தொகுதி மறுவரையறை தமிழ்நாடு பேச வேண்டிய முக்கிய பிரச்னை.39 என்பது வெறும் எண்ணிக்கை கிடையாது. நமக்கான அரசியல் அதிகாரம்.அது குறைந்தால் நம் குரல் நசுக்கப்படும்.இதோட ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்திருக்குகூடிய இந்த முன்னெடுப்புகள் காலத்திற்கும் நின்னு பேசும் #FairDelimitation
உங்கள் குடும்பத்திலோ, உற்றார் உறவுகளிலோ, பள்ளி, கல்லூரிகளிலோ வரலாறு படிப்பவர்கள்/ படித்தவர்கள் இருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.
1. இந்திய வரலாறு எதிலிருந்து தொடங்குவதாக வரலாற்று நூல்கள் இதுவரை சொல்லிக் கொண்டே இருந்தன?
மகாபாரதம்/ இராமாயணம் கால வாழ்க்கை முறைதான் பாரத வரலாறு. வேத கால நாகரிகத்திலிருந்துதான் இந்திய வரலாறு தொடங்குகிறது என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இந்திய நிலப்பரப்பின் நாகரீகம், அறிவு, பண்பாடு எல்லாமே வேத காலகட்டத்தில்தான் துவங்கியதாக அவர்கள் நம்பியதை நம்மை நம்பவைத்தார்கள்.
2. 1924 ல் நடந்த அதிசயம் என்ன?
வரலாற்று அறிஞர் ஜான் மார்ஷல், சிந்து சமவெளி நாகரிகம்தான் இந்திய நிலப்பரப்பிலேயே பழமையானது என்றும், வேத கால நாகரிகத்திற்கும் முன்பாகவே செழித்து வளர்ந்திருந்த நாகரிகம் அது என ஆதாரங்களோடு வேத நாகரிக புரட்டை போட்டு உடைத்தார்.
வேத காலத்திற்கு முந்தைய நாகரிகம் ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை என வலதுசாரி வரலாற்று நிபுணர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள். ஆய்வை எதிர்த்தார்கள். பின்னர் முயன்றவரை சிந்துசமவெளி நாகரிகத்தை நிராகரிக்கப் போராடினார்கள். தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுகளுக்கான நிதியை தடுத்தார்கள். நடத்திய ஆய்வு முடிவுகளை தாமதப்படுத்தினார்கள். வெளியிட மறுத்தார்கள். வேத காலத்தை முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தையே ஏற்காமல் வரலாற்றை அழித்துக் கொண்டிருந்தார்கள்.
காலங்கள் மாறின. அறிவியல் தொழில்நுட்ப துணைகொண்டு ஆய்வாளர்களால் வரலாறுகள் சரியாக திருத்தப்பட்டுக் கொண்டே வந்தன. ஆட்சிகள் மாறின. காட்சிகளும் மாறின.
3. இப்போது நடந்தது என்ன?
வரலாற்றை படைப்பதும் முறியடிப்பதும் எளிமையானதில்லை. அதைவிடக் கடினமானது நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டுவந்த பொய்யை, அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துணைகொண்டு அவ்வரலாற்றை திருத்தி எழுதுவது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்திய வரலாற்றை சரியாக முறையாக தற்போது திருத்தி எழுதியிருக்கிறார்.
இந்திய மண்ணின் வரலாறு உங்கள் வேதங்களிலிருந்து இல்லை; தமிழ் மண்ணிலிருந்து தொடங்குகிறது என்பதை உரக்கச் சொல்வார் என எதிர்பார்த்திருந்தால், "உலகின் இரும்பு வரலாறே தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது" என வரலாற்றுச் சுனாமியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் @mkstalin
கார்பன் டேட்டிங் ஆய்வுகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகத்தில் வெண்கலம் பயன்பாட்டில் இருந்தபோது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரும்புக் காலமே இருந்திருக்கிறது என்பதை ஆதாரத்தோடு நிறுவி இருக்கிறார்.
