Ena da vijay tv la mambala politician ah kooptu politics concept pani kalaikireenga 😂😂😂
Athuvum full ah bg la thalaivaa nu solumbothu Thalapathy Thalapathy bgm vera 😂♥️🔥
2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முடிந்துவிட்டது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக இரண்டு ஆண்டுகள் இருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம்
கட்சியின் உறுப்பினர் உறுதிமொழி "
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை பின்பற்றுவேன் " என்று தெளிவாக சொல்லிவிட்டதால் சமூகநீதி கொள்கையை உயிர்ப்போடு பின்பற்றப் போற கட்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
தமிழக வெற்றிக்கழகம் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உறுதிமொழி,கொள்கை,
இலக்கு போன்றவற்றை சீக்கிரமாக புதுப்பிக்க வேண்டும்.
234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது,பூத்வாரியாக உறுப்பினர் முகாம் அமைத்து
உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.
மொத்த வாக்காளர்கள் 6 கோடி பேரில் 18-35வயது வரை உள்ள வாக்காளர்கள் சுமார் 2.5 கோடி பேர் உள்ளார்கள்.அதில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையை பிடித்துவிட்டாலே தவெக தனது இலக்கை முக்கால்வாசி அடைந்துவிடும்.
சமூகவலைதளங்கள் அதிகம் பயன்படுத்துவர்களும் இந்த வயதினர் தான்.
சமூகவலைதளம் வேற,களம் வேற என்று எல்லாம் இனி நாம் பேச முடியாது.முன்பு ஊடகங்கள் போல இன்று அது கூட சமூக வலைதளங்களும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அதனால் தான் அனைத்து கட்சிகளும் பல கோடி செலவழித்து தகவல் தொழில்நுட்ப அணியை நிர்வகிக்கிறார்கள்.
பிற நடிகர்களின் ரசிகர்கள் கூட சண்டை போடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.
"பெரிதினும் பெரிது கேள்" என்று இசை வெளியீட்டு விழாவில் தளபதி சொன்னதை பின்பற்றி நம் இலக்கு பெரிது.அதை நோக்கி தான் பயணிக்க வேண்டும்.
திமுக vs தவெக என அரசியல் களம் மாறினால் திமுக பிடிக்காத மற்ற கட்சி ஆதரவாளர்கள், பிற நடிகரின் ரசிகர்களும் கூட வாக்களிப்பார்கள்.
கல்வி விருது விழா,தூத்துக்குடி திருநெல்வெலி மக்கள் சந்திப்பு என தளபதியின் நகர்வுகள் ஒவ்வொன்றும் நேர்மறையான எண்ணங்களை மக்கள் மத்தியில் உருவாக்கிறது.தவெக ஆதரவாளர்களும் அதுபோல நடந்துகொண்டால் swing voters (10-15% கட்சி சார்பற்ற floating voters) தவெக க்கு வாக்களிப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள 50-60 சட்டமன்ற தொகுதிகள் திராவிட கட்சிகளின் கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக போட்டியிடுவார்கள்.உதயசூரியன்,இரட்டை இலை சின்னம் இல்லாதது, கூட்டணி கட்சிகளின் கீழ்மட்ட பொறுப்பாளர்கள் இடையேயான பிரச்சினை காரணமாக திமுக,அதிமுக நிற்கும் தொகுதிகளை விட தவெக இங்கு வாக்குகள் அதிகம் வாங்க முடியும்.உதாரணத்திற்கு
விஜயகாந்த் முதல்முறை ஜெயித்த விருத்தாச்சலம் தொகுதி முந்தைய தேர்தலில் பாமக வென்ற தொகுதி.
இரண்டாவது முறை ஜெயித்த ரிஷிவந்தயம் தொகுதி முந்தைய தேர்தலில் காங் வென்ற தொகுதி.இந்த பாணியை பின்பற்றியதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 தொகுதிகளை வெல்ல முடிந்தது.
234 தொகுதிகளிலுமே முக்கியம் என்றாலும் இதுபோன்ற தொகுதிகளில் இப்போது இருந்தே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இதில் உள்ள தொகுதிகளில் தவெக க்கு அதிக உறுப்பினர் எண்ணிக்கை சேர்ந்த தொகுதியில் தளபதி வேட்பாளராக நின்றால் வெற்றி வாய்ப்பு எளிதாகும்.
சமூக செயற்பாட்டாளர், பொறியாளர்,மருத்துவர்,முன்னாள் மத்திய,மாநில அரசு ஊழியர்கள்,துறை சார்ந்த வல்லுநர் போன்றவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் கொடுத்தால் கட்சி சார்பற்ற வாக்காளர்கள் பலர் தவெக க்கு வாக்கு அளிப்பார்கள்.
தவெக தோழர்கள் உறுதியாக தளபதி கூட இருந்து நலதிட்ட பணிகளை செய்வது,மக்கள் பிரச்சினைக்களுக்கு போராடுவது என தொடர்ந்து இயங்கினால் 2026 இலட்சியம் ,
2031இல் நிச்சயம் வெல்வோம் 💪❣️
#தமிழகவெற்றிக்கழகம்
@actorvijay@tvkvijayhq
Every director expects Rajini sir to do cliche Rajini things..
feels like Nelson somewhat stood out odd in presenting
Hope the glimse dint say much and Loki will shape the character different #Coolie