கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!
இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!
நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்!
மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்?
ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!
#Kallakurichi
#Resign_Stalin
வாழ்த்துச் செய்தி
இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு. விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.
கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.
- தலைவர் திரு செல்வப்பெருத்தகை MLA
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் @actorvijay அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் @actorvijay அவர்களின் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள,
எனதருமை இளவல்,
எனது அன்புத்தளபதி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,
என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
@tvkvijayhq@actorvijay
திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களோடு தனி சம்ராஜ்ஜியத்துடன் வலம் வரும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. @actorvijay அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@tvkvijayhq
ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல!
மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள்.
திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!
கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...
பாமர மக்கள் மீதான அதிகார தாக்குதல்!
எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்!
மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!
#HBDVijay
தமிழ்த் திரையுலகில் தன் நடிப்புத் திறத்தால் ரசிகர்களின் அன்பில் நிறைந்தவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான @actorvijay அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்கள் பணியாற்றிட பொதுவாழ்வில் இணைந்துள்ள அவர் மக்களுக்காக தொடர்ந்து சேவைபுரிந்திட வாழ்த்துகிறேன்!
@tvkvijayhq 💐
From his dance moves to him saying “I am waiting”, here’s to celebrating @actorvijay 's birthday with some of his styles that will always be iconic 💛
Which one is your favorite?
#HBDThalapathyVijay Happy Birthday to one of the greatest Entertainers of Tamil Cinema & a force to reckon with soon in Tamil Nadu. #Thalapathy50 is a special birthday 🎁
Wishing him a fantastic year ahead with all success in his endeavours 💐👍💪