இது ஒரு Planned Script என்பதை புரிந்துக்கொள்ள முடியாதளவுக்கா இங்கே நாங்கெல்லாம் அரசியல் பேசுறோம்?
சங்கவியை வைத்து திரையிலும், Emotional Manipulation வைத்து அரசியலிலும்
மேலே வந்த உன்னால இந்தளவுக்கு யோசிக்க முடியும் போது, நாங்க இது என்ன, எதுக்குன்னு கூடவா யோசிக்க மாட்டோம்?
தலைவர் கலைஞரை உன்னை மாதிரி ஆட்கள் கருணாநிதி என்று பெயர் சொல்லி விளிப்பதால் அவரது புகழுக்காே பெருமைக்காே எந்த ஒரு பங்கமும் வரப்போவதில்லை.
அப்படி.அழைப்பதற்கு நீ மன்னிப்பும் கேட்கத் தேவையில்லை. மனதில் இல்லாத சொல் வாயில் வராது.
ராமசந்திரன், ஜெயலலிதா என்று சொல்லி விளிக்க முதுகெலும்பில்லாதவர்கள் எம்ஜிஆர் என்றும், அம்மா என்றும் தங்களை பழக்கிக்கொண்டு, கலைஞர் என்று வரும் போது மட்டும் தங்கள் சாதி ஆணவ கொடுக்கை மறைக்க முடியாமல் கருணாநிதி என்று சொல்லி ஆனந்தமடைவதை பார்த்தே வளர்ந்தவர்கள் நாங்கள்.
உன்னை மாதிரியான தறுதலைகள் செய்யும் இம்மாதிரியான அவமதிப்புகளும் அலட்சியங்களும் தான் திமுகவினருக்கான உரம்.
தொடர்ந்து செய்!
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எங்களை சீண்டு!!
மறந்துவிடாதே!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
மலை குலைந்தாலும் நிலை குலையாதவன் திமுக தொண்டன். அவனது மன உறுதியையே கழகத் தலைவரின் தோல்வி கலைத்துப் போட்டு விட்டது.
கடுமையான நடவடிக்கைகளும், உறுதியான சீரமைப்புகளும்தான்
தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
இன்றைய மா.செ கூட்டம் அதன் முதல் படியாக இருக்க வேண்டும்.
@mkstalin 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
இனிமேலும் வரும் காலங்களில் பச்சோந்தி காங்கிரஸ் நம்மோடு நமது தலைமை சேர்த்தால் .. வேண்டாம் தலைவரே உங்களுக்கு தெரியும் தொண்டர்களின் வலியை..
@arivalayam@DMKITwing@DMK_Updates@mkstalin
அரசியலில் திருப்புமுனை விஜய்க்கு திமுக வைத்த ஆப்பு...🔥
ஒரு வேல காங்கிரஸ் விஜய் கட்சிக்கு ஆதரவு கரம் நீட்டினாள்,இது தான் நடக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்டது
மம்தா, அகிலேஷ், லாலு பிரசாத், சந்திர சேகர், நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் போன்ற காங்கிரஸை விரும்பாத கட்சிகளை ஒன்றினைத்து திமுக வேற மாதிரியான ஆட்டத்தை தொடங்கும்..
ஒரு அமைச்சர் பதவிக்கு ஆசை பட்டால் பின்பு இந்தியாவில் மிச்சம் இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரஸும் காணாமல் போகும்💯
பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழும் திமுக!
திமுக தனது நீண்டகால அரசியல் வரலாற்றில் சந்திக்காத வீழ்ச்சிகளோ, எதிர்நீச்சல்களோ இல்லை. எத்தனையோ முறை சறுக்கல்களைக் கண்டபோதும், மிக மோசமான தோல்விகளை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அந்தத் தோல்விக்கான காரணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, தவறுகளைத் திருத்திக் கொண்டு பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் மேலெழுந்து வெற்றிப் பெற்றிருக்கிறது.
வெற்றி பெறும்போது துள்ளிக் குதிப்பதும், தோல்வி வரும்போது துவண்டு போவதும் திமுகவின் இயல்பு அல்ல. மாறாக, பின்னடைவுகளைப் பாடமாக ஏற்று, புத்துயிர்ப்பு பெற்றுத் திரும்பவும் எழும் அந்தத் தெம்பும் திராணியும் திமுகவிடம் எப்போதும் இருக்கிறது.
களத்தில் வீழ்வது என்பது முடிவல்ல, அது இன்னும் ஆவேசமாக எழுவதற்கான ஒரு இடைவேளை என்பதை இந்த இயக்கம் பலமுறை மெய்ப்பித்துள்ளது.
ஆயிரக்கணக்கான போராட்டங்கள், நெருக்கடி நிலை காலத்தின் அடக்குமுறைகள் என அனைத்தையும் கடந்து வந்த இந்த பேரியக்கம், காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் வல்லமை படைத்தது. அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பும், கொள்கைப் பிடிப்பும் தான் இக்கட்டான சூழல்களில் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய அரணாக விளங்குகின்றன.
விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வளர்ச்சிப்படிக்கட்டுகளாக மாற்றி புதிய வியூகங்களை வகுப்பதில் திமுக எப்போதும் முன்னோடியாகத் திகழும்.
சவால்கள் நிறைந்த தற்போதைய அரசியல் சூழலிலும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்கும் வல்லமை இந்த இயக்கத்திற்கு உண்டு. பின்னடைவுகளைக் கண்டு அஞ்சாத மன உறுதியோடும், காலத்தின் மாற்றத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் நுட்பத்தோடும் திமுக அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும்.
நிச்சயமாக, திமுக தலைவர் தலைமையில் இந்த இயக்கம் இன்னும் வலிமையுடன் பீடுநடை போடும்!
Proud To be DMKian always 💪🖤♥️