🚨 Florida police tackled and broke a 15-year-old Black teen’s arm while searching for a white runaway they had just seen in a photo.
Judah Everage was on his knees with his hands in the air when officers slammed him to the ground near Wickham Park in Melbourne. He wasn’t the person they were looking for, but they still fractured his elbow. Body camera footage shows he was complying the entire time.
One officer has since resigned, but the others involved are still on the job.
This is what happens when police treat Black kids as suspects first and ask questions later. Disgusting.
Sources: Body camera footage / Local reporting
தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு [email protected] என்ற மின்னஞ்சலிலும் அல்லது 044-22321090 என்ற தொலைபேசி எண்ணிலும் போன் செய்து புகார் அளிக்கலாம். இதற்கான சுற்றறிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
#Bribe | #TNGovernment | #DVAC
A traditional technique used by young shepherds of Ethiopia’s Banna tribe.
They use stilts to watch over their livestock in tall grass, move through wetland areas, and avoid snakes and predators like lions and leopards.
It requires strength, balance, and training from a young age.
நல்லா Steady ah உட்கார்ந்திருக்கார்...
நீங்க சொல்லுங்க விஜய் சார், இவர் எப்படி இறந்தார்? எப்படி இவர் உடம்பில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டது?
விசாரணை கைதியை அடித்து கொல்வது தான் உங்கள் மாற்றமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா விற்றதாகக் கைது செய்யப்பட்ட இளைஞர் சபரி வர்மன்(34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட நிலையில், பிணவறையில் அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது. இச்சம்பவத்தை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் சென்று, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரவணைத்துச் சென்றார்.
#Kanniyakumari | #LockupDeath | #VikatanReels
திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
The only survivor of the Telangana mass killings is 19-year-old with a developmental disorder. She watched her mother and grandmother being killed, and her sister dragged away to her death.
Now, she is left without a family.
Ground report by @Jahnavi_R
https://t.co/mYPRB46H4h
ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..?
தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்சி நீர்வளத்துறை பொறியாளருக்கு எப்படி வந்தது?
ஒப்பந்ததாரர்களை நேரில் சந்திப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் லிமிட்டெட் டெண்டர்களை தடை செய்தும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என்ன செய்ய போகிறார் WRD அமைச்சர் ஆனந்த் அவர்கள்?
இந்த 28 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இனியும் இந்த திருட்டு தொடராமல் இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிடுவாரா?
@CMOTamilnadu
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
Totally horrifying💔🥹
>A 13-year-old girl was kidnapped by an e-rickshaw driver in Rajasthan.
>She was held for 5 days and assaulted by 32 men.
>The girl was forced to drink alcohol.
>Police rescued her on June 22.
>12 people, including the driver, have been arrested.
>All involved hotels have been demolished.
Can our "so-called" constitution and judiciary actually deliver justice, or is this just another mockery of the system?
இவர்களுக்கெல்லாம் 'திராவிடம்', 'பெரியார்', 'அண்ணா' என்பதெல்லாம் பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும் விசிட்டிங்கார்டுகள்.
திமுக இப்படிப்பட்ட அட்டைக்கத்திகளை தான் முன்னுக்கு நகர்த்தி பிராந்திய தலைவர்களாக்கியது. போராட்ட உணர்வு கொண்டவர்களுக்கோ, கருத்தியலாளர்களுக்கோ 'ஜெகத்ரட்சகன்'களுக்கு கிடைக்கும் பதவி வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆழ்வார், வைணவம், சாதி என சனாதன குப்பைகளை சுமப்பவருக்கு பதவியும், பட்டமும் உண்டு.
அதிமுக-பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை எதிர்த்துப் போராடி வழக்கு பெற்று, கைதாகி சிறைப்பட்டவருக்கெல்லாம் கிடைக்காத பதவிகளை ஜெகத்ரட்சகன்கள், எ.வ.வேலுக்கள் அனுபவித்தார்கள். இவர்கள் செய்த ஊழல், கொள்ளை, சுரண்டல்களுக்கு 'திராவிடமும், பெரியாரும்' வசைபாடல்களை எதிர்கொண்டார்கள்.
இந்துத்துவவாதிகளின் கல்விக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடந்து கொண்டிருக்க, 'திராவிடத்தின்' பலனை அனுபவித்த ஜெகத் ரட்சகன், வேலுக்களின் கல்விக்கூடங்களில் மருந்துக்கும் பெரியார் பேசப்பட்டதில்லை. இளம் தலைமுறைகளை கல்லூரிகளுக்கான வாடிக்கையாளர்களாக மட்டுமே பார்த்த இந்த சுரண்டல் கூட்டம் , அரசியலற்ற இளம் தலைமுறை உருவாவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள். இவர்களின் கல்விக்கூடங்களில் படித்து சுரண்டபப்ட்டவனுக்கு திராவிடத்தின் மீது ஒவ்வாமை வரத்தானே செய்யும்.
ஈழப்படுகொ**லைக்கு நீதிகேட்டு நாம் போராடிக்கொண்டிருக்க, ஜெகத்ரட்சகனோ 27,000 கோடி ரூபாயை இலங்கை அரசின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு முதலீடு செய்துகொண்டிருந்தார்.
இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதை, சமத்துவ உணர்வு, கொள்கைப்பிடிப்பு என எதுவும் இல்லாத பெரும்பணக்காரர்களை வளர்த்து பண்ணையாராக்கியது திமுக. பாராளுமன்றத்தில் இவர்கள் கிழித்ததென்ன என எவருக்கும் தெரியாது. திராவிடம், பெரியார், அண்ணா சிந்தனைகளை வளர்ப்பதற்கு செய்ததென்ன ? இதுவும் நாமறியோம்.
சாராய கம்பெனிகள், கல்விக்கூடங்கள், கல்குவாரிகள் என திராவிடத்தை விலைபேசி வளர்த்தவர்கள், கப்பல் முழுகுகிறதென பெருச்சாலிகளாய் ஓடுகிறார்கள். கசக்கி பிழியப்பட்ட கூட்டணி கட்சிகள் வெளியேறியதை துரோகமென்றவர்கள், வாரிசுகளை அடுத்த கட்சிக்கு தாரைவார்த்து எதிர்காலத்திற்கு துண்டு போடுபவர்களை என்ன சொல்லி அழைக்கப்போகிறார்கள்?
இளம்தலைமுறையை சுரண்டிய கல்விமான்கள், சாராய விற்பனர்கள் இதுதவிர வீடுவீடாய் விஜய் படத்தை போட்டுக்காட்டிய திமுகவினரின் டி.வி சேனல்கள் எவ்வகையான வாக்காளர்களை உருவாக்கி வைத்தார்கள் என்பதிலிருந்து சுயவிமர்சனத்தை தொடங்குங்கள். தமக்கு முதுகு சொறியும் மருதையன்கள், ரூட்மாபியா கதைகள், கூட்டணி துரோகங்கள் எனச் சொல்லி மனதை தேற்றிக்கொண்டால் களம் கையைவிட்டு நிரந்தரமாய் களவுபோகும்.
வெற்றிக்கான திறவுகோலை பெரியார் என்றுமே ஒளித்து வைத்ததில்லை. தன்னலமில்லா, சொத்து சேர்த்துக்கொள்ளாத, தனியுடமை பாராட்டாத சுரண்டல்-ஊழல் தன்மையற்றவர்களை, வாய்ப்பிருந்தால், கண்டறிந்து பதவி கொடுத்து அழகுபாருங்கள். பெரியரிய சிந்தனையாளரை உயரத்திற்கு கொண்டு வாருங்கள். சொத்து சேர்த்து வயிறு வளர்க்காத கூட்டத்திடம் பொறுப்பை கொடுத்துப்பாருங்கள், களத்தைக் கைப்பற்றும் கழகம். இல்லையெனில் ஜெகத்ரட்சகன்கள், வேலுக்கள் கழுத்தைச் சுற்றி படமெடுப்பார்கள்.
பனைமரத்துக்கு செல்ல படிக்கட்டு.. திரும்பி பார்க்க வைத்த நபர்..! 60 ஆயிரம் செலவில் வீட்டின் மாடி போல பனைமரத்துக்கு படிகட்டு... ஆண்டுக்கு அதைவிட இதில் நல்ல லாபம் கிடைப்பதாக பேட்டி.!
#Thoothukudi | #PalmyraTree | #PolimerNews
Another seven skeletons discovered today at the Chemmani mass grave raising the total to 412. Three of them were found in one group, Attorney at Law at the site VS Niranjan told journalists. 390 of the human remains unearthed from Sri Lanka's largest mass grave have been exhumed.
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
அண்ணாமலையை, அவரது சாதிய-மதவெறி அரசியலை நார்மலைஸ் செய்யும் நடிகர் போஸ்வெங்கட்டின் பேட்டி கண்டனத்திற்குரியது.
அண்ணாமலை சிறந்த தலைவர், பேச்சில் நேர்மை, சிறப்புதன்மைக் கொண்டவர் எனும் போஸ்வெங்கட் அவர்கள் பேசுகிறார். திருப்பரங்குன்றம், மைக்கேல்பட்டி மாணவி சாவு என அண்ணாமலையின் சீரழிவு அரசியலை எந்த பெரியாரிஸ்டாலும், திராவிட செயற்பாட்டாளராலும், மானுட நேயம் கொண்டவராலும் ஏற்க இயலாது.
அண்ணாமலையை பாராட்டக் கூடிய எவரும் சந்தேகப்படப்பட வேண்டியவரே. ஆர்.எஸ்.எஸ் கும்பலின் எடுபிடியை எந்த முற்போக்காளனாலும் ஏற்க இயலாது. அண்ணாமலை எனும் சீரழிவு நபரை முன்னிறுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், அந்த நபருக்கு ஆதரவாக நார்மலைஸ் செய்பவர் எவராயினும் மே17 இயக்கம் எதிர்த்து நிற்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது இந்துத்துவத்திற்கு எதிரான பரப்புரையின் போது அண்ணாமலையின் ரவுடிகளை துணிந்து எதிர்த்து நின்று போராடியவர்கள் மே17 இயக்கத்தின் தோழர்கள்.