புத்தர் சிலை வைத்தவர்கள் இனவாதிகள். OK. திலீபன் சிலை வைத்தவர்கள் இனவாதிகள் இல்லையா?
இரண்டு இனவாத குழுக்களினதும் நோக்கம் ஒன்று தான்.
ஒரு சிலையை வைத்து சர்ச்சையை உண்டாக்கி இன கலவரம் வரை கொண்டு செல்வது.
இவர்களது மதத்தில் புத்தர் மாதிரி ஒருவர் இல்லை என்பதால் திலீபனை தெய்வம் ஆக்கி விட்டார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
இங்கே புனிதம் என்று எதுவும் கிடையாது.
எதை எல்லாம் நீங்கள் புனிதப் படுத்த தொடங்குகிறீர்களோ அங்கே ஒரு இன/மத அடிப்படைவாத அரசியல் ஆரம்பிக்கிறது.
எம் மத்தியில் சிலர் இனவாதிகளை பகைக்க விரும்பாமல் அவர்களுக்கு விட்டுக் கொடுத்து நடக்கிறார்கள். அதை பற்றிக் கேட்டால், "சமூகம் அப்படித் தான் இருக்கிறது! இனவாத கருத்து சொல்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்றால் சனத்தொகையில் 20% குறைந்து விடும்!!" என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்.
அதே நேரம்,
"ஏன் தற்போது ஆட்சியில் உள்ள NPP அரசாங்கம் கடும் போக்காக நடந்து கொள்ளவில்லை?"
"ஏன் இனவாதிகள் எல்லோரையும் பிடித்து தூக்கில் போடவில்லை?"
என்ற மாதிரி கேள்வி கேட்பது ஒரு இரட்டை வேடம்.
Hypocrisy.
Nadarajah Kuruparan:
//"இலங்கையின் அரசியல், அநுரவுக்கு முன் அநுரவுக்கு பின் என துண்டாடப்பட்டிருக்கிறது."
"கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர முனைகிறார்கள். நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம்"
ஜே.வி.பி தேசிய மக்கள் சக்த்தியாக தன்னை உருமாற்றியிருக்கிறது. அக்கட்சி JVP அல்லாத ஹரினி அமரசூரியவையும், மொடரேற்றரான அனுரவையும் முன்னிலைப்படுத்துகிறது. தமது தலைவர் றோகண விஜயவீரவை, தமது வீரப்பிரதாபங்களை பேசி மகிழ்வதை NPP தவிர்க்கிறது.
“கடந்த 35 ஆண்டுகளாக சிறு ஆயுதங்களையேனும் நாங்கள் கையில் எடுக்கவில்லை. 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்ட எமது 08 சகோதரர்களை கொலை செய்தனர். எனினும் நாங்கள் வில்லையேனும் கையில் எடுக்கவில்லை. பயத்தினால் அல்ல. ஆயுதத்தில் உள்ள பலம் தொடர்பில் எங்களுக்கு நன்கு தெரியும். அதனை கையில் எடுத்தால் மீண்டும் கீழே வைக்க முடியாது. அது கிற்றாரில்லை என்கிறார் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா.
JVP யின் 1971 கிளர்ச்சியை அடக்கியது இந்திய ராணுவம். 1988 – 1989 இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் இந்தியாவை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை JVP கடுமையாக எதிர்த்தது. இந்தியாவுக்கும் JVP க்கும் ஏறத்தாள அரை நுற்றாண்டுகால பகைமை தொர்ந்தது.
முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவுடன் செய்து கொண்ட செய்துகொள்ள முற்பட்ட ஒப்பந்தகளை JVP நிராகத்தது.
அதே JVP யின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும், ஜனாதிபதியும், பிரதமரும் மோடியை வரவளைத்து கூடிக் குலாவி பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இந்தியாவை, சீனாவை, மேலைத்தேயத்தை, அமெரிக்காவை, ஐரோப்பிய ஒன்றியத்தை, சர்வதேச நிதி நிறுவனங்களை அனுர தலைமையிலான அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் கையாள்கிறது.
