முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது தொடர்பாக கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் பேட்டி.
ஆதாரமில்லாமல் அரசியலுக்காக தொடரப்பட்ட வழக்கு என்ற வாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
திமுக மீது களங்கம் சுமத்துவதற்காகப் பயன்படுத்திய ‘ஆட்சியைக் கவிழ்க்க’ என்ற வார்த்தையை நீக்கி பின்வாங்கிய தவெக அரசு.
இன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் திரு. செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர்க்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அவர்கள் தன்னிடம் ஒரு நபர் ‘நீங்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும். உங்க கொறடா என்ன சொன்னாலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் உங்களுக்கு நாங்கள் முப்பத்தைந்து கோடி ரூபாய் தருகிறோம்’ என்று சொல்லி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பு வாதாடும் போது முன்வைத்தது, 26 ஆம் தேதி ஜூன் மாதம் ஏறக்குறைய இரவு பத்து மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக பெயர் குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனா இருபத்தி ஒன்பதாம் தேதி வரைக்கும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அது குறித்து எந்த புகாரும் யாரிடமும் தரவில்லை. இரண்டு நாட்களாக எப்படி புகார் அளிக்கலாம் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தலாம் என யோசித்து புகாரை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.
நாங்க எடுத்து சொன்னது திரு. செந்தில்பாலாஜி அவர்களோ இல்லை அவர்களின் தம்பி அசோக்குமாருக்கும் இதில் தொடர்பு என நேரடியான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாருமே காவல்துறையினர்கிட்ட கொடுக்கப்பட்ட நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத, அனுமதிக்கப்படக் கூடாத ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அதில்தான் இவங்க பெயர் எல்லாம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காங்க. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக செய்துள்ளரகள் என கூறினோம். அரசு தரப்புல என்ன சொன்னாங்கன்னா, ஒரு நாள்ல திருநாவுக்கரசும், திரு. செந்தில்பாலாஜி அவர்களும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க. ஒரு இடத்துல இல்ல. இரண்டு பேரும் ஒரே நாளில் ஈரோட்டுல இருந்திருக்காங்க என்பது தான் அதை தவிர அவங்ககிட்ட எந்த சாட்சியமும் இல்ல. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திரு. செந்தில் பாலாஜி குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில். நேற்று வரைக்கும் அரசுத் தரப்பில் இருந்து அரசைக் கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.
அப்படியே செய்திகளும் வெளியிட்டன. ஆனா சபாநாயகரை அனைத்து கட்சியும் இணைந்து தான் தேர்ந்தெடுத்தது. அப்படியே சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துல வாக்களிப்பது என்பது Automatic ஆ stopping the government ஆகாது. அதனால் அரசை கவிழ்க்க முடியாது. நாங்க சபாநாயகர் தேர்தல்ல ஆதரிச்சு ஒருமித்த கருத்தோடு தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும் போது அரசை கவிழ்க்கறதா சொல்வது எல்லாம் புகார்ல அவங்களே எழுதி கொண்டது. அந்த புகார்லயே வந்து அந்த திருநாவுக்கரசு அரசை கவிழ்க்கனும்னு எங்கேயும் சொன்னதாக தகவல் இல்லை.
ஆனால் காவல் துறையினரும், அரசு செய்திக்குறிப்புகளிலும் அரசை கவிழ்க்கும் என்ற வார்த்தையை சேர்த்து எழுதிக்கிட்டே வந்தாங்க. இதை நாங்க நேத்து principle செஷன்ஸ் கோர்ட்டில் எடுத்து வாதிட்ட உடனே இன்று திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும், திரு. அசோக்குமாருக்கும். ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட counter affidavit இல் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள். அப்ப அந்த மொத்த முதல் தகவல் அறிக்கையுமே நீர்த்து போய். சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களே இல்லாம இருப்பதால் நீதிமன்றம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
அரசியலே வேண்டாம் என்று போன மனுஷனை, திரும்ப வர வச்சு TVK பிராடுத்தனங்களை பொழக்க வச்சிருச்சு விருதை மகள் மூக்குத்தி அம்மனின் புளுகு மூட்ட புள்ளிவிவர ரீல்ஸ்...😂
GENZ ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் வீட்டை இரவு 12.00 மணி அளவில் தூமசத்தியின் அரசு போலீஸ் சட்டப்படியான ஆவணங்கள் இல்லாமல் சோதனையிட முற்றுகை..
ஷோபா-சந்திரசேகர் திருமணத்தில் பங்கேற்ற விசைய் தனது அப்பனை அருளானந்தன் வீட்டில் தேட முயற்சி பண்ணியிருக்கான் பாருங்க மக்களே!
🤣
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
சார் தான் போளூர் தவெக MLA.. என்ன அதிகார திமிர் பாருங்க.
இல்ல எனக்கு புரியல?
MLA முன்னாடி கை கட்டி வாய் பொத்தி துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் நிக்கணுமா!!?
சிரிக்க கூடாதாமா!?
'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா?
#Answer
கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சியில், வெறும் 10 வயது நிரம்பிய பச்சிளம் சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் குளத்தில் வீசப்பட்டிருக்கும் சம்பவம், நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியையும், சொல்ல முடியாத வேதனையையும் அளிக்கிறது.. அவரின் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன்..
ஒரு மலராக மலர வேண்டிய குழந்தையின் உயிரை இவ்வளவு கொடூரமாக பறித்துள்ள அந்த மிருகத்தனமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்தவித தாமதமுமின்றி அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்..
புதிய அரசு பொறுப்பேற்ற பின், கடந்த இரண்டு வாரங்களாக நாம் செய்திகளில் காணும் பல்வேறு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு குறித்த மக்களின் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன..
மக்களின் உயிரும், பாதுகாப்பும் அரசின் முதன்மை பொறுப்பு என்பதை இந்த புதிய அரசு உணர்ந்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்..