திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வாகைகுளம் ஊராட்சி அணைக்கரை சுடலை மாடசாமி திருக்கோவில் கொடைவிழாவில் இன்று 4.10.2025 (சனிக்கிழமை) வாகைக்குளம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக அக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு 500 மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.
‘வாக்கரசியல் களத்தில் வேட்பாளர் ஆண்:பெண் சமத்துவம் 50:50, கட்சி மற்றும் அனைத்துப் பாசறைகளின் முன்னணி நிர்வாகப் பொறுப்பில் பெண்களுக்கும் பங்கு’
- என்பதனைத் தொடர்ந்து, ‘234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் செயலாளர் நியமனம் கட்டாய விதி’ என்ற அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நாம் தமிழர் கட்சி புதிய அரசியல் நகர்வினை மேற்கொண்டுள்ளது.
பெண்ணுரிமையைப் புத்தகத் தாளிலும், ஒலிவாங்கி ஒலியிலும் மட்டுமே வைத்துத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பொது மற்றும் சமூக, அரசியல் தளங்கள் எவற்றிலும், பெண்களுக்கான எவ்வித முன்னுரிமையோ, பிரதிநிதித்துவமோ அளிக்காது, நாடகமாடிக் கொண்டிருக்கும் போலிப் பெண்ணியவாத அரசியல் அமைப்புகளின் முகத்திரைகள் இனி மெல்ல விலகும்!
இந்திய, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், முதன்முறையாகப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் வெளிச்சம், தமிழ் மண்ணில், எங்கள் கரங்களில் விழுந்துள்ளது. In this NTK golden era, it is time for us ‘women of NTK’ to up the political game in Tamilnadu.
Most importantly and with all my conviction and love ❤️
DAMN PROUD TO BE A PART OF ‘TEAM #SEEMAN’
@Seeman4TN
சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
பாசிச பாஜக அரசு நீட் தேர்வை நீக்க மறுப்பது வர்ணாசிரமக் கொடுமையின் நவீன வடிவமேயாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற பொய் வாக்குறுதியை அளித்து அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு இன்னும் எத்தனை மாணவ-மாணவியரின் உயிரை பலி கொடுக்கவுள்ளது?
நீட் தேர்வினால் மாணவ-மாணவியர் உயிரிழப்பது வெறும் தற்கொலை அல்ல; அவை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் இணைந்து செய்யும் பச்சைப் படுகொலைகள். இந்த ஆட்சிகளை அகற்றாத வரை நீட் தேர்வை ஒழிக்கவும் முடியாது. நீட் தேர்வை ஒழிக்காதவரை இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்கவும் முடியாது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஐயா ஜாகீர் உசேன் பிஜிலி-யின் படுகொலைக்கு நீதி வழங்க கோரி 23.3.2025 அனறு நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தினை செய்தியாக்கிய
பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் நேரலையில் ஒளிபரப்பிய தாய்த்தமிழ் வலையொளிக்கு நாம் தமிழர் கட்சியின் மனமார்ந்த நன்றிகள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பும்!
சமூக நீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்!
மாபெரும் பேரணி -பொதுக்கூட்டம்
நாள் : 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 04 மணி
இடம் :அம்பேத்கர் சிலை அருகில் திருப்போரூர் ,
செங்கல்பட்டு மாவட்டம்
மானத்தமிழர் எல்லாம் மறவாமல் ஒன்று கூடுவோம்!!
மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா?
@CMOTamilnadu@mkstalin
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது தந்தையின் பெயரில் அரங்கம் கட்டுவதற்காக மக்கள் வரிப்பணம் 525 கோடியை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசுப் பள்ளிக்கூடங்களைச் சீரமைக்க போதிய நிதியில்லை என்று மாணவர்களின் பெற்றோர்களிடமும், மற்றவர்களிடமும் கையேந்தியதுபோக, தற்போது தனியார் பள்ளி நிர்வாகங்களிடமே கையேந்தும் அவலநிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி தொகுப்பூதிய ஆசிரியர் பெருமக்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதியம் வழங்க பணமில்லை;
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பணமில்லை;
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய பணமில்லை;
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், பணப்பலன் வழங்க பணமில்லை;
தூய்மைப்பணியாளர்கள், மின்வாரியம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என்று அரசு ஊழியர்கள் பணி நிரந்தரமும், உரிய ஊதியமும் கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்குக் கொடுக்க பணமில்லை!
திமுக தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த பணமில்லை;
பொங்கல் விழாவிற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட வழங்குவதற்குப் பணம் இல்லாத நெருக்கடியான நிதிச்சூழலில் 525 கோடிகளைக் கொட்டி ஆடம்பர அரங்கம் அமைப்பது தேவைதானா? யாரை மகிழ்விக்க இந்த கலையரங்கம்?
