போற போக்க பார்த்த நாமெல்லாம் திருமதி சௌமியா அன்புமணியோட விசிறி ஆயிடுவோம் போலயே!
சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளை தெளிவாகவும், தைரியமாகவும் பேசும் குரல்!
அறிவார்ந்த தர்க்கம், தரவுகள், உண்மை... யாரையும் பயப்படாமல் ஆணித்தரமான பேச்சு!
ஜாதி, கட்சி என்ற இமேஜ் உடைத்து, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள வரம் அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் 🔥
#பகிர்வு
படித்ததில் பிடித்தது ஒருவரின் பதிவு அவருக்கு வாழ்த்துக்கள். 🙌🙏🏼🙌🙏🏼
70 வயது முதியவர் அவர்..
கடந்த 2019 ஒரு நாள் அதிகாலை மதுரையில் இருந்து எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது இவரைப் பார்த்தேன்.. காக்கி நிற டவுசர் தெரிய பழுப்பேறிய அழுக்கு வேட்டி.. கரும்பச்சை நிறத்தில் சட்டை தோளில் பழுப்பேறிய வெண்ணிறத் துண்டு.. மூக்குக் கண்ணாடியின் பக்கவாட்டு தண்டுகள் உடைந்ததால் அதற்கு பதில் வெள்ளை கயிறு கட்டி காதில் மாட்டியிருந்தார். முகத்தில் சோர்வும் நடையில் தளர்வும் இருந்தது... என் மனைவி தான் சொன்னார், "பாவங்க அந்த தாத்தா ஒரு காபி வாங்கித்தரலாம் இல்லாட்டி காலை உணவுக்குப் பணம் தரலாம்" என்றார். நானும் அவரை அணுகி "ஐயா உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்.?" எனக் கேட்க திடுக்கிட்டு என்னைப் பார்த்தவர், "ஏன் தம்பி நான் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கலியே" என்றார்.
நானும் "அதில்லிங்க உங்களைப் பார்க்க பசியா இருக்கிற மாதிரியே இருந்தது.. அதான் கேட்டேன்" என்றவுடன். அவர் சிரித்துக் கொண்டே அவர் பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார். நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் தாள்களாக எப்படியும் 3000 ரூபாயாவது இருக்கும்.. "தம்பி நான் பிச்சைக்காரன் அல்ல.. உங்க அன்புக்கு நன்றி" என்றபடியே.. அங்கு இருந்த ஒரு டெலிபோன் ஜங்ஷன் பாக்ஸின் பின்புறம் இருந்து சுருட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாக்கினை எடுத்தார். குப்பையில் கிடைக்கும் பழைய குஜிரி பொருட்கள் அள்ளுவது அவரது தொழில் என்பது இப்போது புரிந்தது. "நான் பிச்சை எடுக்கலை தம்பி, தினமும் உழைக்கிறேன், வர்ற பணத்தை வயதான என் மனைவி மருத்துவ செலவுக்கு கொடுக்குறேன். நேத்து என் வேலை முடிய நேரமானதால்
கடைசி ரயிலை விட்டுட்டேன் அதான் ஸ்டேஷனிலேயே படுத்துட்டேன்.." என்றவர் அருகிலிருந்த ஒரு சின்ன இட்லிகடையில் 200 ரூபாயை எண்ணிக் கொடுத்து 5 இட்லி பொட்டலங்கள் வாங்கினார். இரண்டு பொட்டலங்களை அவரது சாக்கு பக்கத்தில் வைத்துவிட்டு மீதி மூன்று பொட்டலங்களோடு தம்பி "ஒரு நிமிசம் என் கூட வாங்க.." என்றவர் அருகிலிருக்கும் சிறிய சந்திற்குள் நுழைந்தார் பின் தொடர்ந்தேன். மூடப்பட்ட கடைகளின் வாசலில் சிலர் படுத்து இருந்தார்கள். அவர்கள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டோர் என பார்த்ததும் தெரிந்தது. அவர்களை எழுப்பி இட்லி பொட்டலங்களை கொடுத்துவிட்டு அருகில் இருந்த பெட்டிக்கடையில் தண்ணீர் பாக்கெட்டும் வாங்கித்தந்தார். என்னிடம் திரும்பி தம்பி "தனக்கு பசிக்குதுன்னு பிச்சை கூட கேட்க தெரியாத இவங்களுக்கு என்னால எப்ப எப்ப எல்லாம் முடியுமோ அப்ப உதவி செய்யுறேன்.. முடிஞ்சா நீங்க இவங்களுக்கு வாங்கி உங்க கையால கொடுங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லுங்க.. அதுக்கு தான் உங்களை இங்க கூட்டிகிட்டு வந்தேன். என்கிட்ட சாப்பாடு வேணுமான்னு கேட்டதுக்கு நன்றி, நான் வீட்டுக்கு போயி மனைவிகிட்ட சாப்பாடை கொடுத்துட்டு மறுபடி வேலைக்கு போகணும் வரட்டுமா தம்பி.." என்றவர் தன் தளர்நடையை தொடர்ந்தார்.. ஆனால் இப்போது எனக்கது கம்பீர நடையாக தோன்றியது.. உழைப்பாளர் தினம் இவர்களை போன்றவர்களுக்கே பொருந்தும்.
வாழ்த்துகள் காளிமுத்து அய்யா நீங்கள் தான் பூமியில் வாழும் தெய்வம். இரவு ரயில் பயணத்தில் ஃபேஸ்புக்கில் களமாடி மொபைல் சார்ஜ் தீர்ந்ததால் அவருடன் அன்று புகைப்படம் எடுக்க முடியவில்லை.
(இங்கு இருப்பது நெட்டில் சுட்ட படம்)
இருப்பினும் எக்மோர் சங்கீதா உணவகம் அருகில் உள்ள சந்தில் இவரைப்பார்க்கலாம்...
@BharathMaverick@withkaran What the process, if RBI increases the rate of interest they will increase without intimation of reduces we have to ask isn't... It's a open way of cheating not process there's floating interest only what is that mean
அதுவும் பெரிதாக Euducation Back ground & political experience இல்லாத #புதியவர்களால்
Word by Word
Sentence by Sentence
Rebuttal
நான் தவெக #அனுதாபி அல்ல
ஆனா இவனுக கழகத்தை #கதற விடும் போது
ஆனந்தம்
பரமானந்தம்
2/2
This is 97 year old Savitri Antharjanam of an ancient namboothiri family( Paduthol Mana). Every year she worships Sri Vamana( as trikkarapan the lord of Trikkakara Divyadesam). A practice which she never misses. She is seen here offering nivedya.When the minister insulted Vamana
பெயர்தான் மூர்த்தீஸ்வரி.
காரை பார்த்தால் கிறிஸ்டியானா என எழுதி ஒட்டி இருக்கு.
**********
**********
Copied post.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயோதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த 2.6.2022 அன்று மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரைதொடர்பு கொண்டுள்ளனர். அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான திருமதி மூர்த்தீஸ்வரி என்பவர் கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொண்டு அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரி இடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் மூர்த்தீஸ்வரி காரை சோதனை செய்ய அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது.
படித்தேன் பகிர்கின்றேன்
1981 நவம்பர் 27 அன்று, IBM நிறுவன விஞ்ஞானி ஒருவர்,
தன் வீட்டில் சாப்பிட்டு மிஞ்சிய வான்கோழி இறைச்சியை லேபிற்கு எடுத்துவந்து அதன் மீது லேசர் கதிரைப் பாய்ச்சினார்.
அடுத்து நிகழ்ந்த அந்த ஒரு திருப்புமுனையால், இன்று உலகம் முழுவதும் 4 கோடிக்கும் (40M+) அதிகமான மக்கள் மூக்குக்கண்ணாடி இல்லாமல் தெளிவாகப் பார்க்க முடிகிறது!