“சர்வதேசம் எமது அரசாங்கத்தை ஆதரிக்கிறது அதனால் அட்சிக் கவிழ்ப்பு என்பதற்கு இடமே இல்லை” என ரில்வின் சில்வா அறைகூவல் விடுத்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்த்தி தமிழரசிடம் தோல்வி கண்டது. தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு NPP புதிதாக முனைகிறது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் கடத்தலுக்கும் பிள்ளையானின் கைதிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பிருப்பதற்குரிய போதிய ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் கூறியிருக்கிறார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றின் மூலம் கிழக்கையும் ஒட்டுமொத்த நாட்டையும், கத்தோலிக்கர்களையும் NPP திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
எவரும் நெருங்க முடியாது என கருதப்பட்ட ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு துணைபோனவர்கள் என முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைதுகள் தொடர்கின்றன.
காவற்துறை மா அதிபர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டு பதவி பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மிஸ்ரர் கிளீன் என கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு அணைக்குழு சமன் அனுப்பியிருக்கிறது.
வடக்கில் வீதிகள் திறக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்படுகின்றன. ஆலயத் திருவிழாக்களில் மல்லிகை பூக்களுடன் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இரண்டாவது தடவையாக வடக்கிற்கு செல்கிறார் ஜனாதிபதி.
“எமது மகன் வருவான் என தினமும் இரவு இரவாக கதவை திறந்து வைத்து காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கில் வாழ்ந்த அனைத்து அம்மாக்களுக்கும் நாம் நீதியை பெற்றுக்கொடுப்போம்” என பிமல் ரட்நாயக்கா உறுதியளித்திருக்கிறார்.
இவை எல்லாம் உள்ளுராட்சி தேர்தலில் எதிரொலிக்காது என நாம் நம்புகிறோமா?
தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மலையகத்திலும் கூட அநுரவுக்கோ, அவரது அரசாங்கத்திற்கோ, தேசிய மக்கள் சக்த்திக்கோ ஈடுகொடுக்கக் கூடிய தலைவர்களோ, கட்சிகளோ தற்போது இல்லை அனைத்தையும் அநுர சுனாமி அடித்துச் சென்றுவிட்டது.
இப்போது இலங்கையின் அரசியல், அநுரவுக்கு முன் அநுரவுக்கு பின் என துண்டாடப்பட்டிருக்கிறது.
அதனால் தமிழ், முஸ்லீம், மலையக கட்சிகளும் அவற்றின் அரசியல் பிரமுகர்களும், அநுரவுக்கு முந்தைய அரசியலையே அநுரவுக்கு பிந்தைய காலத்திலும் தொடர்வது சாத்தியமற்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆக நம்மை நாம் மீளாய்வு செய்ய வேண்டும், வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மீளவேண்டும், அதனை சுட்டிக்காட்ட முற்படும் போது அதனைப் புரியாது எம்மீது முத்திரை குத்துவதில் அர்த்தமில்லை.
கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர முனைகிறார்கள். நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம்.// #ஞாபகங்கள்
Sri Lanka’s strategic location in the Indian Ocean and the Indo-Pacific has placed it at the center of growing geopolitical interest, particularly amid the India-China rivalry and the increasing involvement of global powers like the United States, Japan, and Australia. While some advocate for deeper alliances with India or institutionalised ties with China, others emphasise the importance of non-alignment or multi-alignment. The key recommendation is to avoid excessive dependence on any single country or bloc. Past reliance on China sparked debates about debt-trap diplomacy, and while this argument is contested, the risk of over-dependence remains relevant. With India’s renewed interest and significant investments in Sri Lanka, the same caution applies. A balanced, pragmatic approach to foreign policy, one that manages dependencies and ensures no single party exerts undue influence is essential.
இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது!
யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் ஹரிணி, மறைந்த கம்யூனிச தோழர் மணியம் வீட்டுக்கு விஜயம் செய்துள்ளார். தோழர் மணியம், சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுபினர். அதே கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி தான் பிற்காலத்தில் JVP என்ற பெயரில் இயங்கியது.
இருப்பினும், அன்றைய JVP யினருக்கு, தாய்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்புகள் இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தில், குறிப்பாக சுன்னாகம் பகுதியில் JVP செயற்பட்டு வந்தது. பிற்காலத்தில், JVP யின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கிய அரச அடக்குமுறை காரணமாக யாழ்ப்பாண கம்யூனிஸ்ட் தோழர் களுடனான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டு விட்டன.
