பெரியார் படத்தை பதிவு செய்வது இருக்கட்டும், பிபிசி ஆவணப்படத்தை வெளியிட முடிமான்னு பாருங்க.
குஜராத்தில் இசுலாமியர்களை படுகொலை செய்த RSS பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய பிபிசி படத்தை மக்களிடம் திரையிடுவதை காவல்துறையை கொண்டு தடுப்பவர்கள் எப்படி பெரியாரிஸ்டுகளாக முடியும்?
சங்கிகள் இரவோடு இரவாக பெரியார், அம்பேத்கர் சிலைகளை சேதபடுத்திவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால் காவி காவல்துறை எல்லா பெரியாரிய தோழர்கள் கண் முன்னே வீடு புகுந்து பெரியார் சிலையை இடிப்பது இதுவே முதல் முறை. இதன் வலி பெரியது. திமுக அரசின் சங்கி மாடல்!! #DMKSangiModel
பாஜக ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆயுதம் பிபிசியின் ஆவணப்படம். நியாயமாக திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்ளும் திமுகதான் இந்த ஆவணப்படத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் இதை பார்ப்பவரை காவல்துறை கைது செய்கிறது. யாரை ஏமாற்ற இந்த ரெட்டை வேடம்