபோன்ற வெற்றிகள்.
@NaamTamilarOrg
த.வெ.க.அரசே ...! தமிழ் அழிப்பை கைவிடு
==========================================
தமிழ்க்கலை இலக்கியப் பேரவை கண்டனம்!
===========================================
உலக போதை எதிர்ப்பு நாளான 26 /06 /2026 அன்று தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது .அதற்கான விளம்பரங்களில் , பதாகைகளில், சீருடைகளில்,பரப்புரை பாடல் வரிகளில் ,முத்தாய்ப்பாய் முதல்வர் தன் கைப்பட எழுதிய வாசகங்களில் போதை ஒழிப்பை விடவும் ,தமிழ் ஒழிப்பு முதன்மையாக இருந்தது .
அதன் முதன்மை முழக்கமாக "ஸ்டார்ட் RUN ,ஸ்டாப் DRUGS "என தமிங்கிலத்தில் பரப்பப்பட்டது ."SAY NO TO DRUGS "என்பது அப்படியே ஆங்கிலத்தில் எல்லா இடங்களிலும் இருந்தது .இந்த ஓட்டத்தை ஒருங்கிணைத்த தமிழ்நாடு விள���யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லட்சினை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .எல்லா துறைக்கும் தமிழில் லட்சினை உள்ளது ,ஆனால் பயன்படுத்த மாட்டார்கள்.தொடங்கு,நிறுத்து,போதை ,ஓடு என நன்கு புழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளை ஏன் ஆங்கிலத்தில் திணிக்க வேண்டும் ?
பரப்புரை பாடல் வரிகளில் "தமிழினம் காக்க இயங்குதே ","மாபெரும் போரை தொடங்குதே " என்ற வரிகள் "THAMIZHINAM KAKKA IYANGUTHE " என்றும் "MAPERUM PORAI THODANGUTHE " என்றும் காட்சியில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது .தமிழை அழித்துவிட்டு, தமிழினத்தை எப்படி காப்பீர்கள் ? என்பது தெரியவில்லை .
முதல்வர் விஜய் ,ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்ற மேடையின் பதாகை தொடங்கி ,முதல்வர் அசைத்த கொடி வரை பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ,சில இடங்களில் தமிங்கிலத்திலும் இருந்தது .கையொப்பமிடும் பதாகையில் முதல்வர் விஜய் "START RUN ,STOP DRUGS " என்பதோடு "Sports -ah edu ,Drugs - ah vidu "என தன் பங்குக்கு தன் கைப்பட தமிழ் அழிப்பை செய்த��� கையொப்பமிட்டார் .
தவெக ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களிலேயே திமுக ,அதிமுக போலவே நாங்களும் இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என்றார்கள் .அந்த இருமொழிக் கொள்கைக்கு நேர்மையாக இருந்திருந்தால் கூட தமிழில் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும் .அதென்ன தொண்ணூறு விழுக்காடு ஆங்கிலம் , பத்து விழுக்காடு தமிங்கிலம். இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து நாம் விமர்சிக்கவில்லை .விஜய் அரசு பொறுப���பேற்றதிலிருந்து ,துறை வாரியாக தமிழக அரசின் செய்தி வெளியீட்டு துறையின்(இதுவும் TN DIPR என்றுதான் அவர்கள் பதிவுகளில் வருகிறது) அறிவிப்புகளை பாருங்கள் .குறிப்பாக சுற்றுலா துறை ,தொழித்துறையின் சிறு தொழில் பயிற்சிகள் படிப்புகள் பற்றிய அறிவிப்புகள் ,விளையாட்டுத் துறையின் பல அறிவிப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது .தமிழ் நாட்டுக்குள் ,தமிழர்களுக்கு போய் சேர வேண்டிய செய்திகள��� ஏன் ஆங்கிலத்தில் உள்ளது ?
இதே தமிழ் அழிப்பு வேலையை தான் திமுகவும் அதிமுகவும் கடந்த காலத்தில் செய்தன. கடந்த ஸ்டாலின் ஆட்சியில் HAPPY STREET என்ற பெயரில் தெரு நிகழ்ச்சிகளை பெரு நகரங்களில் நடத்தினார்கள் .ஒலி மாசு வேண்டா��் எனும் விழிப்புணர்வு நிகழ்வை ANTI HONGING எனும் பெயரிலும் ,போக்குவரத்து துறை சார்பில் ZERO IS GOOD என சென்னை முழுக்க விளம்பரம் செய்தார்கள்(விபத்தை குறைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு !) .கொளத்தூரில் ANITHA ACHIEVERS ACADEMY ஆரம்பித்தார் .இவை எதற்கும் தமிழ் வார்த்தைகள் போடவே இல்லை .
