சீர்காழி தவெக ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, ஒரு வயதான முதியவரைக் காரில் கடத்தி, தலையைப் பிடித்து இழுத்து, கொடூரமாகத் துன்புறுத்திச் சிரித்துக்கொண்டே செல்பி வீடியோ வெளியிட்டுள்ள இந்த மனிதநேயமற்ற வன்கொடுமைச் செயல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
சமூக வலைதளங்களில் சாதாரண மக்கள் சிறு விமர்சனம் செய்தால் கூடப் போதும், உடனே பாய்ந்து சென்று கைது செய்யும் காவல்துறை, தவெகவினர் நடத்தும் இந்த அப்பட்டமான ரவுடியிசத்தைக் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
தவெக எதிர்கட்சியாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சரையும், அமைச்சர்களையும் "மிகவும் மரியாதையாக" பேசிய காட்சிப் பதிவுகள்.
இன்றைய அரசியல் நாகரீக உபதேசிகள் அன்றைக்கு விடுமுறையில் சென்றிருந்தனர்.
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
https://t.co/6ZAHjmuhJr
The Union Ministry of Civil Aviation’s reply to Honourable MP @PWilsonDMK in the Rajya Sabha confirms that the Government of India granted ‘In-Principle’ approval for the #Parandur Greenfield International #Airport on 07.04.2025, based on TIDCO’s proposal.
This is yet another affirmation that the #DravidianModel Government under the leadership of the then Honourable Chief Minister @mkstalin meticulously secured every statutory and stage-wise approval required to make #Chennai’s long-awaited ***dual independent runway*** Greenfield International Airport a reality. 🛫
Tamil Nadu cannot afford to mortgage its future to political grandstanding.
Chennai urgently needs a 5,000+ acre next generation aviation hub with two “independent parallel” 4000Mtrs+ CodeF runways (not intersecting runways like Meenambakam which curtails runway capacity with lengths of 3600+Mtrs Code4E and 2000+Mtrs Code 3C ), MRO facilities, cargo terminals, aerospace industries, logistics parks, hotels and some room for future expansion.
The site was chosen after extensive technical evaluation, balancing aviation requirements, connectivity, future scalability and minimising overall social and environmental impact.
The #DravidianModel Government recognised the pain and angst of the affected villages and designed one of India’s most comprehensive rehabilitation and compensation packages to ensure affected families receive the best possible support while enabling a project that will benefit generations to come.
Every responsible political party must rise above short-term politics and support transformational infrastructure that will shape Tamil Nadu’s future. Every decision on critical infrastructure must ultimately be guided by science, technical expertise and the long-term interests of Tamil Nadu.
It is deeply unfortunate that a project of such strategic importance now stands clouded by uncertainty, with the Government maintaining silence while media reports speculate that it has been abandoned.
Our State deserves consensus, not political obstruction.
#ParandurAirport #CMMKStalin #TNRising
மக்கள் பிரதிநிதிகளை கைது செய்து, தரங்கெட்ட தனமாக நடத்துகிறார்கள்.,
அடிப்படை தொண்டர்களை கைது செய்து, மரண பயம் காட்டுகிறார்கள்...
இன்னும் point வரட்டும் என்ற அளவில் காத்துக்கொண்டு இருப்பது எதற்காக தலைவரே...
தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பு, கவர்னர் மாளிகை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் - இப்படியெல்லாம் அறிவிப்பு வரணும்னு சிலர் காத்திருக்கிறோம்...
இருக்கும் திமுக MLAக்கள் மொத்த பேரும் ராஜினாமா செய்தால் சட்டமன்றத்தின் நிலை என்ன என்று தலைமை ஆராய்வதாக சிலர் பேசிக்கொண்டிருக்கிறோம்...
காங்கிரசை வீழ்த்த அன்று அண்ணாவே ராஜாஜி உடன் கூட்டணி சேர்ந்தார்., நாம் ஏன் அதை follow செய்யக்கூடாது என்று சிலர் வரலாற்று பொருத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
தலைவரே, கண்டன அறிக்கை இவர்களைப் போன்ற தரங்கெட்டவர்களிடம் எடுபடாது...
வேகமாக செயல்பட வேண்டுகிறோம் @mkstalin@Udhaystalin
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
@VanniTamizhVCK எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்- மாண்புமிகு அமைச்சர் அவர்களே அப்படி உங்களுக்கு எலும்பு இருக்கும் என்றால் எங்களுடைய கூட்டணி (திமுக)தயவால் வெற்றி பெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசுங்கள்
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
#Policerecruitment
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அதைச் சரியாக வழிநடத்தத் தெரியாமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் அவர்களே உங்கள் கைகளில் இருக்கும் பொம்மை விளையாட்டுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முதலில் உங்கள் துறையைச் சீர் செய்யப் பாருங்கள்.
மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை, இன்று பொதுமக்களுக்கே அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. உங்கள் அரசியல் லாபங்களுக்காகவும் சுயவிளம்பரங்களுக்காகவும் காவல்துறையைப் பயன்படுத்தாமல், உண்மையாகவே மக்களைக் காப்பதற்குப் பயன்படுத்துங்கள். இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.