அண்மைக்காலமாக JVP பல வெகுஜன அமைப்புகளை இணைத்து NPP என்ற பெயரில் தேர்தலில் போட்டி இட்டதும், பிரதமர் ஹரிணி NPP சார்பில் போட்டியிட்டு அதிகப் படியான மக்களின் விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
தோழர் மணியம் குறித்து பேஸ்புக்கில் விஜய பாஸ்கரன் எழுதிய சுருக்கமான பதிவு:
//தோழர் மணியம் மறுபடியும் வந்துவிட்டார்.
-----------------------------------------------
தோழர் கே ஏ சுப்பிரமணியம் வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர்.
சில தினங்கள் முன்பாக அமிர்தலிங்கம் நினைவாக அவரது பிள்ளைகள் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்றி ஆளுனர் வேதநாயகன் அவர்களால் திறந்து வைத்தனர். இந்த இரண்டு நிலையங்களும் ஒரே பகுதிகளில் அமைந்துள்ளன.
1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் அவர்களும் முக்கியமானவர். இதற்காக நடந்த ஊர்வலத்தில் மணியம் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் படையை தாக்குதலுக்கு எஸ்.பி. சுந்தரலிங்கம் முக்கிய காரணம். அதன் பின்னணியில் அமிர்தலிங்கம், அன்றைய அமைச்சர் எம் திருச்செல்வம்( நீலனின் அப்பா) இருந்தார்கள்.
இந்த போராட்டம் உச்சம் பெற மணியம் போன்ற தோழர்களும் பின்னணியில் நின்றார்கள். இதை அறிந்த அமிர்தலிங்கம் இது கம்யூனிச போராட்டம் என பாராளுமன்றத்தில் கத்தினார்.
சங்கானை சங்காயாக மாறிவிட்டதாக பேசினார்.இந்த சூழ்ச்சிகரமான பேச்சு தோழர் மணியத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.1970 தேர்தலில் வட்டுக்கோட்டையில் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு தோழர் மணியமும் ஒரு காரண கர்த்தா.
காலம் செல்ல கம்யூனிச அமைப்புகள் உடைந்தபோதும் மணியம் வறுமையோடு அதே பாதையில் பயணித்தார். பல உயிராபத்துகளையும் சந்தித்தார்.
அன்று தோழர்கள் மீது பொலிஸ் ஏவ காரணமாக இருந்த அமிர்தலிங்கம் பின்னாளில் அதே பொலிஸ் அராஜகத்தை எதிர்த்து நிற்கும் நிலைக்கு ஆளானார். இறுதியில் சுட்டுத் தள்ளப்பட்டார். அந்தக் கொலைக்காக பரிதாபம் கொள்ள இன்றுவரை யாருமே இல்லை.
ஆனால் இன்று மணியம் வாழ்ந்த இடத்தைத் தேடி கடற்தொழில் அமைச்சர் நாட்டின் பிரதமர் என தேடி வந்துள்ளனர். மறைந்துபோன தோழர் மணியம் மீண்டும் எழுந்துவிட்டார். மணியம் அவர்களின் வரலாறு மீண்டு வருகிறது. அவரோடு கூடவே பயணித்த அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்துள்ளது.//
- Vijaya Baskaran
Professor Gomika Udugamasooriya from University of Houston a proud holder of 10 patent licences joined the R&D team of NPP. Let's march towards a science driven future..
ஈழ வெள்ளாள- தமிழ் தேசிய வாதிகளுக்கு இவை எல்லாம் கண்ணில் படாது. கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்வார்கள்.
👇👇👇
#casteinjaffna
⚡ 2015 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படித்த பள்ளியில் தண்ணிரில் விஷம் கலந்துள்ளனர் 😢 ⚡
Honored to join the National Summit of NPP Engineering Professionals today (01) at Monarch Imperial, Sri Jayawardanepura. Grateful for your support towards a New National Renaissance with the NPP.
@kalaiy எழுதுமட்டுவாளில் எரித்ததை விற்க முடியாது. யாழ். நூலகம் எரித்ததை இன்னும் விற்க முடியும். நூலகம் எரிக்கபிபடும்போது யாழில் நின்றவர் ரணில். இன்று போட்டிபோட்டபடி மாறி மாறி ரணிலுக்கு சாமரம் வீசப்படுகிறது. அது பற்றி பேசமுடியாத கோழைகள்...தூ...!