இனிப்பு: போதையேற்றாத சாராயம்! 🍭🚫🥃
நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து (இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் 🍚), செரிமானமாகி க்ளுகோஸ் எனும் சர்க்கரையாக மாறுகிறது. க்ளுகோஸ் ரத்தத்திற்கு செல்கிறது. இன்சுலின் உற்பத்தியாகி, எல்லா க்ளுகோசும் உடலில் உள்ள தசைகள் போன்ற எல்லா செல்களுக்கும் சென்று, எரிந்து, உடல் செயல்படுவதற்கான ஆற்றலைத் (ATP ⚡) தருகிறது.
பழங்கள் 🍎, வெள்ளை சர்க்கரை (ஜீனி), கரும்பு சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், பனங்கருப்பட்டி, ஜூஸ் 🥤, மற்றும் சர்க்கரை சேர்த்த அனைத்து உணவுகளும் - இனிப்புகள் 🍬, மிட்டாய், பிரட் 🍞, பிஸ்கட், ரஸ்க், ஊட்டச்சத்து பானம் (ஹார்லிக்ஸ் முதலியன). இவற்றில் உள்ள சர்க்கரையின் பெயர் சுக்ரோஸ். இந்த சுக்ரோசில், பிரக்டோஸ் இருக்கும். அதனால் தான் இனிக்கிறது! 🍯
பிரக்டோஸ் உடலில் உள்ள எந்த செல்களுக்கும் ஆற்றலைத் தர முடியாது ❌. எந்த செல்களும் அதை ஏற்காது. அதனால் எல்லா பிரக்டோசும் நேரடியாக கல்லீரலுக்கு (Liver) வரும். 🏥
உடலுக்கு ஆற்றல் தேவையென்றால் மட்டுமே க்ளுக்கோஸ் உடையும். ஆனால் பிரக்டோஸ் அப்படியல்ல, உடனே உடைந்து விடும். ஆற்றல் தேவையில்லாவிட்டால், இது உடைந்து என்ன பயன்? அதனால், ஈரல் இதை கொழுப்பாக மாற்றிவிடும். ⚠️ கொஞ்சம் கொழுப்பு மற்ற செல்களுக்கு செல்ல, மற்றவை ஈரலிலேயே தங்கி Fatty liver-ஐ உருவாக்கும். 📉
குளுக்கோஸ் உடலின் அனைத்து செல்களுக்கும் எரிபொருள். ஆனால் பிரக்டோஸ் (இனிப்பு) என்பது கல்லீரலுக்கு மட்டுமே செல்லும் ஒரு 'சுமை' 🏋️. மதுவை எரிக்க கல்லீரல் எவ்வளவு சிரமப்படுகிறதோ, அதே அளவு சிரமத்தை இந்த இனிப்பும் கொடுக்கிறது! 🍷=🍰
ஆல்கஹால் குடித்தால் மட்டுமே Fatty liver வரும் என நினைப்போர், ஆல்கஹாலே எடுக்காத இந்திய குழந்தைகளின் நிலை என்னவென்று பாருங்கள்: 👦👧
➊ குண்டான குழந்தைகளில் - 45% பேருக்கு Fatty liver இன்று இருக்கிறது!
➋ நார்மல் எடையுள்ள குழந்தைகளில் - 15% பேருக்கு Fatty liver இன்று இருக்கிறது!
பெரியவர்கள்? 👥
❶ குடிக்காத 40% இந்தியருக்கு Fatty liver உள்ளது.
❷ குண்டானவர்களில் - 80% பேருக்கும்
❸ தற்போது குடிப்பவர்களில் - 40% பேருக்கும்
❹ நார்மல் எடையுள்ளவர்களில் - 15% பேருக்கு Fatty liver உள்ளது.
Dr. V. Hariharan, MD, (PhD), 👨⚕️
Diet Consultant.
அறுசுவை என்பது ஆரோக்கியமானவர்களுக்கு. வளர்சிதை மாற்ற நோய்கள் (Metabolic Disorders) சூழ்ந்துள்ள இன்றைய சூழலில், குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் இனிப்பைத் தவிர்ப்பது என்பது ஒரு 'சாய்ஸ்' அல்ல, அது 'கட்டாயம்'! 🛑💪
IMPORTANT INFORMATION
IIT Kharagpur has created National Digital Library for students for all subjects.
Link👇
https://t.co/aAncNP8PRg
It contains more than 4.75 crore precious books.
Please share this information as much as possible for students to know & avail of this priceless facility.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
You are your best friend . You are your family . Nothing will be fair , nothing will wait .
You will be torn apart , you will be spitted at , you will be shoed .
But set the eye on your mountain and start walking , have a purpose , just create one , do not deviate , even if you do - never talk down of yourself , just pick yourself up and start walking again .
The world belongs to the dreamers , the lone walkers , the believers !
At the end of all this - it will be worth it !
Start walking !
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில்.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.