Much like Ambedkar did in his time, the VCK chief has chosen a path of principled pragmatism over moralistic traps set by those who haven’t sufficiently acknowledged his political and intellectual stature, writes V Geetha.
https://t.co/MXNPrWzYao
@nethrapal No no absolutely wrong one. This wasn't a celebration video clip for TVK victory. This was our Panther Dr Thol Thirumavalavan MP 's political campaign enthusiasm moment.
VCK: The Dalit party that reshaped Tamil Nadu politics
Do read this long profile @AzeefaFathima did.
A party that emerged from the Dalit Panthers of India (DPI) movement in Maharashtra
https://t.co/RdcfwEJbrj
Tamil Nadu OBCs use drones to spray herbicides on crops raised by Scheduled Castes. Only TN OBCs can come up with such novel applications of technologies.
#dalitsindravidianland
தமிழ்ச்சமூகம் முற்போக்கான பல கூறுகளைக் கொண்டது என்றாலும், சமத்துவம் - சகோதரத்துவம் மிக்க சமுதாயமாக மாற நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்!
பொதுப்புத்தியை மாற்ற, நிறுவ��்பட்டுவிட்ட stereotype பொய்களை உடைக்க பண்பாட்டுத் தளத்தில் உரையாடல், முன்னெடுப்புகள் கூடுதலாக தேவை. #TamilCinema
பக்தி இலக்கியங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாமே குப்பைன்னு பெரியார் சொல்லிட்டாருன்னு நேத்து சீமான் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுதான். அதனால, ஒரு சில நாயன்மார்கள் பத்தி இந்த த்ரெட்ல பார்ப்போம்.
முதலில் பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் (1/n)
தமிழ்நாட்டில் ஒரு பீமா கோரேகான்: பறையர் மக்களின் மறக்கப்பட்ட வரலாறு
- ரவிக்குமார்
" 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முடிவுற்ற பீமா கோரேகான் யுத்தத்தைக் நினைவுகூர்வதற்கு அந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியன்று லட்சக்கணக்கில் தலித்துகள் கூடுகின்றனர்.
தமிழ்நாட்டின் பீமா கோரேகான்:
1818 ல் பீமா நதிக்கரையில் மஹர்கள் எப்படி வீரஞ்செறிந்த போரில் பங்கேற்றார்களோ, போரை நடத்தி வென்றார்களோ அப்படி ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டுப் பறையர் சமூகத்தவருக்கும் உண்டு. 1758 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையா��் சென்னை முற்றுகையிடப்பட்டது.
பல மாதங்கள் முற்றுகையிட்டும் சென்னையை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் துருப்புகளுக்குப் பறையர் சமூகத்தினர் உதவியாக இருந்ததுதான்.
18 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கப் போட்டியில் பிரிட்டிஷ் படைகளும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டன. 1756 ல் ஆரம்பித்து 1763 வரை ஏழு ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் போர்கள் ���டந்தன. அதில் சென்னையைக் கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் பெற்ற வெற்றியின் மூலம்தான் பிரெஞ்சு காலனி ஆதிக்க முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பிரிட்டிஷ் மேலாதிக்கம் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டது.
சென்னைக்கு வயசு எத்தனை?
ஜெனரல் லாலி தலைமையில் கடலூரிலிருந்த செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்றியபின் 1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. அதைக் கண்டதும் சென்னையிலிருந்த பெரும்பா��ோர் ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுப் படை முற்றுகையிட்ட நிலையில் போதுமான துருப்புகள் இல்லாமல் கல்கத்தாவிலிருந்து வரவேண்டிய கப்பல்படையின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளபதி ஜெனரல் பிகோட் என்பவர் தனது துபாஷியான ரஞ்சேஸ்ரீ முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரை அழைத்துக்கொண்டு பிளாக் டவுன் எ���்று அழைக்கப்பட்ட தலித் குடியிருப்புக்கு வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பாதுகாக்க உதவுமாறு அங்கிருந்த பறையர் சமூகத்துத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
சண்டையிட்டவர்களுக்கு ஒரு ஜோடி உடை மட்டுமே:
அதனடிப்படையில் இரண்டாயிரம் தலித் ஆண்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த பிரிட்டிஷ் துருப்புகளோடு சேர்ந்து சென்னையைக் காக்கப் போரிட்டனர். தொடர்ச்சியாகப் பீரங்���ித் தாக்குதல் நடத்தியும் பிரெஞ்சுப் படையால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்கவோ சென்னையைக் கைப்பற்றவோ முடியவில்லை. எனவே 1759 பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அது தோற்றுப் பின்வாங்கிச் சென்றது.
சுமார் மூ��்று மாத காலம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் காத்து நின்று பிரெஞ்சுப் படையைத் தோற்றோடச்செய்த போரில் நூற்றுக்கணக்கான தலித்துகள் வீர மரணம் அடைந்தனர். அப்படி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிலமும், உதவித் தொகையும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஜோடி உடை மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
1810 ஆம் ஆண்டு பிளாக் டவுனில் கு���ியிருந்த தலித்துகள், ஐரோப்பியர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வரி விதித்தது. தமது முன்னோர்கள் சென்னையைக் காப்பாற்றுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெறுவதற்கும் செய்த உதவியை சுட்டிக்காட்டி அந்த வரியை நீக்குமாறு மலையப்பன், மதுரவாசம், கூத்தன், குட்டியப்பன் உள்ளிட்ட தலித் சமூகப் பெரியவர்கள் 44 பேர் கையொப்பமிட்டு பிரிட��டிஷ் அரசுக்கு மனு அளித்தனர்.
அந்த கோரிக்கையைப் பரிசீலித்த பிரிட்டிஷ் காலனிய அரசு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு வரி விலக்களித்து 1810 மார்ச் 27 ஆம் நாள் ஆணை பிறப்பித்தது.
பீமா கோரேகான் யுத்தத்துக்கும் சென்னையைக் காப்பாற்றுவதற்கு நடந்த போருக்கும் முக்கியமான ��ரு வேறுபாடுகள் உள்ளன. கோரேகானில் இந்தியாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் படையை பிரிட்டிஷ் காலனிய படையோடு சேர்ந்து மஹர்கள் தோற்கடித்தனர். ஆனால் சென்னையிலோ பிரெஞ்சு காலனிய படையை எதிர்த்தே பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து பறையர் சமூகத்தினர் போரிட்டனர். அங்கு பிரிட்டிஷ் படை நடத்தியது ஆக்கிரமிப்புக்கான யுத்தம். ஆனால் இங்கு நடந்ததோ சென்னையைக் காப்பதற்கான தற்காப்பு யுத்தம்.
நினைவுகூர���ோ பெருமைகொள்ளவோ தவறிவிட்டனர்:
பீமா கோரேகான் யுத்தம் நடப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே வீரம் செறிந்த போரை நடத்தி பிரெஞ்சுப் படையிடமிருந்து சென்னையைக் காத்த வரலாறு தமிழ்நாட்டுப் பறையர் சமூகத்தினருக்கு இருந்தும் அதை மகாராஷ்டிர மாநில மஹர்களைப்போல இங்கே நினைவுகூரவோ பெருமைகொள்ளவோ அவர்கள் தவறிவிட்டனர்.
Navayana year-end sale—lasts till 5 January 2025.
Buy Siddalingaiah's "A Word With You, World: The Autobiography of a Poet", a Chaplinesque memoir of the poet legislator with evocative illustrations by Laxman Aelay, MRP Rs 499, for Rs 299.
Link: https://t.co/hmcGQdruoi
As a political row erupts in the name of BR Ambedkar, here’s a look at the life of the father of India’s Constitution, and why he remains at the centre of Indian politics even today.