மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது: தி.மு.க-வின் DNA-விலேயே பட்டியலின மக்கள் விரோத மனநிலை ஊறிப்போயிருக்கிறது!
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், பட்டியல் இன மக்களின் அடிப்படை வசதிகளுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதியை, மடைமாற்றி 'மகளிர் உரிமைத் தொகை' என்று வழங்குவது தான் #திராவிடமாடல் சமூக நீதியா?
இது ஒன்றும் புதிதல்ல. 2006-11 காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புதிய தலைமைச் செயலகம் கட்டிய போது, அதற்கும் ஆதிதிராவிடர் நலத்துறை நிதியைத்தான் மடைமாற்றினார். அன்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அந்த சட்டசபையில் ஆதிதிராவிட மக்களும் உட்காரப் போகிறார்கள் தானே?" என்று ஆணவமாக பதில் சொன்ன வரலாறு தி.மு.க-விற்கு உண்டு.
அன்று கவிழ்ந்த கப்பல் போன்ற காட்சியளித்த கட்டடத்திற்கு பட்டியிலின மக்களின் நிதியை திருடினார்கள், இன்று ஓட்டு வங்கி அரசியலுக்காக அதே நிதியை சுரண்டுகிறார்கள். வடிவம் மாறினாலும், வஞ்சகம் மாறவில்லை!
பட்டியிலின மக்களுக்கு எதிரான அடக்குமுறையில் திமுக என்றும் சளைத்ததில்லை.
கீழ்வெண்மணி படுகொலை: ஏழை பட்டியிலின விவசாய கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தது யாருடைய ஆட்சி?
மாஞ்சோலை படுகொலை: ஊதிய உயர்வு கேட்ட தோட்டத் தொழிலாளர்களை தாமிரபரணி ஆற்றில் விரட்டி விரட்டி அடித்தே கொன்றது 1999-ல் நடந்த தி.மு.க ஆட்சி இல்லையா?
பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்கினால், அதைச் செலவு செய்யக் கூட மனமில்லாமல் திருப்பி அனுப்புகிறது இந்த "விடியல்" அரசு.
2021-22 நிதியாண்டில் மட்டும், சுமார் ₹2,418 கோடி நிதியை பயன்படுத்தவே இல்லை.
மத்திய அரசு கொடுக்கும் நிதியைத் திருப்பி அனுப்பிவிட்டு, அதைப் பற்றிக் கேட்டால், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் மிகவும் சாதாரணமாக பதில் சொல்லி, அந்தத் துரோகத்தை நியாயப்படுத்துகிறார். நிதியை மக்களிடம் சேர்க்கத் துப்பில்லை, ஆனால் அதை நியாயப்படுத்த மட்டும் தெரிகிறது!
பட்டியல் சமூக மக்களின் அடிப்படை உரிமைகளையும், நிதியையும் திருடி, அவர்களுக்கே பிச்சை போடுவது போல் திட்டம் தீட்டுவது அப்பட்டமான துரோகம்.
இனியாவது "சமூக நீதி" என்று வேஷம் போடுவதை நிறுத்துங்கள் முதலமைச்சர் @mkstalin அவர்களே!
#DMKFails
லோஹ்ரி, மகர சங்கராந்தி, மகா பிஹு, உத்தராயண் மற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பிற அறுவடை பண்டிகைகளின் விசேஷமிக்க நிகழ்வில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து பாரதியர்களுக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.
பல்வேறு பெயர்கள் மற்றும் மரபுகளில் வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள், அறுவடை காலத்தைக் குறிப்பதுடன் நமது பாரதிய நாகரிக நெறிமுறைகளை பிரதிபலிக்கின்றன. இயற்கை, சமூகம் மற்றும் மனிதகுலத்தின் பிரிக்க முடியாத ஒற்றுமையால் வாழும் ஒரு உலகக் கண்ணோட்டம் இவை. நமது காலத்தால் அழியாத பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்த விழாக்கள், பூமித்தாய்க்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கவும், ஒரே தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் உள்ளார்ந்த ஒற்றுமை உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தவும் நம்மைத் தூண்டுகின்றன.
இந்த விழாக்கள் மூலம், நமது விவசாய சமூகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். அவர்களின் அயராத அர்ப்பணிப்பும் ஞானமும் தலைமுறை தலைமுறையாக தேசத்தை நிலைப்படுத்தி, சமூகத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகின்றன.
இந்த விசேஷமிக்க பண்டிகை காலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் புதிய ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும், அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கட்டும், மேலும் வளமான, உள்ளடக்கிய மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தட்டும்.
#லோஹ்ரி #மகரசங்கராந்தி #மகாபிஹு #போகலிபிஹு #உத்தராயண் #ஒரேபாரதம்உன்னதபாரதம்