தமிழினத்தின் பெரியார் தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதித்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
இன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167 ஆம் ஆண்டு பிறந்தநாளில் @stp_qatar சார்பாக அவரது பெரும்புகழ் போற்றுவோம்...!
@stp_valaikuda
இந்த மிக அவசியமான கோரிக்கையை மாண்புமிகு @CMOTamilnadu பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய அரசின் சார்பில் மாண்புமிகு @narendramodi தீ விபத்தில் இறந்த 12 குடும்பத்தினருக்கும் இழப்பீடாக நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் @stp_qatar கோரிக்கை விடுக்கிறோம்.
கத்தாரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழ்நாட்டை சேர்ந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும், தமிழ்நாடு அரசு ₹10 இலட்சம் நிதியுதவி, தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள @Seeman4TN அவர்களுக்கு @stp_qatar சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியலில் எளிமை, நேர்மை ஆகியவற்றை கடைபிடித்து மக்களுக்கான சேவையாக மட்டுமே அரசியலை செய்த தலைவர்களில் போற்றுதலுக்குரியவர் நம்முடைய தாத்தா #கக்கன் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவருக்கு @stp_qatar சார்பாக புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
@stp_valaikuda
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு @stp_qatar பாசறை முன்னெடுத்த #குருதிக்கொடை முகாமில் 108 நபர்கள் பதிவு செய்து 83 அலகுகள் குருதி கொடையாக கொடுக்கப்பட்டது.
இந்த கலந்து கொண்டு தங்களது குருதியை கொடையாக அளித்த #மனிதநேய_பண்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும்
@KKPNTK
@stp_qatar நடத்தும் #குருதிக்கொடை_முகாம்
நாள்: 28/05/2026
கிழமை: வியாழன்
நேரம்: மாலை 4 முதல்
இடம்: ஏசியன் திரையரங்கு 1
கத்தார் வாழ் உறவுகள் அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணியில் பங்கெடுத்து உயிர்மை நேயர்களாய் வாழ்ந்திட அன்புடன் அழைக்கிறோம்.
தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே!
தாய்மொழியை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே...
எனத் தாய்மொழிப் பற்றின் அவசியத்தை உணர்த்தியவர். தன் இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை புரட்சிக்கவி பாரதியார் மீதான பற்றால் #பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
135 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 🙏🏽
எங்கள் தேசியத் தலைவனின் தேசிய கீதமாய் ஒலித்தாயே!
தமிழீழ மண்ணில் தமிழரின் தாகமாய் ஒலித்தாயே!
செங்களம் தன்னிலே செங்குருதி சிந்திய
வேங்கைகள் தியாகத்தை வீணையாய் மீட்டினாய்!
திசையெட்டும் ஈழத்தின் தீரா வலிகளைத்
தேனிசைக் குரலாக ஒலித்தவருக்கு
@stp_qatar சார்பாக கண்ணீர் வணக்கம் 🥲 🥲 🙏🏽
மனித குலத்தின் மீது இயேசு கொண்ட எல்லையற்ற அன்பையும், சிலுவை மரத்தில் அவர் செய்த தியாகத்தையும் சிந்திக்கும் இந்த நாளில் @stp_qatar சார்பாக அனைவருக்கும் புனித வெள்ளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
மனிதம் போற்றுவோம்.
அனைத்து உயிர்களையும் நேசிப்போம்.
இலவசம் என்ற பெயரில் திராவிடக் கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதை இக்காணொளி வாயிலாக பதிவிட்டுள்ளார் சகோதரர் @kittutamilan
மாறுவோம்,
மாற்றுவோம்.
#வெல்வான்_விவசாயி
நேற்றைய தினம் வேதாரண்யம் தொகுதியில், காலை வேளையில் பஞ்சநதிக்குளம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தோம்.