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் தொடர்பாக எந்தக் கோரிக்கை வைத்தாலும் நிதிநிலைமை பொறுத்து செய்யப்படும் என்று தட்டிக்கழிக்கும் திமுக அரசு, கலைஞர் பேனா, கலைஞர் நூலகம், கலைஞர் அரங்கம் என்று தங்கள் கட்சியின் முன்னாள் தலைவரின் நினைவைப் போற்றவும், கார் பந்தயம் நடத்தவும் பல நூறு கோடிகளைக் கொட்டுவதற்கு மட்டும் ஏது நிதி? யாருடைய நிதி?
மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? இந்திய ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும் திமுக அரசிடம் இப்படி வீணாக விரயம் செய்ய மட்டும் நிதி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்குப் பதில் உண்டா?
அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வலிந்து திணிக்கப்படும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி நிறுவப்படும் இதுபோன்ற வீண் விரய விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நீண்டகாலம் நிலைக்காது! மக்கள் மனதிலும் ஒருபோதும் நிலைக்காது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சமூக அவலங்களைப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் தம்பி சைமன் அவர்களைப் பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதா?
@CMOTamilnadu@mkstalin
திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சைமன் அவர்களைப் பொய்வழக்கின் கீழ் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 01-12-2024 அன்று ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி, மயிலாப்பூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் கனிமவளக்கொள்ளை குறித்துப் பேசியதற்காக அரசியல் பழிவாங்கல் நோக்கோடு, தம்பி சைமன் மீது பொய்யாக வழக்குத் தொடுத்து சிறைப்படுத்தியிருப்பது வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆத்தூர் தொகுதிக்குள் சட்டவிரோதமாக நடக்கும் மிதமிஞ்சிய மது விற்பனையையும், கட்டுக்கடங்காத கனிமவளக் கொள்ளையையும் தடுத்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய திராணியற்ற திமுக அரசு, அச்சமூக அவலங்களுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் பேசியதற்காக தம்பி சைமனைக் கைதுசெய்திருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். சிறைப்பட்டிருக்கும் தம்பி சைமனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி முழுமையாக துணைநிற்குமெனவும், அவரை விடுவிப்பதற்குரிய சட்டப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மேற்கொள்ளுமெனவும் இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன்.
அதிகாரத்திமிரிலும், பதவி மமதையிலும் எதேச்சதிக்காரப்போக்கோடு செயல்படும் மக்கள் விரோத திமுக அரசின் கொடுங்கோன்மைப் போக்குக்கும், அதிகார அத்துமீறல்களுக்கும் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
ஆகவே, தம்பி சைமன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்று 08/12/2024 காலை தஞ்சை சட்டமன்றத் தொகுதி சிங்கப்பெருமாள் குளம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வை முன்னெடுத்து சிறப்பித்த மாநில, மாவட்ட,தொகுதி, நகர,பகுதி,கிளை,மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த எனது தம்பி,தங்கைகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.💐
தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த 'ராஜ்யோத்சவா' விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, 'பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர், ஆனால் கன்னடர்கள் அப்படி இருக்கவில்லை', எனவும் பெங்களூருவில் தமிழர்கள் உள்ளிட்ட பிறமொழியினர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது எனவும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமே அடிமைப்பட்டிருந்தனர். தமிழர்கள் மட்டும் அடிமைப்பட்டு இருந்ததுபோல் நீதிபதி அருண் பேசியிருப்பது வேண்டுமென்றே தமிழர்களைச் சீண்டிப்பார்க்கும் சுடுசொல்லாகும்.
தமிழ் மக்களின் விடுதலை உணர்வானது மற்ற மாநிலத்தவரின் உணர்வுக்கு சற்றும் சளைத்ததல்ல. இந்த நாட்டின் விடுதலைக்குப் போராடி உயிர் ஈகம் புரிந்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண் தமிழர் மண். பெங்களூரு, குடகு உள்ளிட்ட தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்துவரும் பல நிலப்பகுதிகளை மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பின்போது தமிழ்நாடு இழந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்களின் உழைப்பைச்சுரண்டி அவர்களின் குருதியில் பொன் விளைந்த நிலம் கோலார் பகுதியாகும். எனவே பூர்வகுடி தமிழர்களை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும், தமிழர்கள் ஆங்கிலேயருக்கு ஆயுட்கால அடிமைகளாக இருந்ததுபோலவும் நீதிபதி இந்திரகுமார் அருண் பேசி இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? கர்நாடக நீதிபதி கூறிய கருத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாக கூறி, கொதித்தெழுந்து தனிப்படை அமைத்து சிறையிலடைத்த திமுக அரசு தமிழர்களை இழிவுப்படுத்திய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தமிழர்கள் என்றால் அமைதிகாப்போம், மற்ற இனத்தவர்களுக்காகத் துடிதுடிப்போம் என்றால் தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது யாருக்கான ஆட்சி என்பது இதிலிருந்தே தெளிவாகிறது.
ஆகவே, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி