"எனக்காக அனுதாபப்படுவதை நான் ஒரு நாளும் விரும்பவில்லை.
நீதிக்காக அனுதாபப்படுங்கள்.
ஏனெனில் அதுதான் மிக மோசமாகத் தற்போது காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது."
- பேரறிவாளன்
#31YearsOfInjustice#StandWithArputhamAmmal
தொடர் ஓட்டம்,வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டு��் என ஒற்றை இலக்கே காரணம்.
#31YearsOfInjustice
https://t.co/ngnrJspItl
பாடம் எடுப்பது நோக்கமல்ல @DevaTRZ .. ஜனாதிபதி பதில் தர சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை... தரப்போவதும் இல்லை... நீங்கள் சொல்வது போல் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது மட்டுமே ஒரே வழி... தளபதியும் அவ்வழி தெரிவு செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை..
அரசமைப்பு உறுப்பு 161ன்கீழான மாநில உரிமையை ஆளுநர் வழியே மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டு
09.09.2018 அன்று ஏழு தமிழர் விடுதலைக்காக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றினோம் என்று முதல்வர் திரு.பழனிச்சாமி சொல்வதைவிட ஆக பெரிய அரசியல் மோசடி ��ேறில்லை.
NEET, GST, CAA, இட ஒதுக்கீடு... என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தக்க வைத்த உரிமைகளை அடுத்தடுத்து இழந்து தற்போதைய திரு. பழனிச்சாமி அரசு இறுதியில் அரசமைப்பு உறுப்பு 161 மாநில உரிமையையும் ஒப்புக்கொடுத்துவிட்டது வேதனை.
#Art161_StateRights
தமிழக அமைச்சரவைக்கு அதிகாரமில்லை என சட்டவிரோதமாக மிகத்தெளிவாக ஆளுநர் ஜனவரி 21ல் சொல்லிவிட்டார்.
அப்படி சொல்ல அதிகாரம் இல்லை; ஆளுநர் முடிவு தவறென்று மாநில அரசு அறிவிக்கவில்லை. சட்ட நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.
இவை இல்லாமல் விடுதலை சாத்தியமே இல்லை.
@CMOTamilNadu@drramadoss
15.9.18ல் "மத்திய உள்துறைக்கு எந்த கோப்பையும் அனுப்பவில்லை; அரசமைப்பு சட்டப்படி முடிவெடுப்பேன்" என மறுப்பு அறிக்கை தந்தார் ��ளுநர்.
25.1.21ல் "அரசமைப்புக்கு எதிராக" மத்திய உள்துறைக்கு கோப்புகளை அனுப்பிவிட்டார்.
இடையே 28 மாதங்களாக நிகழ்த்தப்பட்ட நாடகத்திற்கு இன்னும் விடையில்லை.
"அரசமைப்பு உறுப்பு 161 என்பது பேரறிவாளனின் விடுதலை பற்றியது மட்டுமல்ல ஒரு மாநில அரசின் இறையாண்மை அதிகாரம்.
அமைச்சரவையின் 09.09.2018 முடிவை ஆளுநர் உதாசீனம் செய்வது மாநில மக்களை அவமதி���்கும் செயல்."
என்பதை @thewire_in சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.
நன்றி !
#Art161_StateRights
With no real action being taken regarding the release of A.G. Perarivalan and six others in the Rajiv Gandhi assassination case, the state government is undoing years of Jayalalithaa’s work towards championing Tamil Nadu's federal rights.
https://t.co/6aVxFk1x3E
நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே.
"உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது.
இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்?
Missed Call Campaign தொடங்கப்பட்ட நாளே பல்லாயிரக்கணக்கில் ஆதரவு குரல்கள் ஒலித்த நிலையில் இன்றும் தொடர்கிறது.
உங்களது ஆதரவு குரல்கள் அரசு, ஆளுநரின் செவிகளை சென்றடையும் என நம்புகிறேன்.
பெருகட்டும் உங்கள் ஆதரவு என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
90 99 52 66 33 📞
#ReleasePerarivalan
கைப்பந்தாட்ட விதிகளை கால்பந்தாட்டத்தில் பின் பற்றலாமா?
தவறு எனத் தெரிந்து விதிகள் திருத்தப் பட்டபின்; தவறான விதிகளால் தண்டிக்கப்பட்ட வீரர்களுக்கு நீதி வழங்காதது ஏன்?
- தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கேள்வி.
#TNCM_ReleasePerarivalan
https://t.co/hXfUvKlVnv
இந்திய நாட்டின் முதல் குடிமகனான RSSஐ சேர்ந்த இந்துத்துவவாதி ராம்நாத் கோவிந்தை அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு ஏன் அழைக்காமல் புறக்கணித்தனர் என்று சிந்திக்கத் தொடங்கும் நாளே பார்ப்பனியத்திடமிருந்து இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலை.
#LandOfRavanan