1981 நவம்பர் 27 அன்று, IBM நிறுவன விஞ்ஞானி ஒருவர்,
தன் வீட்டில் சாப்பிட்டு மிஞ்சிய வான்கோழி இறைச்சியை லேபிற்கு எடுத்துவந்து அதன் மீது லேசர் கதிரைப் பாய்ச்சினார்.
அடுத்து நிகழ்ந்த அந்த ஒரு திருப்புமுனையால், இன்று உலகம் முழுவதும் 4 கோடிக்கும் (40M+) அதிகமான மக்கள் மூக்குக்கண்ணாடி இல்லாமல் தெளிவாகப் பார்க்க முடிகிறது!
அவரது பெயர்: ரங்கசுவாமி சீனிவாசன்.
1929 பிப்ரவரி 28 அன்று சென்னையில் (மெட்ராஸ்) பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டங்களை (1949, 1950) முடித்தார். 1953-ல் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று, சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வேதியியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
1961-ல் நியூயார்க்கிலுள்ள IBM ஆராய்ச்சி மையத்தில் இணைந்த அவர், அடுத்த 30 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார்.
அவரது ஆய்வுப் பணி புற ஊதாக் கதிர்கள் (UV light) கரிமப் பொருட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியது. 1981-ல் ‘எக்ஸைமர் லேசர்’ (Excimer laser) மூலம் பிளாஸ்டிக்கில் மிக நுணுக்கமான வடிவங்களைச் செதுக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்தார்.
அப்போது அவரும், அவரது சக ஆராய்ச்சியாளர்களான ஜேம்ஸ் வின் மற்றும் சாமுவேல் ப்ளூமும் ஒரு கேள்வியை எழுப்பினர்:
"மனித திசுக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அப்படியென்றால், இதே லேசர் மூலம் மனித சதையையும் வெட்ட முடியுமா?"
அக்காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட லேசர்கள் வெப்பத்தால் திசுக்களைச் சுட்டுப் பொசுக்கி காயங்களை ஏற்படுத்தின. பரிசோதிக்க ஏதேனும் தேவைப்பட்டபோது, தேங்க்ஸ்கிவிங் விடுமுறை முடிந்து வந்த சீனிவாசன் தன் வீட்டிலிருந்த வான்கோழி இறைச்சியின் குருத்தெலும்பை எடுத்து வந்தார்.
அவர்கள் அதன் மீது லேசரைப் பாய்ச்சினர்.
அந்த வெட்டுக்காயம் மைக்ரோஸ்கோப் அளவில் மிகத் துல்லியமாக இருந்தது. சுட்ட தழும்புகளோ, கருகிய தடயங்களோ, சுற்றியுள்ள திசுக்களுக்கு எந்தச் சேதமோ இல்லை!
இதற்கு ‘Ablative Photodecomposition’ எனப் பெயரிட்டார். லேசர் வெப்பத்தால் திசுக்களை எரிக்காமல், மூலக்கூறு பிணைப்புகளை உடைத்து நுண்ணிய அடுக்குகளாக நீக்கியது.
1983-ல் ஸ்டீபன் ட்ரோக்கல் என்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர் IBM மையத்திற்கு வந்து, இதை மனிதக் கண் விழிப்படலத்தில் (Cornea) பயன்படுத்தும் சோதனையில் இணைந்தார்.
அது மகத்தான வெற்றி பெற்றது!
கண்ணின் வடிவத்தை மாற்றி மூக்குக்கண்ணாடி அணியும் தேவையை நீக்கும் இன்றைய PRK மற்றும் LASIK கண் அறுவை சிகிச்சைகளின் ஆணிவேர் இந்த நிகழ்வுதான்.
130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 22-க்கும் மேற்பட்ட அமெரிக்கக் காப்புரிமைகள். 2002-ல் அமெரிக்காவின் 'National Inventors Hall of Fame'-ல் இணைக்கப்பட்டார். 2013-ல் அதிபர் பராக் ஒபாமா இவருக்கு அமெரிக்காவின் உயரிய 'தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புப் பதக்கத்தை' வழங்கி கௌரவித்தார்.
இன்று அவருக்கு வயது 97.
தான் கொண்டாடிப் பழகாத ஒரு அமெரிக்கப் பண்டிகையின் மிஞ்சிய வான்கோழி இறைச்சியை வைத்து, மனித கண்களைச் சுடாமல் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் நம் சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழர்!👍
மக்கள் பணத்துல 5.5 கோடி செலவுல இவருக்கு Interior Decoration கேக்குது...
சாட்டை மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இவனுக பண்ணுற அட்டூழியங்கள் லாம் வெளியே தெரியாமலே போயிருக்கும்...
தந்தை பெரியார் 🖤❤
பேரறிஞர் பெருந்தகை 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🖤❤
வீடியோ பாருங்க Goosebumps க்கு நான் உத்தரவாதம் 😊😊
தகத்தகாய சூரியன்கள்
கல்லக்குடி கலைஞர் 🙌🙌
நடிகரை எதிர்ப்பது என்பதை வெறும் திமுகவோடு மட்டும் ஒப்பிட்டு, என் பக்கத்தில் வந்து, "திமுக இருநூறு உபி" "ஒப்பாரி" "இன்பநிதிக்கு குண்டி கழுவு" என்கிற கமெண்ட்களை எல்லாம் போட்டு நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என மடச்சாம்பிராணி அன்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். பல முறை சொல்லிவிட்டேன் நடிகர் அரசியலில் செய்திருப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம். மக்கள் மனதில் கீழ்மையை, பொய்களை, அவல மனப்பான்மையை விதைத்து, அதை அறுவடையும் செய்து, அது இப்போது ஒரு நோய் போல பரவி, எங்கு பார்த்தாலும் மக்கள் கீழ்மையான, குரோதமான சொற்களை வீசுமாறு செய்துவிட்டார். எப்படி சொல்றதுன்னே தெரியல, இது கொரோனா போல ஒரு நோய். விஷம்.
எல்லோருக்கும் அரசியல் வேறுபாடுகள் காலம் காலமாக இருந்து தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த ரெண்டு வருடத்தில் நடந்த மாற்றம் என்ன? பொய், பொய், பொய் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட கீழ்மையான அவல நாடகம். அதைப் பரப்பி ஒரு பிரச்சாரம். அதற்கு கேள்வி வந்தால் குருட்டு அடி. சிப்பந்தி நாடகம். தோழிகள் பழைய முகநூல் போல் இல்லை என அங்கலாய்க்கிறார்கள். நண்பர்கள் எப்படி இப்படி எல்லாம் பேசுகிறார்கள்? என வருத்தப்படுகிறார்கள். இதுநாள் வரை அஜித், விஜய் ரசிகர்களுக்குள் நடந்த கீழ்மையான சண்டைகளை இப்போது நாடு முழுக்க பரப்பி விட்டார்கள். இது ஒரு Chaotic Situtaion இனி இப்படித்தான் இருக்கும் என்பது என் அனுமானம். மக்கள் கீழ்மைகளை விரும்பி அணிய துவங்கிட்டார்கள். வெள்ளந்தி மனிதர்களை பொய்களை நிரப்பி மூடர்கள் ஆக்கிவிட்டார்கள். இதுநாள் வரை ஆண்டவர்கள் ஊழல் செய்தார்கள். ஆனால் மக்கள் மனதில் நஞ்சை விதைத்தது இல்லை. இந்த கேடு கெட்டத்தனத்தை நடிகர் வேணுமென்றே தன் சுயலாபத்திற்கு செய்தார்.
இன்னும் விளங்காத நடுநிலை பண்ணையாளர்கள் தயவு செய்து, ஹிந்தி சமூகவலை தளங்களில் நடிகரின் குயுக்தி, முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட பொய்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை கவனித்து பார்த்துவிட்டு எனக்கு சொல்லுங்கள். அத்தனையும் பொய். இந்த மாதிரியான ஒரு குரூரமான மனிதனை கண்டதே இல்லை. இன்னும் ஐந்து ஆண்டுக்குள் 'பத்து' மோடியாக வளர்ந்து நிற்பார். தேர்தலுக்கு ரெண்டுவருடம் முன்பு என்னெல்லாம் தமிழ் நாட்டில் செய்தார்களோ, அதே போல அங்கே தொடங்கிவிட்டார்கள். இதை நாம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்பே நாசக்கேட்டை முழுதாக செய்து முடித்துவிடுவார். தேர்தல், ஆட்சி எல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் மக்களை கோமாளிகளாக்கி, விஷமத்தை விதைக்கும் இவரை யாருக்குமே தெரியவில்லையா? அதைவிட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் என் பக்கத்தில் வந்து "திமுக திமுக" ..கிட்டு. திமுக வேண்டாம் டா மயிரு. ஆனா நடிகரால் இந்த தமிழ்ச் சமூகம், ஒரு சீழ் பிடித்த சமூகமாக கூடிய விரைவில் மாறும், நான் சொல்றது சத்தியமா நடக்கும். அதை நீங்க சரி செய்யவே அம்பது வருஷம் ஆகும்.
பதிவை எழுதியவர் காயத்ரி அருண்குமார்.
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கிட்ட கார் இல்ல.
~ நான் உன்ட்ட கேக்கவே இல்லையேடா மலமாடு, என்ன ஏன் கோத்து விட்ற. 🤣
எதிர்க்கட்சிகிட்ட அடி வாங்குறான் 🤡
கூட்டணி கட்சிட்டையும் அடி வாங்குறான் 🤣
இவ்வளவு ஏன் சபாநாயகர் கிட்டையும் அடி வாங்குறான் மலமாடு. 🤣🤣🤣
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது யோவ் பேசி தொலையா சீக்கிரம்
Mean While அண்ணன் சேகர் பாபு 🔥🔥🔥
பதில் ஒவ்வொன்றும் நெருப்பு மாறி இருந்துச்சு 👌👌👌
🟡🟡🟡மஞ்சள் துண்டு, தெய்வீக மருத்துவத்திற்கா?
உடன்பிறப்பே,
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது. வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர்.
அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு – மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர். அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் – நண்பர்கள் – கழகக் கண்மணிகள்!
கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோல் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்ட இருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார். அப்படிச் கம்பளிச் சால்வையை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினார். அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது. தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.
அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப்போல - சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை.
-அன்புள்ள, மு. கருணாநிதி (10-04-1997)
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்..
இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே தலைவர் கலைஞர் அவர்கள் விளக்கம் கொடுத்துவிட்டார்..
எனவே குட்டை மனம் படைத்த நிர்மல் குமார் இனிமேலாவது அமைச்சர் பதவிக்கு உரிய வகையில் நடந்துகொண்டால் நல்லது!
காமராசரை திமுக வரலாற்று நெடுக போற்றி இருக்கிறது என்று பல ஆதாரங்களை எடுத்து கூறி இரண்டுநாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய எ.வ.வேலு அவர்கள்..
ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக ராஜாஜி பதவி விலகினார் காமராஜர் முதலமைச்சர் ஆனார் என்று பேசுகிறார்..
ராஜாஜிக்கும் காமராஜருக்கும் ஏதோ சொந்த முரண்பாடு காரணமாக கருத்துவேறுபாடு உண்டானது என்பது போல பேசுகிறார்..
தந்தை பெரியார் நடத்திய போராட்டம் ராஜாஜி ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையை உருவாக்கியது என்பதை வரலாறு மறக்கவில்லை எ.வ.வேலு ஏனோ மறந்துவிட்டார்..
