அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh !
Source - indian express !
@arivalayam@TRBRajaa 🥺❤️
#DMK
#AndhraPradesh praises previous #DMK Govt on getting Investments and it was very tough fight with Tamil Nadu
- #TamilNadu ran clean and professional investment process and that deserves appreciation
Thanks to @mkstalin@TRBRajaa @TNIndMin @Guidance_TN
எதிர்கருத்துக்கள் தலைவர் ஸ்டாலின் மீது இருக்கலாம்...ஆனால் அவர் தோற்றதை இவ்வளவு நையாண்டி செய்து சட்டமன்றத்தில் அநாகரிகமாக பேசுவது மாண்பு கிடையாது. அவரின் உழைப்பு விஜயின் சினிமா கவர்ச்சியை காட்டிலும் பல நூறு மடங்கு அதிகம்...
விஜயின் அரசியல் உழைப்பு ஜீரோ.. ஒரு நகர்மன்ற வார்டு வேட்பாளர் கூட இவரை விட அதிகமாக உழைத்து மக்களை சந்தித்து இருப்பார்😡
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Dmkians are known to create ..
Reels to reality series - 6
நம்ம குழந்தைகளை class room சினிமா பாடல்கள் மனப்பாடம் போல் பாட விட்டீர்களே..
நாங்கள் - stem lab
நீங்கள் - beast பாடல் class
Law and Order was maintained perfectly during the DMK regime. It was pure propaganda that DMK did not maintain it.
We lost the elections due to several reasons and this isn’t one of them. If people of TN had thought so, then ADMK would’ve won, certainly not TVK.
The problem here is how absolutely clueless and apathetic TVK leadership is about Law and Order
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
On one hand, in kavundampalayam constituency, an insta influencer who spread superstitious claims like cancer can be cured through astrology wins by a margin of 40K votes...
On the other hand MKS who governed & moved a state to the top position in economic growth in the country faces defeat.
Dear உடன் பிறப்புகளே! there is no need to feel disheartened. Be proud, because we voted for progress instead of falling for a reel actor's cinematic dialogues.
எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄
மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.
மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾
தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரின் உழைப்பை காலம் போற்றும்.
என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾
தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾
#மின்னும்_மன்னை #திமுக
இன்னைக்கு விஜய் பேசினது முழுக்க ஒரு Script தான்...
இத்தனை நாள் பொத்தாம் பொதுவா திமுக, திமுக-ன்னு கத்திட்டு...
கடைசி நாள் மட்டும் மாஸா பன்ச் வச்ச வசனங்களோட ஒரு speech கொடுப்போம் அதுக்கு எவனும் பதிலடி கொடுக்க முடியாதுன்னு தான் இன்னைய தேதிக்கு இந்த script...
இதுல செந்தில்பாலாஜி ஏன் கோவை, எடப்பாடி ஏன் அங்கேயே நிக்கிறார்னு கேட்டதெல்லாம் பக்கா அபத்தம். நீங்க மட்டும் மைனாரிட்டி ஓட்டு இல்லாத இடமா பாத்து நிக்க வேண்டி தான...
அதோட கரூர் சம்பவம் திமுக தான் பண்ணுச்சுன்னா அதை ஆணித்தரமா இதுக்கு முன்னாடியே பேச வேண்டியது தான. இன்னைக்கு கடைசி நேரத்துல கத்திட்டு குடிசைக்குள்ள ஓடிரலாம் ஒரு பய பதில் பேச முடியாதுன்னு ஒரு எண்ணம் தான.
இதுல நேரத்துக்கு தான் போனேன்னு பச்சை பொய் ஒரு பக்கம், அத்தனை உயிர் போனதுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாத மனநிலை இன்னொரு பக்கம்.
அன்னிக்கு அரக்க பறக்க ஓடின ஆள் தான் மக்களுக்கு துணை நிற்கிறேன்னு சவடால் வேற.
விஜய் நடிகராக மாஸ் நிறைந்தவர் ஆனால் ஒரு தலைவராக துளியும் தகுதியே இல்லாத ஒரு ஆள்.
இன்னைக்கும் விஜயை ஏன்டா அதரிக்குறீங்க, அவர் செஞ்ச நல்லது என்ன, அரசியலுக்கு வந்தும் அவர் மக்களுக்காக களத்துல எப்போடா நின்னார்னு கேளுங்க , தளபதி மாஸ், திமுக தீயசக்தி-ன்னு தான் போவானுங்க தற்குறிஸ்...
மத்தபடி தன்னை சுத்தி இருக்கும் கூட்டத்தை தன் சுயநலத்துக்காக, முட்டாள்களாக மாற்றி பயன்படுத்தும் ஒரு தலைவர் எனும் பெயரில் சுற்றும் பிம்பம் தான் விஜய்.
அதற்கு இன்றைய உதாரணம் சின்ன பிள்ளைங்கள பெத்தவனுங்க காதுல விசில் ஊதி ஓட்டு போட சொல்லனுமாம்.
அவனுங்க அடி வாங்கி கெடக்கு போறானுங்க நீ ஜாலியா அடுத்து World tour கெளம்பிடுவ. அவ்வளவு தான்...
இதுல கேப்டனோடு வேற ஒப்பீடு 🤦🤦🤦 அதை நாளைக்கு கொஞ்சம் பார்ப்போம்...
இந்த சமூகத்தின் மாபெரும் தவறான தலைவன் முன்னுதாரணமாய் கண்டிப்பா விஜய் உருமாறி நிற்பார் என்பது மட்டும் நிதர்சனம்...