வேத நாகரிகத்துக்கு முந்தையது சிந்துசமவெளி நாகரிகம். அதற்கும் முந்தையது தமிழ் நாகரிகம்.
தமிழ்நாடு அரசு தன் இனத்தின், மண்ணின் வரலாற்றைக் காக்க ஒரு பெரும்போரே நடத்தியது. மாநில அரசின் ஆர்வமும், அரசு அதிகாரிகளின் கடுமையான உழைப்புமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. அண்ணாவிற்கும், கலைஞருக்கும் கிடைக்காத வரலாற்று வாய்ப்பு இது.
Before the Northern myths took shape, the South was already shaping iron. Legends might glow, but steel lasts longer.
The North had stories, the South had swords—guess which one cuts deeper into history?
இதைத் தமிழில் சுருக்கமாக எப்படி சொல்வார்கள் என்றால்,
தமிழர்கள் திண்ணையைப் பிடித்து நடந்த காலத்தில்...
Sports YT is not a sustainable model yet,so our OI Howzzat beingnominated by in Blacksheep awards is small victory in itself, our team @AaneeAnandhan, shankar @santho31@ableolarson@Arun_vj__ will bring u guys more
Spl Thanks to our Uma na✨
Pls vote
https://t.co/5XjS6qvANt
சுதந்திர இந்தியாவை வழிநடத்த காலம் தந்த கொடையாக நேருவை சொல்வார்கள்.
உண்மையில் காலம் தந்த சரியான கொடை மன்மோகன் சிங். உலகமயமாக்கலை மிகச் சரியான காலகட்டத்தில் முறையாக அமல்படுத்தினார்.
இக்கட்டான காலகட்டத்தில் இந்தியாவைக் காப்பாற்றி வழிநடத்திய வரலாற்றுப் பிரதமர்.
நுட்பான அறிவும், இந்திய துணைக்கண்டம் பற்றிய சரியான புரிதலும், பன்முகத் தன்மைக்கு மதிப்பளித்த மகத்தான ஆளுமை.
பணமதிப்பிழப்பு மாதிரியான தவறுகளை உரக்கச் சொல்லி எச்சரித்த நிபுணர்.
ஜனநாயகம் மீதும், உரையாடல்கள் மீதும் அளப்பரிய நம்பிக்கை கொண்ட அரசியலாளன்.
வலதுசாரி ஊடகங்களால் வேட்டையாடப்பட்ட போதும் நிலைகுலையாமல் நின்றவர்.
தமிழ்நாட்டிற்கு அள்ளிக் கொடுத்த கடைசி பிரதமர். மற்ற எவரையும் விட மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
காலம் உங்களை மிகச் சரியாக நினைவு கூறும் Dr. MMS ❤️
History will be more kinder to you sir.
Rest in peace Manmohan Singh.
OneIndia Mock Auction....
This without a doubt will be the biggest Video I'm a part of
First episode will air on tomorrow 7 pm followed by 5 more episodes
And I must thank the team behind all this @Arun_vj__ @NAVEENROCKY4 @santho31@ariv22@Sriramramji24
நைனானு சொல்லிட்டதாலயே அவர் தெலுங்கர் ஆகிட மாட்டார். மொழியின் அடிப்படையில் ஜாதியை பிரிப்பது எவ்வளவு அபத்தம் என்பதையும், முகுந்த் வரதராஜனை ஏன் பார்ப்பனராக காட்ட தேவையில்லை என்பது குறித்தும் விவரிக்கிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பூவண்ணன் கணபதி
https://t.co/x4gzQP6CXA
Overcast conditionல தான் நம்ம ஆளுங்க இப்படி ஆடுவாங்கனு பாத்தா, இருங்க பாய் நாங்க இப்போலாம் Spin trackல கூட இப்படிதான் ஆட்றோம்னு ஆடி காட்றாங்க.