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாற்றையும் பதவி விலகியதையும் திரும்பத் திரும்ப பேசி வரலாற்றை கடத்தவேண்டும்
1952 ல் முதலமைச்சர் ராஜாஜி சென்னை திருவான்மியூரில் சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசும் போது “அவனவன் சாதி தொழிலை அவனவன் செய்ய வேண்டும்" வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை குலத்தொழிலைச் செஞ்சா போதும். எல்லோரும் படிச்சா வேலை எங்கிருந்து கிடைக்கும் என்று பேசுகிறார்
அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் சென்னை சட்டமன்றத்தில், “தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில்களை கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது” என்று கூறி பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள்
விவசாயத் தொழில்கள், கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு வேலைகள், கிணறுகள் வெட்டுதல் போன்ற பல வேலைகளில் பள்ளிச் சிறுவர் சிறுமியரை பழக்கப் படுத்துவது என்பதும் யோசிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்
உடனே பெரியார் விடுதலை ஏட்டில் சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம்! உஷார்” என்று தலையங்கம் தீட்டினார்.
தந்தை பெரியார் எச்சரிக்கை செய்தபடி 1954 ஆம் ஆண்டு புதிய கல்வித் திட்டம் வருகிறது என்று ராஜாஜி அரசு அறிவித்தது.
திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தை அறிவிக்க தந்தை பெரியாருக்கு பொறுப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1953 ஜூலை 11, 12 தேதிகளில் மன்னார் குடியில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாடு தொடங்கியது. அந்த மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி ஆட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய பெரியார், குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தை அறிவித்தார்.
பம்பாயிலிருந்து வெளிவந்த ‘பிளிட்ஸ்’ ஏடு, “வருணாசிரம முறைக்கு உயிர் ஊட்டும் குலக்கல்வித் திட்டம்” என்று எழுதியது.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தாள்
துப்புரவு தொழிலாளியின் பிள்ளைகள் ஆசிரியராகவோ, மருத்துவராகவோ வருவதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியது.
குலக்கல்வியை எதிர்த்து கிளர்ச்சி நடத்திய திராவிடர் கழக தோழர்கள் மீது காங்கிரஸ் காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரஸ் காரர்கள் கலகம் செய்தால் காவல்துறை தலையிடாது என்று வெளிப்படை யாகவே ராஜாஜி அரசு வன்முறைக்கு பச்சைக் கொடி காட்டினார்.இதன் உச்சகட்டமாக திருச்சி பெரியார் மாளிகைக்கு தீ வைக்கத் துணிந்து விட்டனர். அங்கிருந்து கழகத் தோழர்கள் அவர்களை பெட்ரோல் தீ பந்தத்துடன் கையும் களவுமாகப் பிடித்து வைத்தனர். சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார் உடனடி யாக திரும்பினார். காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார் குப்பைக் கூடைக்குப் போனது.
இப்போது நடப்பது தேவர் - அசுரர் போராட்டம் என்று குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் வர்ணித்தார்.
ஆம்! இது ஆரிய - திராவிட போராட்டம் தான் என்று விடுதலையில் எழுதி தந்தை பெரியார் பதிலடி கொடுத்தார்.
ராஜாஜி அரசு எல்லை மீறி போனபோது சேலம் ஆத்தூரில் நடந்த சுயமரியாதை இயக்க திராவிடர் கழக மாநாட்டில், திராவிடர் கழகத்தினர் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுக்கு பிறகும் ராஜாஜி அரசு அடக்குமுறையை நிறுத்த வில்லை. அப்போதுதான் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை சட்டத்திற்கு உட்பட்டு போராடி வந்த நான் இனி சட்டத்தை மீறியாவது குலக்கல்வியை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
பெட்ரோலும் தீப்பந்தமும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நான் அறிவிக்கும் போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்று பெரியார் ஆணையிட்டார். இது மாதிரி யெல்லாம் அறிவிக்கின்ற துணிச்சல் இந்திய வரலாற்றில் தந்தை பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவரையும் காண முடியாது.
இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்
1/2
40 வருடமாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை கலைஞர் எப்படி ஓட வைத்தார்னு அழகா சொல்லி இருக்காரு 🖤❤
ஏரோட்டும் ஏழையெல்லாம் ஏங்கி தவிக்கயிலே தேரோட்டம் உனக்கு வேண்டுமா தியாகேசா என எழுதிய கலைஞர்
இப்படி எழுதிட்டு நீங்களே தேரோட்டம் பண்ணி இருக்கீங்களே என கேட்டதுக்கு கலைஞர் பதில் ❤