நிலைத்தவை வேறு
அழிந்ததவை வேறு
நினைவு அதில் மட்டும்
நிலைத்து நிற்கின்றது
நிலைத்தது அல்ல
நினைவு மட்டுமே
எஞ்சி நிற்கிறது..
இங்கு மெய் எது?
பொய் எது?
காண்பது அரிது..!
- செந்தமிழினி மேஹவர்ஷினி
எங்கிருந்தோ வரும் ஒரு துளியில்...
இருக்கும் நிலை மொத்தமும் மறந்து
அந்த நொடியை ரசிக்கத் தெரிந்துவிட்டால்
வாழ்க்கை உயிர் பெற்றுவிடும்🤍
- செந்தமிழினி மேஹவர்ஷினி🤍🌸
அடியேன் அருளிய 'தமிழர் மறை'
நூல் விமர்சனம்;
வழங்கியவர் @senthamilzhini
உறவுகள் மறுகீச்சு(RT) செய்து ஆதரவு தாருங்கள்.
நூல் தொடர்புக்கு: +91 8940767075
விலை: உரூபாய் 299(தபால் செலவு இல்லை)
ஒரு இரவு போல்
ஒரு பகல் போல்
ஒரு சூரியன் போல்
ஒரு நிலவு போல்
மௌனமாக இரு
மற்றதெல்லாம் தானாக நடக்கும்
உன் நடைப்பதையில் நீ சரியாக நடந்தால்..!
- செந்தமிழினி ந.பா.மேஹவர்ஷினி
ஆழியின் ஆழத்தில்
தொலைந்தவனை
ஆழியே அழைக்க
வந்தால்
எப்படி இருக்குமோ..!
அப்படி தெரிகிறாய்..!
இந்த இருள் சூழ்ந்த
வானத்தில் விண்மீன் திரள்கள்
கடலில் தெரிய..!
- செந்தமிழினி ந.பா.மேஹவர்ஷினி