எங்களது முதல் எதிரி திமுக தான் என்பதை வெளிப்படுத்திய நம் தலைவர் அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
திமுக தான் நமது முதல் எதிரி இப்போது இரண்டாவது எதிரியாக தவெக வந்துள்ளது இந்த இரண்டையும் எதிர்த்து களம் ஆடுவதுதான் நமது வேலை என்பதை சுட்டி காட்டிய அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்
"டிஸ்கவரி (Discovery) தொலைக்காட்சியின் வரவிருக்கும் 'டிக்ளாசிஃபைட்: ஆபரேஷன் சிந்தூர்' (Declassified: Operation Sindoor) என்ற ஆவணத் தொடரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தோன்றுகிறார்."🇮🇳🔥
பிரதமர் மோடி நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றதை அவர் நினைவு கூர்கிறார்.
முதலில் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த பிரதமர் மோடி, "இதைச் செய்தது யார்? இதற்குப் பொறுப்பானவர் யார்?" என்று வினவினார்.
உளவுத்துறையினர் விரைவாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிய உதவினார்கள் என்று தோவல் கூறுகிறார்.💥
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த நிகழ்வுகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மற்றும் முக்கியமான அத்தியாயமாகும்.
இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைக் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.🇮🇳🫡
#OperationSindoor
எனக்கு பிஜேபி மேல் உள்ள பெரும் கோவம் பெரும் குற்றச்சாட்டே இதுதான்...
நான் Atleast ஒரு நாளை க்கு 4 மணிநேரம் ஆவது twitter ல இருக்கேன் ..8 வருஷமா இருக்கேன்..எனக்கே இதெல்லாம் புதிய செய்தி
social mediaல account இல்லாதவனுக்கு இது போய் சேர இன்னும் 10 வருஷமாகும்..
இதையெல்லாம் நீங்க இந்தியாவின் ஒவ்வொரு மூலை க்கும் எட்டும் விதத்தில் பிரச்சாரம் பண்ணிருக்க வேண்டாமா...???
EVM பற்றி இவர் சொல்லும் infos எல்லாம் யாராவது எளிய மக்களுக்கு கொண்டு போங்கப்பா..
ராகுல் காந்தி எல்லாம் வெக்கமே இல்லாம இன்னும் evm மீது தான் பழி போடுறான்
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
கடை திறந்து பலகையை தூக்கி வைக்கும்போதே ஒரு பெண் உள்ளே வந்தாள்.
கையில் ஒரு பத்து ரூபாய் தாள்.
"ஐயா, இந்தாங்க... உங்க பணம்" என்றாள் மெதுவாக.
கடைக்காரர் புரியாமல் பார்தார். "நான் எப்போ உனக்கு பணம் கொடுத்தேன் தாயி?"
"நேத்து மாலை. நான் 70 ரூபாய் சாமான் வாங்கினேன். 100 ரூபாய் கொடுத்தேன். நீங்க 30 ரூபாய்கு பதில் 40 ரூபாய் திருப்பி கொடுத்துட்டீங்க. தெரியாம நடந்த தப்பு தான். ஆனா அது உங்க பணம்."
சொல்லிட்டு அந்த பத்து ரூபாயை நீட்டினாள்.
கடைக்காரர் அந்த தாளை வாங்கி நெற்றியில் வைத்து கல்லாவில் வைத்தார். பிறகு கேட்டார்,
"சரி... வாங்கும்போது 5 ரூபாய்கு கூட பேரம் பேசுற நீ, இப்போ 10 ரூபாய்கு 7 கிலோமீட்டர் தூரம் வந்திருக்கியே? ஏன்?"
அவள் சிரித்தாள். "பேரம் பேசுறது என் உரிமை ஐயா. ஆனா விலை முடிஞ்ச பிறகு குறைச்சு கொடுக்கிறது பாவம். என் மனசாட்சி அதுக்கு சம்மதிக்காது."
"நேத்து ராத்திரியே வந்தேன். கடை மூடிட்டீங்க. அதான் இன்னிக்கு மறுபடி வந்தேன். மனசு லேசா இருந்தா தானே தூக்கம் வரும்?"
கடைக்காரருக்கு வாயடைத்துப் போனது. "எங்க இருக்கே தாயி?"
"செக்டார் 8 ஐயா."
7 கிலோமீட்டர். இரண்டாவது முறையா வந்திருக்கா. ஒரு பத்து ரூபாய்காக.
அவள் கிளம்பும்போது சொன்னாள்,
"என் கணவர் இல்லை ஐயா. போகும்போது ஒரே ஒரு வார்தை சொல்லிட்டு போனார் - 'பிறருக்கு சொந்தமான ஒரு பைசா கூட தொடாதே. மேலே ஒருத்தன் இருக்கான். அவன் கணக்கு கேட்டா, அந்த தண்டனை நம்ம புள்ளைங்களை பாதிக்கும்.'"
அந்த வார்தை கடைக்காரரை உலுக்கியது.
---
உடனே அவர் கல்லாவில் இருந்து 300 ரூபாய் எடுத்தார். ஸ்கூட்டரை உருட்டினார்.
பக்கத்து கடை பிரகாஷ் கிட்ட போய் நீட்டினார்.
"இந்தா... நேத்து நீங்க சாமான் வாங்கும்போது நான் 300 ரூபாய் அதிகமா வாங்கிட்டேன்."
பிரகாஷ் சிரித்தார். "இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம்? நான் வரும்போது கொடுத்திருக்கலாமே."
"நீங்க வரதுக்குள்ள நான் செத்துப் போனா? மேலே இருக்கிறவன் கணக்கு கேட்டா நான் என்ன சொல்வேன்? அந்த பாவம் என் புள்ளைங்களை சேருமே."
சொல்லிட்டு கிளம்பிட்டார்.
ஆனா பிரகாஷுக்கு தூக்கம் போனது.
---
10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நண்பன் கிட்ட 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மறுநாளே அவன் இறந்துட்டான். குடும்பத்துக்கு தெரியாது. யாரும் கேட்கலை.
பேராசை மனசை மறைச்சது. இன்னிக்கு வரை அந்த பணம் அவர் கிட்டதான் இருந்தது.
ஆனா அந்த நண்பனோட மனைவி... இன்னிக்கும் வேலைக்காரியா வேலை பார்து புள்ளைங்களை வளர்கிறா.
"மேலே இருக்கிறவன் கணக்கு கேட்டா?" - கடைக்காரரின் வார்தை காதுல ஒலிச்சது.
மூணாவது நாள் பிரகாஷ் வங்கிக்கு போனார். 13 லட்சம் எடுத்தார். வட்டியோடு.
அந்த விதவையோட வீட்டு வாசல்ல போய் காலில் விழுந்தார்.
"என்னை மன்னிச்சிடும்மா" என்று அழுதார்.
13 லட்சம் பார்த அவள் கண்ணீர் விட்டாள். ஆசீர்வதித்தாள்.
ஆச்சரியம் என்ன தெரியுமா?
அந்த விதவைதான்... 10 ரூபாயை திருப்பி கொடுக்க 7 கிலோமீட்டர் இரண்டு முறை நடந்து வந்த அந்த பெண்.
---
*நீதி:*
நேர்மை ஒருவேளை உன்னை சோதிக்கலாம். கடவுள் தள்ளிப்போடலாம்.
ஆனா கைவிட மாட்டார்.
ஒரு பத்து ரூபாயின் நேர்மை, 13 லட்சத்தின் சுமையை இறக்கியது.
மேலே ஒருத்தன் இருக்கான். அவன் கணக்கு தப்பாது.
நீ நேர்மையா இரு. மிச்சத்தை அவன் பார்துப்பான் 🙏
*படித்ததில் பிடித்தது*
Sujatha sir always rock😎
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்....
கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -
பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.
பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –
பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.
கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –
பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.
கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!
பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?
பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.
கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?
பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?
பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?
பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்...
சுஜாதாவை ருசிப்பவர்களுக்காக. 🤝🇮🇳