என் கொள்கையிலும்
என் பெருமையிலும்
நான் உறுதியாக
இருக்கிறேன் என்று
உங்கள் உள்ளம்
உணர்த்தி விட்டால்
ஒருவராலும்
உங்களை
அசைத்து விட இயலாது 🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆரம்பத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்...
சில நேரங்களில் யார் முதலில் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல, யார் முதலில் முடிக்கிறார்கள் என்பதே முக்கியம்
I am waiting; I will only buy these stocks once they reach this specific price level.
✅GROWW ✅ 182
✅MCX ✅2700
✅BSE ✅3500
✅ARSSBL ✅540
✅FORCE MOTORS ✅18k
✅REDINGTON ✅210
✅QPOWER ✅800
✅KRN HEAT✅780
✅ANGEL ✅290
✅ITI ✅270
✅APAR IND ✅7500
✅ Hitachi ✅ 29000
TELL ME YOURS STOCK 👇
என் அனுபவத்துல சொல்றேன்
புடிச்சா எடுத்துக்கோ புடிக்கலன்னா கத்துக்கோ
நீ எவ்வளவு பெரியா ஆளா இருந்தாலும் உனக்கு money and time management பண்ண தெரியல்லன்னா நீ ஒரு நடமாடும் நடைபிணம் அவ்வளவுதான்
இன்று முதல் புதிய ஆயுள் காப்பீடு திட்டம் LIC's New Jeevan Sathi
கணவன் மனைவி இருவரும் ஒரே பாலிசியில் கவர் பெறும் திட்டம்.
இதில் பங்கு சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை, பாலிசி எடுக்கும் போதே முதிர்வு தொகை இவ்வளவு தான் வரும் என்று சொல்லும் உறுதி அளிக்கப்பட்ட தொகை ( GUARANTEED ) கிடைக்கும்.
பாலிசி எடுத்தவுடன் ஒருவர் இருந்தால் காப்பீடு தொகை கிடைக்கும் தொடர்ந்து பிரிமியம் காட்டாமல் முதிர்வு தொகையும் கிடைக்கும்.
ஒருவேளை இன்னொருவர் இறந்து விட்டால் நாமினிக்கு காப்பீடு தொகையுடன் GUARANTEED addition சேர்த்து கிடைக்கும்.
ஒருவேளை இருவரும் ஒரே நேரத்தில் இறந்தால் இரண்டு காப்பீடு தொகை மற்றும் Guarented addition கிடைக்கும்.
இங்கு Guarented addition கட்டிய பிரிமியத்தில் ஆண்டுக்கு 7% .
இந்த பாலிசி நீண்ட காலத்திற்கு உறுதி அளிக்கப்பட்ட வருமானம் வேண்டும், இருவரும் சேர்ந்து ஒரே பாலிசி எடுக்க வேண்டும், டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என நினைப்பவர்கள் எடுக்கலாம்.
இரட்டை தாடையை (Double Chin) குறைப்பது எப்படி? 🤔
எளிய முகப் பயிற்சிகள் மூலம் உங்கள் Jawline-ஐ உறுதிப்படுத்தி, தாடை பகுதியில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்கலாம்! இதோ 3 எளிய பயிற்சிகள்:
1️⃣ தாடை-வானம் பயிற்சி: தலையை பின்னால் சாய்த்து மேலே பாருங்கள். சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பவும் (10-20 முறை). 2️⃣ சிங்கக் கர்ஜனை: வாயை அகலமாகத் திறந்து நாக்கை வெளியே நீட்டுங்கள். இது தாடை மற்றும் கழுத்துத் தசைகளை நீட்ட உதவும் (10-20 முறை). 3️⃣ கன்ன காற்று சுழற்றல்: வாயை மூடியபடி காற்றை ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்திற்கு மாற்றுங்கள் (10-20 முறை).
💡 முக்கிய குறிப்புகள்: ✅ தினமும் தவறாமல் செய்யுங்கள் 💧 போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் 🧘♀️ தொடர்ச்சியாக செய்து பொறுமையாக இருங்கள்
#DoubleChin #Jawline #FaceYoga #TamilHealthTips #BeautyTipsTamil #FitnessTamil #SelfCare
Sale Agreement' (கிரய உடன்படிக்கை) மூலம் ஏமாற்றப்பட்டால் என்ன செய்ய வேண்டும்
"2 லட்சம் Advance கொடுத்தேன் சார்... 2 வருஷமா இடத்த காணோம்!"
'Sale Agreement' வச்சு ஏமாத்துறாங்களே... என்ன பண்றது?
நிலம் வாங்குறோம், வீடு வாங்குறோம். "முதல்ல 2 லட்சம் Advance தாங்க, Agreement போட்டுக்கலாம்.