Lack of technique, Lack of temperament அதை Attack வச்சு சமாளிக்கலாம்னு நினைச்சா இப்படிதான் நடக்கும்
#Kohli#RishabhPant#INDvsNZ
இதுல பெருமை பட்றதுக்கு ஒன்னும் இல்ல.ஜாதி சான்றிதழை ஒழிச்சுட்டா,ஜாதி ஒழிஞ்சிறும் அப்படினு கட்டமைக்கிறதே மிகப்பெரிய அயோக்கியத்தனம்.இத தெரிஞ்சே சில பேர் பண்ணலாம், சிலர் தெரியாம பண்ணலாம்.ஆனா எப்படி பண்ணாலும் தப்புதான்.அவுங்களோட நோக்கம் சரியானதுதான் போன்ற முட்டுகள்லாம் கொடுக்க வேணாம்
Vimal yoganathan will be a name which entire south east asian football community and more should be proud off✨✨
Hopefully he makes a incredible journey of his dream❤️🔥
https://t.co/C84G7mVB5J
@santho31@ableolarson
எதுக்கெடுத்தாலும் வந்துருவானுங்க இலவசமே தப்பு, அதுனால மக்கள் சோம்பேறியா இருக்காங்க, அதுவும் மக்கள் வாங்குற ஒரு வகையான லஞ்சம் அது இதுனு..எப்போதான் திருந்துவாய்ங்கனே தெரியல.
இந்த மாதிரி மக்கள் நலத் திட்டங்களை கொச்சை படுத்துறவுங்க மேல கேஸ் போட்றதுக்கு எதுவும் வழிமுறை இல்லையா?
நாட்ல இருக்குற தலையாய பிரச்னை ஊழல்தான்.அத ஒழிச்சிட்டா போதும் பாலாறும் தேனாறும் ஒடும்னு ஒரு மகா பொய்யை தலைல கட்டி 23 வருசத்துக்கு முன்னாடி கல்லா கட்டுன அதே கும்பல் மீண்டும் அதே குப்பையை எடுத்துட்டு வந்தது, இந்த முறை மாட்டுனது நாம இல்லை சார்ந்தோர்கள். ஆக இது வருமம் இல்ல கருமம்
அவர் சண்டாளர்தான்.
அவர்தான் சக்கிலியர்.
அவர்தான் நாவிதர்.
அவர்தான் வண்ணார்.
அவர்தான் அருந்ததியர்.
அவர்தான் பள்ளர்.
அவர்தான் பறையர்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கடைநிலை சாதிகளும் கலைஞர்சாதிதான்.
இந்திய அரசியலிலேயே பிறந்த சாதியின் காரணமாக தன் வாழ்நாள் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக மோசமான சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர் கலைஞர்.
இப்படி எழுதணும்னு நேத்து எழுதி வெச்சேன். ஆனா இந்த விக்டிம் கார்டு அரசியலுக்குள் கலைஞரை எப்போதும் கொண்டு வரக்கூடாதுன்னு தோணுது.
அரசியல் மொழில சொல்லணும்னா, பத்தாயிரம் தலைக்கட்டு கூட இல்லாத கடைநிலை சாதியிலிருந்து எழுந்துவந்து தெற்காசிய அரசியலின் போக்கை, அறிவாலயம் என்னும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, அரை நூற்றாண்டு காலம் திருத்தி எழுதியிருக்கிறர் தெக்காண குரு.
ஆதிக்க சாதியில் பிறந்த அரசியல் தலைவர்களை நாம் தமிழர் நிர்வாகிகள் இப்படி விமர்சிக்க மாட்டார்கள். நிச்சயம் செய்ய மாட்டார்கள். வெறுப்பிற்கு எதிராக சமூக நீதி அரசியலை கையில் எடுத்துப் போராடும் எல்லா தலைவர்களும் இந்த தாக்குதலை சந்தித்திருக்கிறார்கள். சந்தித்து வருகிறார்கள். இறந்தபின்னும் தாக்குதல் தொடர்வது கலைஞரது வலிமை.
