இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ஜூன் 22, அகவை தினம் காணும் செந்தமிழர் பாசறை அமீரகத்தின் செயலாளர், எங்கள் ஆருயிர் சகோதரர் திரு.வ.பாரதிராசன் @BharathiVallav1 அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழ்ப் போல் என்றென்றும் சிறந்து வாழ்க! என வாழ்த்துகிறோம்…
அன்பின் மகிழ்வில்,
செந்தமிழர் பாசறை அமீரகம்
#நாம்தமிழர்கட்சி
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
#ntkitwing
#பிறந்தநாள்_வாழ்த்துகள்
கண்ணீர் வணக்கம்!
அமீரக செந்தமிழர் பாசறையின் துணைத் தலைவர் சகோதரர் திரு. சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் பாசமிகு தாய்,
தெய்வத்திரு ச. சந்தனமேரி அம்மாள் அவர்கள் இன்று (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
சகோதரர் மற்றும் குடும்பத்தாருக்கு அமீரக செந்தமிழர் பாசறை துணை நின்று, அம்மாவிற்கு எங்கள் கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறோம்🙏🏼😢.
@sureshsathianathan
@seeman4tn_official
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
#நாம்தமிழர்கட்சி
#ntkitwing
🔥 தன்னெழுச்சியுடன் திரண்ட செந்தமிழர் பாசறை அமீரக உறவுகள்!
14.06.2026 அன்று அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, உம் அல் குவைன் மற்றும் இராசல் கைமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அமீரக செந்தமிழர் பாசறை உறவுகள் கலந்து கொண்டு கலந்தாய்வை சிறப்பித்தனர்.
இலக்கை நோக்கிய பயணத்தில் ஒற்றுமையும் உறுதியும் தான் நமது பலம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வு நிரூபித்தது.
கலந்து கொண்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்!
இலக்கு ஒன்று தான், இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
#செந்தமிழர்பாசறைஅமீரகம் #நாம்தமிழர்கட்சி #கலந்தாய்வு #அமீரகம் #தமிழர்எழுச்சி
“தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும்
முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை?
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக
உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம்.
என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு?
தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா?
ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
14.06.2026 – உலக குருதிக் கொடையாளர்கள் தினம்
உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செந்தமிழர் பாசறை – ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக, நாம் தமிழர் உறவுகள் தங்களது குருதியை தன்னார்வமாகக் கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காக்கும் மகத்தான மனிதநேயச் சேவையில் பங்காற்றினர்.
“குருதி கொடுப்போம்… உயிர் காப்போம்!”
“கொடையாக அளித்த ஒரு துளி குருதி, ஒருவரின் வாழ்வை மீட்டெடுக்கலாம்.” ❤️🩸
செந்தமிழர் பாசறை – ஐக்கிய அரபு அமீரகம்
நாம் தமிழர் உறவுகள் 🌾🕯️🩸
#world_blood_donor_day
#ntkforchange
#naamtamilarkatchi
#sentamilarpasaraiuae
@stp_valaikuda@Seeman4TN@_ITWingNTK
கண்ணீர் வணக்கம்
இயக்குனர் இமயம்
பாசத்திற்குறிய அப்பா
பாரதிராஜா
அவர்களுக்கு கனத்த இதயத்தோடு கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
தமிழ்ச் சமூகத்திற்கு எண்ணற்றக் கருத்துக்களையும், சமூகச் சிந்தனைகளையும் தன் திரைப் படைப்புகள் மூலம் அள்ளித்தந்த ஆகச் சிறந்த பெருமகனின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று…!
தமிழினம் வாழும் வரை…
நீ தந்த மண் வாசனையோடு…
உம் நினைவுகளையும் சேர்த்து சுவாசிப்போம்!
என்றும் நீங்கா நினைவுகளுடன்,
செந்தமிழர் பாசறை அமீரகம்
#பாரதிராஜா #நாம்தமிழர்கட்சி #செந்தமிழர்பாசறைஅமீரகம்
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஒரு மொழி வர வேண்டும் என்றால் அது தமிழ் மொழி தான் வர வேண்டும் - காயிதே மில்லத்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
மனிதநேயம் விதைத்த இடத்தில் தமிழ்தேசியம் வேரூன்றுகிறது!
இராசல் கைமாவில் நள்ளிரவு நேரத்தில் விபத்தில் காயமடைந்து உதவியின்றி தவித்த தமிழர் ஒருவரை, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை உறுப்பினர் மருத்துவர் தங்கராசா பாதுகாப்பாக அவரது தொழிலாளர் முகாமில் சேர்த்தார்.
இந்த மனிதநேய செயல் பல புதிய உறவுகளை நாம் தமிழர் குடும்பத்துடன் இணைத்துள்ளது.
நேற்று செந்தமிழர் பாசறை அமீரகம், இராசல் கைமா மண்டல உறுப்பினர்கள் தொழிலாளர் முகாமிற்கு நேரில் சென்று காயமடைந்த சகோதரரை நலம் விசாரித்ததுடன், புதிய உறவுகளையும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
ஒரு உதவிக்கரம்... பல இதயங்களை இணைத்தது!
மக்கள் சேவையே எங்கள் அரசியல்!
தமிழ்தேசியம் மனிதநேயத்தின் மற்றொரு பெயர்!
நாம் தமிழர்
செந்தமிழர் பாசறை - அமீரகம்
இனிய ஈகைத் திருநாள்
வாழ்த்துகள்!
அன்பும், அமைதியும், அருளும் நிறைந்த புனித (பக்ரீத்) ஈகைத் திருநாளை கொண்டாடும் உலகெங்கும் வாழும் எம் இசுலாமிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தியாகத்தின் உயர்ந்த அர்த்தத்தையும், இறைநம்பிக்கையின் மகத்துவத்தையும் மனிதகுலத்திற்கு உணர்த்தும் இந்த புனித நாளில், நபிகளார் அவர்கள் எடுத்துரைத்த மனிதநேயப் பண்புகளை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோம்.
"பசித்துக் கிடக்கும் ஒருவருக்கு உணவளிப்பதே ஆகச்சிறந்த கொடையாகும்."
என்ற நபிமொழி, மனித நேயத்தின் உன்னத வடிவமாகும்.
இந்த பக்ரீத் திருநாளில் ஏழை, எளியோர், ஆதரவற்றோர் மற்றும் பசித்திருக்கும் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை மலரச் செய்வதே உண்மையான திருநாள் கொண்டாட்டம் ஆகும்...
இறைவன் நம் அனைவரின் தியாகங்களையும், தொழுகைகளையும், நற்செயல்களையும் ஏற்றருளி, உலகமெங்கும் அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் வளமுடன் வாழ அருள் புரிவானாக.
உலகெங்கும் வாழும் இசுலாமிய தமிழ் உறவுகள் அனைவருக்கும்
இனிய (பக்ரீத்) ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்! —
அன்புடன்,
செந்தமிழர் பாசறை - அமீரகம்
#பக்ரீத்_பண்டிகை
#ஈகைத்திருநாள்
#eidaladha
#நாம்தமிழர்கட்சி
#செந்தமிழன்சீமான்
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
என் பிள்ளைகளை தொட்டால் சுட்டு கொல்லுவேன்… என்ற சீமானை தோற்கடித்த மக்கள் ….
இன்று வீதியில் இறங்கி கண்ணீர் மல்க கதறி அழுகிறார்கள்…
கோவை சூலூரில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும், கண்களையும் கலங்க செய்கிறது …
ஆளும் தவெக அரசு ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள்…
இதற்கு தீர்வு சொல்லுமா இந்த அரசு…
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசினுடையது… பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்.
#செந்தமிழர்_பாசறை_அமீரகம்
தமிழினத்தின் உரிமைக்காக உறுதியான குரலாகவும், இயற்கை, மொழி, மக்கள் என்ற மூன்றையும் தனது உயிராய் நேசித்து அரசியல் களத்தில் சமரசமின்றி பயணிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான்- கயல்விழி இணையருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு குழந்தையின் பிறப்பு என்பது ஒரு குடும்பத்தின் சந்தோஷம் மட்டும் அல்ல; அன்பு, நம்பிக்கை, எதிர்கால கனவுகள் அனைத்தும் புதிதாய் மலரும் தருணம்.
அந்த வகையில் அண்ணன் சீமான் அவர்களின் இல்லத்தில்
பிறந்துள்ள இந்த பெண் குழந்தை, அவர்களின் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வர வாழ்த்துகிறோம். மக்கள் மீதும், தமிழ் மண்ணின் மீதும் அளவற்ற பாசம் கொண்ட குடும்பத்தில் பிறந்துள்ள இந்த செல்லக் குழந்தை, அன்பும் மனிதநேயமும் நிறைந்த வாழ்வை பெற்று வளர வேண்டும்.
தமிழின் பண்பாடு, வீர உணர்வு, இயற்கை நேசம் ஆகிய உயர்ந்த பண்புகளை தன்னுள் சுமந்து நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வளமாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.
அண்ணன் சீமான் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! "செல்வ மகள் பிறந்த இல்லம் என்றும் சந்தோஷம் நிரம்பிய இல்லமாக இருக்கட்டும்!"
அன்பும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுடன்
செந்தமிழர் பாசறை- அமீரகம் .
@Seeman4TN@stp_valaikuda@NaamTamilarOrg@_ITWingNTK
மே 18 இனப்படுகொலை நாள்🕯️
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை மே 18 நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் நினைவேந்தல் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி, குருதிக் கொடை பாசறை சார்பில் முன்னெடுக்கப் பட்ட குருதிக் கொடை முகாமில் 400 க்கும் மேற்பட்ட உறவுகள் தன்னார்வமாக குருதியை கொடையாக கொடுத்தனர். இந்தக் குருதியானது பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டது. உயிர் காக்கும் உன்னதப் பணியை சிறப்பாக செய்து முடித்த குருதிக் கொடை பாசறை @KKPNTK உறவுகளுக்கு செந்தமிழர் பாசறை- அமீரகம் சார்பாக பாராட்டுகளையும், புரட்சி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் விழுந்த ஒவ்வொரு கண்ணீர் துளிகளும், சிந்திய குருதியும்….
இன்றும் மானத் தமிழர்கள் , எம் இதயத்தில் நெருப்பாய் எரிகிறது கொண்டு தான் இருக்கிறது…
அழிந்தது உயிர்கள் மட்டும் அல்ல, எம் இனத்தின் கனவுகளும்.
நினைவுகள் மறையாது, க�
அண்ணன் சீமானின் அரசியலை ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைகழகம் மாணவர்கள் வரை சென்றுள்ளது.
நாம் அனைவரும் உண்மையில் சீமான் அண்ணனுடன் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விடயம்!
வெறும் பணத்துக்காக, ஓட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில்....
மக்கள் தேர்தல் அரசியலில் புறக்கணித்த போதும்
எம் மக்களின் உரிமைக்காகவும், உணர்வுக்காகவும் களத்திலே நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி...
நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல,
இந்த நாட்டுக்கானவர்கள்...
இந்த மக்கள் ஒரு நாள் எங்களை தேடுவார்கள்...
அவர்களுக்காக அப்போதும் நாங்கள் காத்திருப்போம்...
புரட்சி வெல்லட்டும்!
நாம் தமிழர்!
#நாம்தமிழர்கட்சி
#ntkitwing
#செந்தமிழர்பாசறைஅமீரகம்
#செந்தமிழர்பாசறைவளைகுடா
#செந்தமிழன்சீமான்
இருள்கிழித்து இளங்காலைக் கதிரொளியாய் எழுவோம்!
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் வேரிலிருந்து மொத்தமாகத் துளிர்ப்பது போலத் துளிர்த்தெழுவோம்!
வைகாசி 04 , மே 18, திங்கட்கிழமை, தலைநகர் சென்னையில் , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றுகிறார்.
மானத்தமிழ்ப் பிள்ளைகள் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#மே18
#இனப்படுகொலை
#may18genocide
#நாம்தமிழர்கட்சி
#செந்தமிழன்சீமான்