BREAKING : #JanaNayagan eyeing a May 8 / May 14 release.
Leaks don’t matter when it’s a #ThalapathyVijay film records are inevitable. ₹150Cr+ opening day is on the cards and we SRK fans are eagerly waiting for this storm. 🔥
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
மக்கள் துயரப்படும் போதெல்லாம் கும்பகர்ண உறக்கத்தில் இருந்த ஸ்டாலின் அவர்களே! உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லாட்சி தரும் புதிய தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்!
தமிழகத்தின் தீர்ப்பு - 'விசில்' சின்னத்திற்கே!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
கோழைத்தனமான சமூக விரோதிகள் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்களை வீசித் தாக்கியது முற்றிலும் அருவருப்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன்று வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தெருமுனைப் கூட்டத்தில், நடந்த இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம்.
அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் அப்பாவிப் பெண்களைத் தாக்குவது, ஒரு நாகரீக சமூகத்தில் இடமில்லாத காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். தமிழக காவல்துறை மற்றும் அதிகாரிகள்: இது குறித்து உடனடியாக, விரைவான விசாரணையைத் தொடங்கி, குற்றவாளிகளைத் தாமதமின்றி தண்டிக்க வேண்டும்.
பொதுக் கூட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!
#TVK #Villivakkam #ArrestTheCulprits #WomenSafety
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!