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் I LOVE AVADI ,I LOVE TRICHY ,I LOVE KOVAI
என பல லட்சம் செலவில் தற்சுட்டி மையங்கள் வைத்தார்கள் .அம்மா மினி கிளினிக் தொடங்கினார்கள் .எதற்கும் தமிழ் வார்த்தைகள் எழுதவில்லை .ஜெயலலிதா பெரும்பாலும் அரசு அறிவிப்புகளை ஆங்கிலத்திலேயே வெளியிட்டார் .அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழியாய் மாற்றினார் .தமிழ் வழிக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை ஆங்கில வழிக்கு மாற்றினார் .அதை திமுக எதிர்க்கவுமில்லை, பிறகு தன் ஆட்சியில் மாற்றவுமில்லை .
கலைஞர் ஆட்சியில் பேருந்துகளுக்கு Delux பஸ் ,Ultra delux பஸ் ,super delux பஸ்,point to point என எழுதினார்கள் .தமிழ் தேசிய பேரியக்கம் கோயம்பேட்டில் அந்த ஆங்கில எழுத்துக்கள��� அழித்து போராட்டம் நடத்திய பிறகு மிதவைப் பேருந்து ,தாழ் தளப் பேருந்து, இடை நில்லாப் பேருந்து என மாற்றினார்கள் .
உங்கள் ஆட்சி மாற்றத்திற்க்கான ஆட்சி என நொடிக்கொருமுறை ஊடகங்களில் பரப்பப்படுகிறது .தீவிர தமிழ் அழிப்பு தான் உங்கள் மாற்றமா ? உடனடியாக இத்தகைய தமிழ் அழிப்பு வேலைகளை கைவிடுங்கள் .எல்லா அறிவிப்புகளும் ,விளம்பரங்களும் பிறமொழிக் கலப்பில்லாமல் நல்ல தமிழில் வருவதை உறுத�� செய்யுங்கள் .
தமிழக ஆட்சியாளர்களே ,இந்தியை திணித்தால் மட்டுமல்ல ,ஆங்கிலத்தை திணித்தலும் தமிழ் அழியும் என்பதை உணருங்கள்.தமிழர்களே நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் ஒரு போதும் தமிழ் அழிப்பை ஆதரிக்காதீர் ,நியாயப்படுத்தாதீர் .வேர் அறுந்தால் மரம் விழும் .தமிழினத்தின் வேர் என்பது அதன் மொழிதான் ,மறவாதீர் .
முழுநிலவன்
பொதுச் செயலாளர்
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
@CMOTamilnadu
ஆதித்தமிழர் எழுச்சிநாள்
ஆனி 23 (07-07-2026)
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூக��ீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழி��்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
‘ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோ��்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. ��தன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீ��்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரம���ியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்க���ுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவ��, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள ��ேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தா��் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லையே. இந்த அரசு மக்களுக்கானதா எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்கானதா?
முழு காணொளி
https://t.co/17EF2XYQmt
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக IREL நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான 1144.06 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாகும் நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரச���ணை வெளியிட்டிருப்பது
1/3
@SeelanTamilan1 @NaamTamilarOrg
IREL நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டுக்கு த.வெ.க. அரசு அனுமதி நீட்டிப்பு அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
ஜூன் 11, 2021ல் 1144 ஹெக்டேரில் ஒதுக்கப்பட்ட இத்திட்���த்திற்கான இட அனுமதியின் காலக்கெடு 5 ஆண்டுகள் மட்டுமே. இது தற்பொழுது முடிவடையவிருந்த நிலையில், ஆளும் தவெக அரசு காலாவதியாகிப் போக இருந்த இந்த அனுமதியினை மேலும் ஓராண்டிற்குப் புதுப்பித்து இந்நாசகரத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
ஆனால், நவம்பர் 2024ல் தவெக கூட்டிய செயற்குழு கூட்டத்திலோ இத்திட்டத்தினைக் கைவிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் சொல்கிறோம் தவெகவிற்கும் வளப்பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் நலனிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று! பாஜக மட்டுமில்லை, தவெகவும் தமிழ்நாட்டிற்குத் தொடர்பற்றத் தேவையில்லாத சக்திதான்.
- வெண்ணிலா தாயுமானவன்
மாநிலச் செயலாளர்
சுற்றுச்சூழல் பாசறை
நாம்தமிழர் கட்சி.
@vennilaVT
தங்கள் உடலையும், உயிரையும் பொருட்படுத்தாது, இரவு - பகல் பாராது, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உலகம் முழுவதும் அரும்பாடாற்றும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவரும் மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள்; வணங்கத்தக்கவர்கள்!
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெ��ுமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
#DoctorsDay
அன்று எதிர்ப்பு... இன்று அனுமதி!
கன்னியாகுமரியில் 1144.06.18 ஹெக்டர் | பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான | நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இத்திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள ஒன்றிய │அரசின் ஐ.ஆர்.எல். (IREL) நிறுவனம், அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான தங்களின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை | செய்து அனுமதி அளிக்கப் பரிந்துரைக்குமாறு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. 3.11.2024 அன்று தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின��� இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு��்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்கள���ன் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீ��்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெர��ம் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கட���் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதார���்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி