தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன்
முருகப்பெருமான்
வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
‘தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது’ என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர். அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள்தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
அநீதி இழைக்கும் அதி ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய இடையூறாகவும் தடைக்கல்லாகவும் இருந்த காரணத்தினால்தான் அரசியல் போராளி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் உயிரைப் பறிக்கும் சதிச்செயல் நடந்தேறியது.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல
அக்கொடுஞ்செயல் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்றளவும் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. அக்கொடூர நிகழ்வில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வாழ்நாள் முழுவதும் குரலற்ற எளிய மக்களின் குரலாக, பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் இன்று நம்மோடு இல்லாதபோதிலும், அவர் கையளித்து சென்றுள்ள மக்கட் பணிகளை தடைபடாமல் தொடர்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக, அறத்தின் வழி நின்று, தீரத்துடன் போராடி, தன்னையும், தன் குடும்பத்தையும் கர்பாலா பாலைவன நிலத்திற்கு ஈகம் செய்த, இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசேன் அவர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும், ஈகத்தையும் போற்றி, நினைவுகூரும் புனித 'மொகரம்' திருநாளில், என்னரும்
இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் நல்லருள் கிடைக்கப்பெறட்டும்!
ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக அஞ்சாது போராடும் உள உறுதி எல்லோரிடத்தும் எப்போதும் நிலைக்கட்டும்!
அருணகிரிநாதர் "அருணாச்சலம்" என்று பாடியதால் அருணாச்சலேஸ்வரர் என்று அழைக்க வேண்டுமென்று சம்ஸ்கிருத ஆதரவாளர்களும் , தெலுங்கர்களும் விரும்புகிறார்கள் என்பதால் முன்னாள் ஆளும்கட்சி திமுக சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக திருவண்ணாமலையை அருணாச்சலம் என்றும் அண்ணாமலையாரை அருணாச்சலேஸ்வரர் என்றும் அடையாளப்படுத்தினர்...
அருணகிரிநாதர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் எழுதிய "திருவாசகத்தில்"
" அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் " என்று பாடியுள்ளார்...
திருநாவுக்கரசர் தனது ஐந்தாம் திருமுறையில்
"வட்டா னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையானை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ"
என்றே பாடியிருக்கிறார்...
திருவண்ணாமலையில் அருள்புரியும் எம்பெருமான் சிவனை கலாம்காலமாக "அண்ணாமலையார்" என்றே அழைத்து வந்துள்ளனர்...
இதற்கு தேவையான பக்தி இலக்கிய சான்றுகள் இருக்கும்போது "அருணாச்சலேஸ்வரர்" என்று சமஸ்கிருத அடையாளத்தில் அழைக்கவேண்டிய தேவை இப்போது ஏன் வந்தது??
தமிழை பாதுகாப்போம் , தமிழுக்குதான் முன்னுரிமை கொடுப்போம் என்று முழங்கும் தவெக அரசு ஒரு பிராமணரை இந்து அறநிலையத்துறைக்கு நியமித்து சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை அருணாச்சலேஸ்வரர் என்று அழைப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்....
கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித், சஜித்குமார், சுவின் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சமூக ஊடக ஆளுமைகளுடன்
நாம் தமிழர் கட்சி
-தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
கலந்துரையாடல்
நாள்: ஆனி 13 சனிக்கிழமை| 27-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: பென்ஸ் பார்க் (Benz Park) சென்னை, தி.நகர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.
https://t.co/1JHono96do
இடம்:
https://t.co/Kx3ARpdBZ8
சமூக ஊடக ஆளுமைகளுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
கலந்துரையாடல்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026
காலை 10 மணிக்கு
இடம்:
சென்னை
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.
https://t.co/o61copyDZY
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம்
நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 09 மணிக்கு
இடம்: பரங்கிப்பேட்டை
(வண்டிக்காரத் தெரு)