கட்சியில் சில மாற்றுக்கருத்தால் சற்று அமைதியாய் ஆகா நினைக்கும் என்னை போன்ற தம்பிகளை அவர் மீது அவதூறு பரப்பி திரும்ப அண்ணன் கரங்களை வலுவாக்க வைக்கிறார்கள் இந்த கொத்தடிமைகள் #மக்கள்தலைவர்_சீமான்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான மோதல்களும், அதைத் தொடர்ந்து வெளியாகும் மிரட்டல் ஆடியோக்களும் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, பொதுவெளியிலும் போனிலும் பகிரங்கமாக வெட்டிப் புதைத்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என்ற ரேஞ்சிற்கு ரவுடிச பாணியில் மிரட்டல் தொனியில் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்?
அதிகார பலத்தையும் கட்சிப் பதவியையும் வைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய போக்கு, ஜனநாயகத்தின் மீதும் சட்டம் ஒழுங்கின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.
வன்முறைப் பேச்சையும் ஆக்ரோஷமான மிரட்டல்களையுமே தீர்வாக நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகளும் இப்படிச் தெருவொழுங்கு அற்ற ரவுடிகளைப் போல நடந்துகொள்வதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் லட்சணமா? இத்தகைய வன்முறைப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மிரட்டலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, தமிழ்நாட்டின் கனிமவளத்துறை அமைச்சர் திரு. @drtkprabhu_TVK அவர்களின் பணி ரொம்ப பிரமாதம்!! அமைச்சரான உடன் சில கல்குவாரிகளுக்கு சென்று Drone Shot, Close Up என்று வெவ்வேறு கோணங்களில் Reels வெளியிட்டார். அதற்குப் பிறகு அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய தகப்பனாரிடம் ஒப்படைத்துவிட்டு பல் மருத்துவமனையை கவனிக்க சென்று விட்டார்.
காரைக்குடி அருகே உள்ள ஜெயங்கொண்டநிலை ஊராட்சியில் சட்டவிரோதமாக கல்குவாரி நடைபெறுவதும், அதற்கு எதிராக கிராம மக்கள் போராடுவதும் அமைச்சருக்கு தெரியாமல் போனது எப்படி?
கல்குவாரிக்கு எதிராக போராடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் கிராம மக்களை குண்டர் படையுடன் வந்து குவாரி உரிமையாளர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ தான் இது. கிராம மக்கள் இல்லாவிட்டால் வழக்கறிஞரை கார் ஏற்றி கொலை செய்திருப்பார்கள்.
குவாரிக்கு எதிராக போராடுபவர்களின் நிலை இதுதான்.
மீண்டும் சொல்கிறேன். கனிமவளத் துறை அமைச்சரின் நடவடிக்கை மிகப் பிரமாதம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது குறித்து நாதக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளீட்டஸ் பேட்டி
#KarurStampede | #GovtJobs | #TNGovt | #HighCourt | #TVK | #TNPolitics
"வாரிசுதாரர்கள் நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருக்க இவர்களுக்கு எப்படி முன்கூட்டியே வேலை கொடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும்” - கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியை ரத்து செய்த தீர்ப்பு குறித்து நாதக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளீட்டஸ் பேட்டி
#KarurStampede | #GovtJobs | #TNGovt | #HighCourt | #TVK | #TNPolitics
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ மாநகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.
அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
A certificate கொடுக்கப்பட்ட படத்தை மனநலம் குன்றிய மாணவர்களுக்கு திரையிடலாமா ?
இது சட்ட விரோதமில்லையா ?
நடவடிக்கை எடுப்பீங்களா CM சார் ?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் என்றென்றும் தமிழ் மக்களால் போற்றப்படும்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்ந்து, இனிவரும் தலைமுறை பிள்ளைகளுக்கும் வழிகாட்டவும், தொடர்ந்து அரசியல் தெளிவூட்டவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட, சமூகநீதி போராட்டக் களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.