இது கலைஞர் மீது கொண்ட வெறுப்பல்ல. சமூக நீதி மீது கொண்ட வெறுப்பு. சமத்துவம் மீதான ஒவ்வாமை. நீ எல்லாம் எங்களுக்கு வழிகாட்டுவதா என்கிற ஆண்டாண்டு கால ஆதிக்க சாதி வன்மம்.
இன்னொரு காரணம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் யார் வாக்கைப் பிரிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் தமிழர் நிர்வாகிகள்/ தொண்டர்கள் மத்தியில் அக்கட்சி அதிர்வை உருவாக்கி இருக்கிறது. அதன் விளைவுதான் இந்த கலைஞர் எபிசோட்.
ஐம்பதாண்டு காலம் தமிழ்நாடு அரசியலில் மையப்புள்ளியாக இருந்த கலைஞர் ஆதரவு/ கலைஞர் வெறுப்பு என்னும் அதிமுகவின் அரசியல் ஆயுதத்தை திடீரென இம்முறை கையில் எடுத்திருக்கிறது நாம் தமிழர்.
தீவிர அரசியலுக்குள் விஜய் நுழையும்போது
கலைஞர் எதிர்ப்பையும் திமுக எதிர்ப்பையும் இன்னும் தீவிரப்படுத்துவார் சீமான்.
கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது. அருவருப்பானது. கலைஞரை மட்டுமல்ல, பிறப்பின் அடிப்படையில் எவர் ஒருவரையும் அடையாளப்படுத்துவதும் நிராகரிப்பதும் நம் தமிழ் மண்ணின் அரசியலுக்கு நேர் எதிரானது. அதன் பெயர் வர்ணாசிரமம்.
~ விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கிறது திமுக.
~ பாமக வாக்குகள் ஏற்கனவே அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் போய்க்கொண்டிருக்கும் சூழலில் அதை தடுத்து நிறுத்தி அப்படி இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாமகவிற்கு இருக்கிறது.
இரண்டாம் இடம் வந்தாலும் பாமக குறைந்தது 50,000 வாக்குகளைப் பெற்றால்தான் 2026 தேர்தலில் தன் சீட் பேரத்தை தொடங்க முடியும். இம்முறை அதிமுக வாக்குகளைப் பெறத் தவறினால் பாமகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு கடினமானதாக மாறும்.
~ திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என கட்சி ஆரம்பித்து அதிமுகவிடமே வாக்கு கோரும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது நாம் தமிழர்.
தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்தவரையே திராவிடக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகின்றன என புகார் சொல்லிக் கொண்டே, முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும், இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதையே தானும் செய்திருக்கிறார் சீமான்.
நாம் தமிழரின் இந்த சமரசங்கள் இடைத்தேர்தலுக்கானது போல் தெரியவில்லை. 2026ல் புதிய திட்டத்திற்கு தயாராகிறார் போல தெரிகிறது. கடந்த முறை சுமார் 8000 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் இம்முறை அதிகபட்சம் அதை இரட்டிப்பாக்க முயலும்.
~ 11 தோல்வி பழனிசாமி என்று சொந்தக்கட்சியினரே பேசக்கூடும் என இடைத்தேர்தலை ஈபிஎஸ் புறக்கணித்தது அதிமுகவின் தற்கொலை முயற்சி.
சி. வி.சண்முகம் மாதிரியான கள வீரர்களை வைத்துக் கொண்டு திமுகவிற்கு பெரும் சவாலையும் நெருக்கடியையும் தொகுதியில் கொடுத்திருக்கலாம்.
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதல்ல, எதிர்க்கட்சி எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது என்பதே தமிழ்நாட்டின் அரசியல். களத்தை இழந்திருக்கிறது அதிமுக. பாமக இரண்டாம் இடம் வந்தால் தேஜகூ நாங்கள்தான் எதிர்க்கட்சி என அண்ணாமலை மீண்டும் பேச ஆரம்பிப்பார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவலிருந்து 2026 தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கப் போகின்றன அதிமுக -பாமக -நாம் தமிழர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் @santho31@Sonia_1201 உடன் Broader Look.