இந்த கோபத்திற்கு பின்னால் பல வலிகளை பார்த்து தான் இந்த கோபம் வருகிறது என்பதை உணர்ந்து தான் பயணிக்கின்றோம்.
"2016ல் Who is Seeman.?
2018ல் dangers is Seeman.!
2021ல் BJP B Team Seeman.!?
2024ல் Secessionist Seeman.!!
2025ல் DMK B Team Seeman.!?
2026ல் Waiting for Next Slander*😎
கள்ளச்சாராயம் குடித்து இருந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கிய அரசின் செயலை கண்டித்த சீமானை அன்று பாராட்டிய இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன்..
தற்குறிகள் பார்த்து தெரிந்து கொள்ளவும் 😌
மக்கள் எதிர்க்கும் திட்டத்திற்கு, மக்கள் அச்சப்படும் திட்டத்திற்கு, அதுகுறித்த விரிவான ஆய்வறிக்கைகளோ, கருத்து கேட்புகளோ இல்லாமல் அவசரம் அவசரமாக தவெக அரசு அனுமதி அளிப்பது யாருக்காக?
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு அதானியின் அல்லேரி -நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@Seeman4TN@NaamTamilarOrg
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN@NaamTamilarOrg
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் இனி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பார்ப்பார்கள் - சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் (May 20)
நெஞ்சுவலி காரணமாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனியார் மருத்துவமனையில் அனுமதி (May 24)
What bro @TVKVijayHQ Wrong bro!! #TVKVijayFails
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சக நண்பருடன் நேற்று பேசிய போது அவர் சொன்னது
"இலவச கல்வி, மருத்துவம், குடிநீர்னு பேசுறாரு, தற்சார்பு பொருளாதாரம்னு பேசுறாரு, சுற்றுச்சூழல் பாதுகாப்புனு பேசுறாரு!! சீமான் எதிர்க்குறது உள்ளூர் அரசியல்வாதிகள இல்ல, கார்ப்ரேட்களையும் முதலாளித்துவத்தையும்!ஜெயிக்க விட்ருவாங்கலா" #seeman