அவரது பெயர்: ரங்கசுவாமி சீனிவாசன்.
1929 பிப்ரவரி 28 அன்று சென்னையில் (மெட்ராஸ்) பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டங்களை (1949, 1950) முடித்தார். 1953-ல் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று, சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வேதியியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
1961-ல் நியூயார்க்கிலுள்ள IBM ஆராய்ச்சி மையத்தில் இணைந்த அவர், அடுத்த 30 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார்.
அவரது ஆய்வுப் பணி புற ஊதாக் கதிர்கள் (UV light) கரிமப் பொருட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியது. 1981-ல் ‘எக்ஸைமர் லேசர்’ (Excimer laser) மூலம் பிளாஸ்டிக்கில் மிக நுணுக்கமான வடிவங்களைச் செதுக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்தார்.
அப்போது அவரும், அவரது சக ஆராய்ச்சியாளர்களான ஜேம்ஸ் வின் மற்றும் சாமுவேல் ப்ளூமும் ஒரு கேள்வியை எழுப்பினர்:
"மனித திசுக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அப்படியென்றால், இதே லேசர் மூலம் மனித சதையையும் வெட்ட முடியுமா?"
அக்காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட லேசர்கள் வெப்பத்தால் திசுக்களைச் சுட்டுப் பொசுக்கி காயங்களை ஏற்படுத்தின. பரிசோதிக்க ஏதேனும் தேவைப்பட்டபோது, தேங்க்ஸ்கிவிங் விடுமுறை முடிந்து வந்த சீனிவாசன் தன் வீட்டிலிருந்த வான்கோழி இறைச்சியின் குருத்தெலும்பை எடுத்து வந்தார்.
அவர்கள் அதன் மீது லேசரைப் பாய்ச்சினர்.
அந்த வெட்டுக்காயம் மைக்ரோஸ்கோப் அளவில் மிகத் துல்லியமாக இருந்தது. சுட்ட தழும்புகளோ, கருகிய தடயங்களோ, சுற்றியுள்ள திசுக்களுக்கு எந்தச் சேதமோ இல்லை!
இதற்கு ‘Ablative Photodecomposition’ எனப் பெயரிட்டார். லேசர் வெப்பத்தால் திசுக்களை எரிக்காமல், மூலக்கூறு பிணைப்புகளை உடைத்து நுண்ணிய அடுக்குகளாக நீக்கியது.
1983-ல் ஸ்டீபன் ட்ரோக்கல் என்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர் IBM மையத்திற்கு வந்து, இதை மனிதக் கண் விழிப்படலத்தில் (Cornea) பயன்படுத்தும் சோதனையில் இணைந்தார்.
அது மகத்தான வெற்றி பெற்றது!
கண்ணின் வடிவத்தை மாற்றி மூக்குக்கண்ணாடி அணியும் தேவையை நீக்கும் இன்றைய PRK மற்றும் LASIK கண் அறுவை சிகிச்சைகளின் ஆணிவேர் இந்த நிகழ்வுதான்.
130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 22-க்கும் மேற்பட்ட அமெரிக்கக் காப்புரிமைகள். 2002-ல் அமெரிக்காவின் 'National Inventors Hall of Fame'-ல் இணைக்கப்பட்டார். 2013-ல் அதிபர் பராக் ஒபாமா இவருக்கு அமெரிக்காவின் உயரிய 'தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புப் பதக்கத்தை' வழங்கி கௌரவித்தார்.
இன்று அவருக்கு வயது 97.
தான் கொண்டாடிப் பழகாத ஒரு அமெரிக்கப் பண்டிகையின் மிஞ்சிய வான்கோழி இறைச்சியை வைத்து, மனித கண்களைச் சுடாமல் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் நம் சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழர்!👍