அவிநாசியை ஸ்தம்பிக்க வைத்த தென்னிந்தியாவின் நம்பர் 1 மாரத்தான்.
மகளிர் மட்டுமே பங்கேற்ற அவினாசி மாரத்தான் 2026
அன்புத் தலைவர் @annamalai_k அவர்கள் பெண்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பங்கேற்ற மகளிர் சக்தி மாரத்தானில்10,000-திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாதனை...🙏🙏🙏
#Annamalai #wetheleaders #AvinashiAssembly #AvinashiMarathon #Marathon
பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில், We The Leaders Foundation சார்பில் நேற்று காலை அலகுமலையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் நமது அமைப்பின் முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் நமது அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சகோதர சகோதரிகள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஆரோக்கியமான பெண்களே வலிமையான சமூகத்தின் அடித்தளம். உடல் நலத்தையும் மனவலிமையையும் மேம்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், பெண்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் ஊக்கத்தையும் அளிக்கும்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, We The Leaders Foundation சார்பில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தி அதன் ஒரு பகுதியாக நேற்று அவிநாசியில் நடைபெற்ற 6.5 கி.மீ. ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தானில் நமது முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்களுடன் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை வலியுறுத்திய இந்த மாரத்தான், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது.
நமது @WTLFoundation சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.
பெண்கள் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு குறித்து ' We The Leaders ' அமைப்பு சார்பில் பெண்கள் மாரத்தான்.. கொடியசைத்து துவக்கி வைத்து ஆயிரக்கணக்கான பெண்களுடன் சேர்ந்து மாரத்தானில் பங்கேற்ற அண்ணாமலை..
#WeTheLeaders | #Annamalai | #Marathon | #PuthiyathalaimuraiTV
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
We The Leaders
சார்பில் ராயபுரத்தில்
மூன்று பிரிவுகளாக 16 அணிகள் பங்கேற்ற மகளிர் கால்பந்தாட்ட போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.
இறுதிப் போட்டிகளை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினோம்
ராயபுரம் ரபியா மற்றும் அவருடன் ஆன குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.
சுமதி வெங்கடேஷ்
அருண், ஸ்ரீராம், கிருஷ்ண சாய், நித்யா பசுபதி, கார்த்திக் சிவன், சத்யன் ராமசாமி உள்பட வடசென்னை பகுதி
வி த லீடர்ஸ் அமைப்பினரும் பங்கேற்றனர்.
@annamalai_k@WTLFoundation
சர்வதேச
பெண் குழந்தைகள் தினத்தையொட்டி
We The Leaders சார்பில் அவிநாசியில்
பல்லாயிரக்கணக்கில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆறரை கிலோமீட்டர் தூரம் தலைவர் திரு K. அண்ணாமலை @annamalai_k அவர்களும் ஓட்டத்தில் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்
ஒரு பெண் குழந்தை உயர்ந்தால், ஒரு தலைமுறை உயரும்!
ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பாதுகாப்பு, கல்வி, சம வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.
When a Girl Child Rises, an Entire Generation Rises!
Every girl child deserves protection, education, and equal opportunities.
#InternationalDayOfTheGirlChild #GirlChild #October11 #TNPolice #TamilNaduPolice
Respectful salutes to our brave air warriors on Indian Air Force Day.
From defending our frontiers with absolute supremacy to leading humanitarian rescue missions across the globe, the IAF's commitment inspires all 1.4 billion Indians.
Jai Hind!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
பெண்களுக்கு தற்காப்புத் திறன்கள் குறித்த விழிப்புணர்வையும், அவசரச் சூழ்நிலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறனையும் ஏற்படுத்தும் நோக்கில், We The Leaders அமைப்பு, UNSCHOOL மற்றும் INDIAN KRAVMAGA FEDERATION உடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு KRAVMAGA தற்காப்புப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது.
இந்தப் பயிற்சியின் மூலம் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படைத் தற்காப்புத் திறன்களைக் கற்றுக்கொள்வதுடன், அன்றாட வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான திறனையும் வளர்த்துக் கொள்ளலாம்.
KRAVMAGA தற்காப்புப் பயிற்சியைப் பெற விரும்பும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,
[email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 81229 42929, 82206 35959 என்ற மொபைல் எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும், நமது தலைவர்கள், 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஒரு குழுவாக ஒருங்கிணைந்து KRAVMAGA தற்காப்புப் பயிற்சியை வழங்கிட மேற்கண்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்களில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
உங்களுக்காக KRAV MAGA பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்து, பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்வோம்.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறட்டும், தமிழகத்தின் வளர்ச்சி சிறக்கட்டும்.
சிவகங்கையை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க பெண் போர்ப்படையுடன் புறப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத்தளபதி குயிலி அவர்களின் நினைவு தினம் இன்று!
கோச்சடை, திருப்புவனம், மானாமதுரையில் எதிரிகளை வீழ்த்தி, சிவகங்கை கோட்டையில் உடலுக்கு தீயிட்டு தற்கொலைப் படையாகி வெற்றி வீரவேல் முழக்கத்துடன் சிவகங்கையை மீட்ட வீரமங்கை குயிலியை அவர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகின்றேன்.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
துபாய் விமானத்தில் பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த இந்திய விமானி, கேப்டன் ஸ்மித் மச்சாருடன் உரையாடினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. "நீங்கள் இஸ்ரேலுக்கு மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு ஹீரோ" என புகழாரம். அடுத்த ஆண்டு இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீப சுடரை ஏற்றி வைக்கவும் அழைப்பு.
#India #NarendraModi #Israel #BenjaminNetanyahu #IndianPilot #SmitMachchhar #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
தாய்லாந்தின் பட்டாயா நகரில் உள்ள பிரபல 'Club Nashaa', இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலைப் பாராட்டி "இந்தியாவின் அமைதி நாயகன்" என கவுரவம்!
ஸ்மித் மச்சாரின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்திய கிளப் நிர்வாகம், பின்னணியில் 'Maa Tujhhe Salaam' பாடல் ஒலிக்கச் செய்து மரியாதை!
#Thailand | #India | #FlyDubai | #SmitMachar | #PolimerNews
தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற இன்னல்களையும் தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
A day of bird watching, learning & environmental action at Nanjarayan Bird Sanctuary!
NSS students from Jaivabai Girls School experienced first-hand how VETRY Trust is clearing invasive water hyacinth to restore open waters and protect this vital wetland habitat.