10/04/25 நேற்று உதகை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக குன்னூரை சார்ந்த ராஜசேகர் வயது 41 அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் ஒரு கார் அவசர ஊர்திக்கு வழி விடாமல் அவர்களி���் விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள்.
நேரம் 02:10 pm மணியளவில் பிரஸ் காலனியில் இருந்து கோவை வரை இவர்கள் சேட்டை தொடர்ந்து வண்ணம் இருந்தது.
கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றுள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் செய்யும் அட்டகாசங்களை நீங்களே பாருங்கள்.
இவர்களைப் போல மனித உருவத்தில் சில மிருகங்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறதுகள்.
இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை விடுவதாக இல்லை
# நீலகிரி சோசியல் மீடியா.
வாகனத்தில் பதிவு எண்
TN 22 BQ 3786.
திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த திரு. ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் திரு. சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன்.
அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.
மறைந்த திரு ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், @PTTVOnlineNews ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்கள��க்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள்.
தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் திரு சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த திரு ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனி��ும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.