மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசியோடு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அடையாறு கிடங்கை நேற்று (17.7.2026,வெள்ளிக்கிழமை) பார்வையிட்டேன். எதிர்கால தலைமுறையை தீர்மானிக்கும் மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள் இருக்கும் இடம் இவ்வளவு மோசமாக இருப்பதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. கண் கலங்கியது. கடந்த ஆட்சியாளர்கள் நிர்வாக திறமையற்றவர்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.
மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்வதை தடுத்து விடலாம் என்று முயற்சி செய்த திமுகவிற்கு சரியான நெத்தியடி உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ளது.
பொய் பிரச்சாரம் செய்ய நினைத்த தீய சக்தி திமுகவின் செயல் அம்பலப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நினைக்கும் முதல்வரை கரூர் செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்த மனிதாபிமானமற்ற இழி பிறவிகளின் செயலுக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
மாண்புமிகு முதல்வரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வாதிட்டது திமுகவின் பச்சை அயோக்கித்தனம்.
சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் ஆனார்களா? என்று யோசிக்க தோன்றுகிறது.
FIR ல் பெயரே இல்லாதவர்களை குற்றவாளி என்று சொல்வது நீதிமன்றத்தில் அரசியல் செய்ய நினைத்த மோசன மனநிலைக்கு விழுந்த தர்ம அடி.
திமுகவின் கொடூர மனநிலையை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
வீழ்ந்த திமுக இனி ஒருபோதும் மேலே வராது.
அடுத்த தேர்தலில் 10 % வாக்கு வாங்கினாலே சாதனைதான்.
திமுகதான் தமிழ்நாட்டின் பேரிடர். அந்த பேரிடரில் இருந்து தமிழ்நாடு தவெக எனும் மீட்பு சக்தியால் மீட்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டியை நிரந்தரமாக மீட்கும் சக்தியாக தலைவர் அண்ணன் விஜய் இருக்கிறார்கள்.
ஒப்பாரி வைப்பதை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்.
எங்கள் மாடல் சமூகநீதி மாடல் என்பதை மக்கள் எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
எங்களுக்கு கிடைத்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் பேசுவது தெரிகிறது.
ஜெலுசில் சிரப் வாங்கி குடியுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும்.
அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews
#JustNow || "இதுதான் முதல் தடவை.." MGR மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதல் முறையாக கட்டணம் நிர்ணயம் செய்த த.வெ.க அரசு..!!
#TNGovt | #Student | #Medical | #PolimerNews
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
கடந்த 17ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், ‘அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு, த.வெ.க எம்.எல்.ஏக்களை இழுக்கும் அசைன்மென்ட் அளிக்கப்பட்டிருக்கிறது.’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#TVK | #Vijay | #DMK | #JuniorVikatan | #Magazine
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK