@LoyolaMani@mkstalin உனக்கு வெள்ளை அறிக்கை பற்றி இப்போதுதான் தெரிகிறது. திமுக அரசு ஏற்கனேவே நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. வாசித்து பார்
@itsSathyatheni@TVKVijayHQ அரசு பதவி பெற தகுதி வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? அவர் அரசு பதவிக்கு விண்ணப்பம் செய்தாரா? தேர்வு எழுதினாரா? அந்த பதவிக்கு விண்ணப்பிக்க அரசு விளம்பரம் செய்ததா?
@palaninathan_r தனி தொகுதி எம்எல்ஏ சபாநாயகராக ஏற்கனேவே இருந்துள்ளார். தனித் தொகுதி எம்எல்ஏ தற்காலிக சபாநாயகராகவும் இருந்து ஏற்கனேவே பதவி ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்துள்ளார். இது புதிது அல்ல
பாஜகவின் திட்டம்
1, திமுக கூட்டணியை உடைத்து தவெக ஆட்சியை அமைப்பது
2, ஆட்சி அமைத்தபின்பு ஆதரவு கொடுத்த கட்சிகளை அவமானப்படுத்தி வெளியேற்றுவது
3, இவர்கள் வெளியேறிய பின்பு அதிமுகவை உடைத்து தவெக ஆட்சியை காப்பாற்றுவது
4, அதன்பிறகு தவெக வை உடைத்து பாஜக ஆட்சியை அமைப்பது
@shanmugamchin10 இதில் திமுக அரசு தவறு செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு முகாம் என்ற பெயரில் அவதிப்பட்டனர். அரசு அலுவலகங்களில் வேலை நடைபெறாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இது போன்ற செயல்கள் பாதிப்பை உருவாக்கியுள்ளது. எனவே இனிவரும் திமுக அரசு இந்த தவறை செய்யாமல் இருக்கணும்.
@mkstalin@arivalayam உள்கட்சி பிரச்சினைகள் மட்டுமே திமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்துள்ளது. எல்லா கட்சியிலும் அணிகள் இருக்கும். வழக்கமாக அந்த அணிகள் கட்சி வெற்றி பெற பாடுபடும். ஆனால் இந்தமுறை திமுகவில் வேட்பாளர் வெற்றி பெற்று விடக்கூடாது என்று பல இடங்களில் வேலை செய்த நிர்வாகிகளை காண முடிந்தது.
என் அரசியல் புரிதல் ரொம்பவே சிம்பிள்..
மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ்நாடு எல்லா வகையிலும் நல்லா இருக்கா?
இருக்கு..
ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் கூட படித்து அரசு ஊழியர் ஆக முடியுமா? முடியும்..
மருத்துவர் ஆக முடியுமா? முடியும்.
ஆசிரியர் ஆக முடியுமா? முடியும்.
அதற்கான அரசு கட்டமைப்பு இருக்கா? இருக்கு...
ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று கிராமங்களில் கூட பொது இடங்களுக்கு வர முடியுமா? முடியும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது சாதி பாகுபாடு குறைவா?
குறைவு..
மக்களின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட அதிகமா?
அதிகம்...
இதற்கு எல்லாம் காரணம் 50 வருடங்களாக ஆண்ட திராவிட கட்சிகள்தான்..
அதற்கு முன்பு நீதிக்கட்சி, காங்கிரஸ் எனச் சொன்னாலும் கடந்த 50 ஆண்டுகள்தான் பெரும் வளர்ச்சி...
இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி வேறு எங்கயாவது இந்திய மாநிலங்களில் பார்க்க முடியுமா?
முடியாது..
அவ்வளவுதான்...
அதனால ஏற்கனவே இங்க ஆண்ட கட்சிகள் ஓகேதான்.
அது திமுக அதிமுக....
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக யாரோட கைப்பாவை என உலகிற்கே தெரியும்.
அதே நேரத்தில் பாஜக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களில் என்னவெல்லாம் பன்றாங்கனு நமக்கு தெரியும்..
தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் செய்ய என்னவெல்லாம் பண்ணாங்கனு தெரியும்...
தமிழ்நாட்டுக்கு பாதகமாக எவ்வளவு விஷயங்களில் நடந்துக் கொள்கிறார்கள் எனத் தெரியும்.
இந்த நிலையில் பாஜகவை ஆதரிக்கற அதிமுகவை ஆதரிக்க முடியுமா?
முடியாது...
சரி புதிதாக வந்த நடிகர் விஜய் அவர்கள் பாஜக பெயரை கூட உச்சரிக்க பயப்படுகிறார்.. அவரை ஆதரிக்க முடியுமா?
முடியாது..
திமுக பயப்படுதா?
இல்லை....
புதிய கல்விக் கொள்கை
ஆளுநர் தலையீடு
புதிய நாடாளுமன்ற வரையறை
என எல்லா விதத்திலும் பாஜகவை தீரத்துடன் எதிர்க்கிறது..
சரி,
திமுக எந்த தவறும் பண்ணலையா?
ஆம் எல்லாம் நடக்கிறது, ஊழல் இலஞ்சம் எல்லாம்....
ஆனால் இதற்கு முன்பு இருந்த அதிமுகவிலும் இருந்ததுதானே....
இந்தியாவில் எந்த மாநிலங்களிலவாது இவைகள் இல்லாம இருக்கா?
அப்ப இது பெரிய விஷயம் இல்லை... ஏனெனில் மக்களே அப்படிதான்...
அப்ப மத்தவர்களை விட திமுக எதுல முன்னாடி இருக்கு..
பாஜக எதிர்ப்பு...
மக்கள் நலத் திட்டங்கள்..
பொருளாதார வளர்ச்சி...
சாதி மத மோதலை ஊக்குவிக்காமல் இருப்பது...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
இதுல குடும்ப அரசியல் என்பார்கள்...
எனக்கு அது பிரச்சினை இல்லை.. ஓட்டரசியல் பேஸ்வேல்யூ முக்கியம் அதற்கு கலைஞர் மகன், கலைஞர் பேரன் என்ற பிராண்ட் முக்கியம்..
அதனால குடும்ப வாரிசு என்பது பிரச்சினை இல்லை... அவர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதே முக்கியம்...
அதனால நான் திமுக என்ற கட்சியை ஆதரிக்கறேன்..
திமுகவோட பெட்டர் கட்சி வேற எதுவும் இல்லை...
அதற்கான சூழ்நிலையும் இப்போது இல்லை..
ஒருவேளை விஜய் உண்மையில் அண்ணா, பெரியார் கொள்கைகளை பேசி ஒரு நம்பிக்கை கொடுத்திருந்தால் ஒரு வாய்ப்பு தருவோமா என யோசிச்சு இருக்கலாம்..
ஏனெனில் முதல் மாநாட்டில் விஜய் வரட்டுமே என நானே விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கேன். பதிவு போட்டிருக்கேன்...
அதிமுக இடத்தை விஜய் பிடிக்கட்டும் என சொல்லிருக்கேன்..
ஆனால் 41 பேர் செத்ததும் ஓடிப் போன நபர், பாஜக பெயரை கூட உச்சரிக்கற நபர், பிரச்சாரம் கூட போகாத நபர், அடுத்தவன் மீது பழியை போடும் நபர், ரொம்பவே மட்டமான எண்ணம் உள்ள நபர் எப்படி மாற்று என நினைக்க முடியும்...
அதனால இருக்கறதுல பெட்டர் கட்சி திமுக...
அதனால ஆதரிக்கறேன்..
இதுதான் என் நிலைப்பாடு..
நடுநிலையா, அதுவா இதுவா அப்படி எல்லாம் இல்லை...
இதுதான் நான்
இதுதான் என் அரசியல்
இதுதான் என் நிலைப்பாடு
இதுதான் அரசியல் புரிதல்..
@Maniamuthan12 முதலில் எல்லாரும் தங்களின் அமைப்புகளை கலைத்துவிட்டு திராவிடர் கழகம் என்ற அடிப்படை அமைப்பில் இணைந்து பணி செய்யுங்கள். அப்புறம் மற்றவை எல்லாம் தானாகவே நடக்கும்