மாலை வேளையில், துளசியாப்பட்டினம், வாய்மேடு கடைத்தெரு, வாய்மேடு பவர் ஹவுஸ், தாணிக்கோட்டம் ஆகிய பகுதிகளில் வாகனப் பரப்புரை செய்தோம். பரப்புரை குறித்த விளம்பரம் செய்யாவிட்டாலும், சின்னஞ்சிறு கடைவீதிகளாக இருந்தாலும் தலா 30 நிமிடங்கள் வாகனத்தில் நின்றுகொண்டு, அங்கு கூடியிருக்கும் மக்களிடையே பரப்புரை செய்தோம்.
அதில் வாய்மேடு பவர் ஹவுஸ் பகுதியில் நேற்று நான் பேசியபோது எடுக்கப்பட்ட காணொளியை வைத்து, தவெகவின் Virtual Warriors, 'கூட்டமே இல்லாத இடத்தில் யாருக்குப் பரப்புரை செய்கிறாய்?' என இட்டப் பதவிகளைக் கண்டேன்.
வாய்மேடு பவர் ஹவுஸ் எனும் பகுதி ஒரு சிற்றூர். எப்போதும் சிறிய எண்ணிக்கையிலேயே கூட்டம் இருக்கும். இருந்தும், அந்த சின்னஞ்சிறு பகுதியில் இருக்கும் மக்களையும் வெல்ல வேண்டும் எனப் பரப்புரை செய்கிறோம். இன்றைக்கும் அதேபோன்ற மூன்று பகுதிகளில் பரப்புரை செய்தோம். தினமும் செய்வோம்.
ஒரே ஒருவர் என்றாலும் அவரையும் கொள்கையால் ஈர்த்து வெல்ல வேண்டும் என எண்ணிக் களத்தில் வேலை செய்கிறோம். 10 பேர் நின்றாலும் அவர்களையும் வென்றெடுக்க அங்கு நின்று பேசுகிறோம். அப்படிப் பேசிப் பேசிதான் இன்றைக்கு 8.2 விழுக்காடு எனும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறோம்.
கடைக்கோடி மனிதனின் உணர்வுக்கும் மதிப்பு அளிப்பதுதான் சனநாயகம். ஒரு ஊரில் ஒரே ஒருவர்தான் இருக்கிறாரென்றால், அந்த ஒருவருக்காகவும் தேர்தல் நடத்துவதுதான் மக்களாட்சி. அந்த மக்களாட்சியின் மறுமலர்ச்சிதான் நாம் தமிழர் கட்சியின் எழுச்சி!
அதுவெல்லாம் களத்துக்கு வந்தால்தான் தெரியும். அதுனால, தவெக தம்பிகளா! கொஞ்சம் களத்துக்கு வாங்கப்பா! Virtual World லயே வாழாதீங்கப்பா.
அப்புறம், பேசுகிற எந்த இடத்திலும் தவெக குறித்துப் பேசவில்லை. ஏனென்றால், அந்தக் கட்சி இருப்பதற்கான அறிகுறியே இங்கு எங்கும் தென்படவில்லை.
கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே…
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே…
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே…
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே…
The Debate வலையொளி நேர்காணலில் எமது சமூக சேவையை பற்றி பேசிய பத்திரிகையாளர் அவர்களுக்கு நன்றி.
#ancyshobaraniforcolachel #seeman #ntk #2026legislativeassemblyelection #seeman4tn #குளச்சல்சட்டமன்றத்தொகுதி #ஆன்சிசோபாராணி
#குளச்சல் #colachel
#இரணியல் #Eraniyel
#திங்கள்சந்தை #mondaymarket #Kappiyarai #கப்பியறை
இந்த தேர்தல் களத்தில் தனது வித்தியாசமான பரப்புரையால் …..
என்னையும் அந்த தொகுதி மக்களையும் பெரிதும் கவர்ந்த அம்பாசமுத்திரம் சட்டமன்ற வேட்பாளர் ….
அன்பு தம்பி @DrVSivasankaran 💝❤️
வெல்வான் விவசாயி 🤝💪
#நாம்_தமிழர்_கட்சி