பரமக்குடி அரசு மருத்துவமனை அருகே ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடந்த மோதலைத் தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் கண்ணகி அவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் பொறுப்பற்ற தவெக ஆட்சியில் இதுநாள் வரை பொதுமக்கள்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்தார்கள்; இப்போது காவலர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. தவெக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் தமிழ்நாடு அன்றாடம் அமைதியை இழந்துகொண்டிருக்கிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தின் கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை திருமிகு. அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
அவர் மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க விழைகிறேன்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை திருமிகு. வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், திருமிகு. பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தி வரும் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @iparanthamen அவர்களை ஆதரித்து கருங்குழி பகுதியில் நடந்த மகளிர் சந்திப்பு நிகழ்ச்சியில் வாக்கு சேகரித்தேன்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் அவல ஆட்சிக்கு தங்கள் வாக்குகளால் பதிலடி தர தயாராக இருக்கிறார்கள் பெண்கள். கருங்குழியில் திரண்டிருந்த மகளிரின் பேராதரவே மதுராந்தகத்தில் நமது வெற்றியை உறுதி செய்து விட்டது.
#VoteForDMK
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் @iparanthamen அவர்களை ஆதரித்து, மதுராந்தகம் - கடப்பேரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டு ஆதரவு திரட்டினேன்.
அரிவாள் வெட்டு, மின்வெட்டு என மக்களை வாட்டி வதைக்கும் வெட்டுக் கழகத்திற்கு படுதோல்வியே கிடைக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், கழக வேட்பாளருக்கு மக்கள் தங்களது ஆதரவை வழங்கினர்.
#VoteForDMK
கழகத்தின் வெற்றி வேட்பாளர் @iparanthamen அவர்களை ஆதரித்து, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.
தூய சக்தி என்று தம்பட்டம் அடித்துவிட்டு, அடுத்தக் கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் திருடி மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணித்திருக்கும் திருட்டு சக்திக்குத் தோல்வியைப் பரிசளிக்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
#VoteForDMK
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. @iparanthamen அவர்களை ஆதரித்து, பெரும்பேர்கண்டிகை பகுதியில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் பங்கேற்றேன்.
"பாஜக-மோடி" என்று சொல்வதற்குக் கூட திராணியில்லாமல் அஞ்சி நடுங்கி, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க மதுராந்தகம் தொகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
#VoteForDMK
எனது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணங்களாக மிக இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவது உள்ளிட்ட பல காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சன் டிவி நிறுவனத்தை அணுகினோம்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவாக சன் டிவி சார்பில் வழங்கப்படும் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.3.66 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கான காசோலையை சன் டிவி சார்பாக திருமிகு. காவேரி கலாநிதி மாறன் அவர்கள், @CRYINDIA தொண்டு அமைப்பிற்கு வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். குழந்தைகளின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இப்பணிகள் அப்பகுதிகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் திருமிகு. செல்வி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு . @iparanthamen அவர்களை ஆதரித்து ஒரத்தி பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, சொன்னதை நிறைவேற்றாத ரீல்ஸ் ஆட்சிக்கு படுதோல்விதான் பதில் என்பதைப் பொதுமக்கள் தங்களது திரளான பங்கேற்பின் மூலம் வெளிப்படுத்தினர்.
#VoteForDMK
மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது?
உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை சவிதா ஸ்ரீ தங்கப் பதக்கமும், வீரர்கள் குகேஷ் வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும், இந்திய அணி ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம்பெற்றது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் பெருமையை உலகளவில் நிலைநாட்டிய தமிழ்நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rpraggnachess@DGukesh@chessvaishali@savithachess
தாராபுரத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, இன்று கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணியினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, தாராபுரம் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில், ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது.
தி.மு.கழகத்துடன் இணைந்து, தாராபுரம் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவார்கள்!
#VoteForDMK
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானூர்பாளையம் பகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. எஸ். சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அரசியல் பேரம் பேசும் தவெகவுக்கு தாராபுரம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமிகு. எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து கோவிந்தாபுரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டேன்.
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்து மக்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கும் அவல ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் படுதோல்வியைப் பரிசளிப்பார்கள்.
தாராபுரத்தில் உதயசூரியன் உதிப்பதை மக்களின் ஆர்வமான பங்கேற்பு உறுதி செய்தது.
#VoteForDMK
மணக்கடவு பகுதியில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திருமிகு S.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்.
மக்களை வஞ்சித்து, வாழ்வாதாரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் திறனற்ற தவெக ஆட்சிக்கு தோல்வியை பரிசளிக்க மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். மணக்கடவு மக்களின் எழுச்சிமிக்க வரவேற்பு தாராபுரத்தில் உதயசூரியனின் உதயத்தை உரக்கச் சொல்கிறது!
#VoteForDMK
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு S.சுகன்யா அவர்களை ஆதரித்துக் கிளாங்குண்டல் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டேன்.
வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மக்களைத் தவிக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கும் விளம்பர ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கிளாங்குண்டலில் வீசும் ஆதரவு அலை தாராபுரத்தில் உதயசூரியனின் வெற்றியை உறுதி செய்கிறது!
#VoteForDMK
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.
இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி.