அருமை நண்பர் திரு. அஜி��் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தமிழகத்தில் சாதி மத மோதல்களை உருவாக்கத் திட்டமிடும் இந்த சல்லிப்பயலையும், இவனை ஏவிவிடும் இவனுடைய கட்சித் தலைவன் @mkstalin@Udhaystalin ஐயும் உளவுத்துறை கண்காணிப்பில் கொண்டு வந்து இவர்களின் திட்டங்களை @tnpoliceoffl முறியடிக்க வேண்டும்.
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ரா��ாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவைய��ம் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவ��ை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குண���டைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொர��� நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சிய���ல் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தம���ழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் த���ுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள்
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்���ளை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவ���ட்டார்கள்!
அதுல���ம் ஒன்னுமில்ல. எதுனா கேட்டா அடிப்பார்னு வாய மூடிட்டு முக்காவாசி 90'ஸ் கிட்ஸ் இருந்துருப்போம். ஊர்ல ஒரு பணக்கார பையன் பேட் பால்லாம் வாங்குவான். அதுல விளையாடுவோம். கவன்மென்ட் ஸ்கூல்ல பீஸ் தேவல்ல. பத்து கிலோமீ. நடந்து போயி ஓல்ட் ஸ்டூடன்டோட பழய நோட்ஸ்லாம் வாங்கிப்போம். ஒரு பேனா பென்சில ரெண்டு மாசம் வெச்சிப்போம். தீந்தா அதுக்காகவே அளவெடுத்து செஞ்சா மாதிரி ஒரு நண்பன் அமைவான். அவங்கிட்ட கடன் வாங்கிப்போம். லைஃப்ல பொம்ம வாங்கிருக்கவே மாட்டோம். ஆனா, தகப்பர் போ��ைக்கு மட்டும் குறைவிருக்காது. ஒரு பொறந்த நாள் கூட கொண்டாட மாட்டோம். அது என்னிக்குனு கூட ஞாபகம் இருக்காது. யாரோ ஒரு புண்ணியவான் முதல் நாலு பேஜ் எழுதிட்டு தூக்கி போட்ட பழய நோட்ட எடுத்து எழுதுவோம். லீவுல காட்டுல வேப்பங்கொட்டையெல்லாம் பொறுக்கி எடைக்கு போட்டு வாழ்ந்துருக்கோம் விளையாடுற வயசுல. எத்தன நாள் அது பசின்னே தெரியாம பசில தூங்கிருக்கேன் தெரியுமா? இப்ப பக்கத்துல இருக்க சொந்தங்கள்ல அப்ப ஒருத்தர் கூட எங்கள சீண்டுனதில்ல. இளமையில் வறுமை எவ்வளவு கொடியதுனு எங்கள கேட்டா தான் தெரியும்.இப்ப என் பொண்ணுக்கு ஒவ்வொரு நொடியும் கொண்டாட்டத்தயும் சந்தோசத்தையும் கொடுத்துட்டு இருக்கேன். சும்மா 8000 ல எப்படி அப்பா குடும்பம் நடத்துனீங்கனு க்ரெடிட்ட ஈசியா தூக்கி குடுத்துட்ரீங்க. எல்லாத்தயும் இழந்து அனுபவிக்காம குழந்தை பருவத்த கடந்த நாங்க தான் காரணம் இந்த டெம்ப்லே���்டுக்கு. யோசிச்சு பாருங்க ஒவ்வொருத்தரும் இளமையில எல்லாத்தையும் துறந்தத���ல தான் 8கே ல குடும்பம் நடந்தது. இதுக்கு அப்பா காரணம் இல்ல. நாம தான் காரணம். என்னால அப்பாக்கள கொண்டாட முடிவதில்ல. ஆனா, என் மகள் அவளுடைய அப்பாவை நிச்சயம் கொண்டாடுவாள்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமி���் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.
Stranger Things >>>> Game Of Thrones
இப்படி ஒரு ட்வீட் நேத்துல இருந்து ஓடிட்டு இருக்கு.
இதுல எனக்கு ரெண்டுமே பிடிக்கும் ரொம்ப, ஆனா கம்பேரிசன்னு வந்துட்டா GOT தான் My choice✌️
GOT குடுத்த தாக்கம் வேற எந்த சீரிஸ்யும் இப்போ வரையும் குடுக்கல எனக்கு.
Stranger Things ல Will சீன் பாத்துட்டு செம்ம Excite ஆகி பேசிட்டு இருக்கோம். ஆனா இ��ு மாதிரி ஏன் இத விட எல்லாம் goosebumps குடுக்குற தரமான சீன் பல இருக்கு GOT ல என்பது நிதர்சனமான உண்மை.
இதை பற்றிய உங்களுடைய கருத்துக்களை கூறவும் 👍
#StrangerThings5 #StrangerThings
#GameofThrones #GOT
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.