மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
கோயில் பேரில் உள்ள நில ஆக்கிரமிப்பில், யாராக இருந்தாலும்... அதற்கு யார் துணை இருந்தாலும்... பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் !
— அமைச்சர் @RameshOffcl
பெருவங்கூர் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் அமைச்சர் வன்னியரசு திடீர் ஆய்வு; மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
#VanniArasu | #BoysHostel | #Minister | #Inspection
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!