3 மாசத்துல மீதி பணம் கொடுத்து கிரயம் பண்ணிக்கலாம்"னு சொல்றான். நாமளும் நம்பி ஒரு 100 ரூபாய் Stamp Paper-ல Agreement போட்டு Advance கொடுத்துடுறோம்.
அப்புறம் என்ன? 3 மாசம் 3 வருஷம் ஆகும். "விலை ஏறிடுச்சு, இன்னும் 5 லட்சம் கொடு"ம்பான். இல்ல "அந்த இடத்தை வேற ஒருத்தனுக்கு வித்துட்டேன்"ம்பான்.
இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க? Advance போச்சா?
1. "Agreement மட்டும் இருந்தா நிலம் உங்களுக்கு சொந்தமாகாது சார்!"
சட்டம் சொல்லுது: வெறும் Sale Agreement வச்சு நீங்க Owner ஆக முடியாது. *கிரயம் = Sale Deed* தான் உண்மையான பத்திரம். Register Office-ல பதிஞ்சா தான் நிலம் உங்க பேருக்கு மாறும்.
அப்ப Agreement வேஸ்ட்-ஆ? இல்ல. அது ஒரு "Proof". "இவன் எனக்கு விக்கிறேன்னு ஒத்துக்கிட்டான், பணம் வாங்குனான்"னு நிரூபிக்க அது தான் ஆதாரம்.
2. "விக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா Case போடலாம்"
Specific Performance Suit-னு ஒரு Case இருக்கு. "ஐயா, இவன் Agreement போட்டு பணம் வாங்கிட்டான். இப்போ விக்க மாட்டேங்குறான். அவன கிரயம் பண்ணி தர சொல்லுங்க"னு கோர்ட்ல கேக்கலாம்.
Condition: நீங்க "மீதி பணம் Ready-ஆ வச்சிருக்கேன். எப்ப வேணா கொடுக்க தயார்"னு நிரூபிக்கணும். Bank Balance காட்டணும்.
Time Limit: Agreement போட்ட தேதில இருந்து 3 வருஷத்துக்குள்ள Case போடணும். 3 வருஷம் தாண்டிட்டா உங்க உரிமை போய்டும்.
3. "Advance-அ திரும்ப வாங்க முடியுமா?"
முடியும். ஒருவேளை உங்களுக்கு அந்த இடமே வேண்டாம், பணம் மட்டும் போதும்னா, "பணத்த திருப்பி கொடு"னு Case போடலாம்.
ஆனா கவனம்: Agreement-ல "Advance திருப்பி தர மாட்டேன்"னு எழுதி இருந்தா கஷ்டம். அதனால Agreement போடும் போதே "விற்பவர் கிரயம் பண்ணி தரலனா, Advance-அ இரட்டிப்பா திருப்பி தர வேண்டும்" னு ஒரு வரி சேர்த்துக்கோங்க.
ஏமாறாம இருக்க 3 Golden Rules சொல்றேன்:
1. வில்லங்கம் பாருங்க:
EC போட்டு பாருங்க. அந்த நிலம் அவன் பேர்ல தான் இருக்கா? Bank-ல அடமானம் இருக்கா?
2. Register பண்ணுங்க:
100 ரூபாய் Stamp Paper போதாது. *Sale Agreement-அ Register Office-ல பதிவு பண்ணுங்க.* 4% Stamp Duty, 1% Reg Fee கட்டினாலும் பாதுகாப்பு. அப்போ தான் அவன் வேற ஒருத்தனுக்கு விக்க முடியாது.
3. Time Fix பண்ணுங்க:
"3 மாசத்துல கிரயம்"னு Date குறிப்பிட்டு எழுதுங்க. "வாய்தா" கேட்டுட்டே இருந்தா உடனே Lawyer-அ பாருங்க.
மொத்தத்துல:
Advance கொடுத்துட்டு "அப்பாவி"யா நிக்காதீங்க. Agreement ஒரு ஆயுதம். அத முறையா Use பண்ணா உங்க பணமும் வரும், இடமும் வரும்.
உங்களுக்கோ, உங்க சொந்தக்காரங்களுக்கோ இப்படி 'Agreement Fraud' நடந்திருக்கா?
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை:
Sale Agreement என்பது சொத்தின் உரிமைக்கான ஆவணம் அல்ல, அது சொத்தை வாங்குவதற்கான ஒரு 'உறுதிமொழி' மட்டுமே.
விற்பனை ஒப்பந்தத்தை உரிய முத்திரைத்தாளில் (Stamp Paper) எழுதி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.
ஒரு வழக்கறிஞரை (Civil Advocate) சந்தித்து உங்கள் ஒப்பந்த ஆவணத்தை காண்பித்து, உரிய சட்ட ஆலோசனையின்படி மேல் நடவடிக்கைகளைத் தொடலாம்.
#இண்டையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #SaleAgreement