தமிழகத்தில், 1,100 உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 1,927 மருத்துவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 அன்று நடைபெற்றிருக்கிறது. இதன்பின்னர், உத்தேச பட்டியல், மார்ச் 11, 2026 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், விவரங்களும் வெளியிடப்படாமல், சுமார் 100 மருத்துவர்கள் மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த பணியிடங்கள், 1,110 ல் இருந்து, 320 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காகத் தேர்வெழுதி காத்திருந்த இளம் மருத்துவர்கள், மிகுந்த குழப்பத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அரசு, மருத்துவர் பணியிடங்களிலும் அதே வேலையைக் காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது.
உடனடியாக, உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிக்காக, கடுமையாக உழைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது என்று திமுக அரசையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@Subramanian_ma ஐயா, இதுவரை 100 பேருக்கு மட்டும் posting வழங்கியிருக்கிறீர்கள். Provisional Selection List-ல் உள்ள மற்றவர்களுக்கு posting எப்போது? குறைந்தபட்சம் ஒரு tentative date தெரிவிக்கவும். இந்த தாமதமும் தெளிவின்மையும் ஏமாற்றமாக உள்ளது.
@Subramanian_ma Sir only 320 have been called for councelling upto now sir and 100 already have got posting orders from you,when will the others get councelling and get posting sir,many of us have left our jobs and pg seat for this sir it's really frustrating sir.
@Subramanian_ma This is not a fair way of conducting counselling sir. Only 320 candidates have been called unofficially. Andh u have declared that 1100 new doctors have been appointed. Why is there a need to conduct exam if u have less than 50 percent vacancies thant u listed. This is so harsh.
@Subramanian_ma Only 320has been called for counselling sir,we request your concern for the rest of the candidate for job surity despite coc commotion sir Thank you
@Subramanian_ma@draramadoss@EPSTamilNadu MRB ASSISTANT SURGEON GENERAL பதவிக்காக 1071 தேர்வு செய்யப்பட்ட நிலையில் சிலருக்கு மட்டுமே பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.300 பணி இடங்கள் மட்டுமே உள்ளது . தேர்வு செய்யப்பட்ட 1071 மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
@Subramanian_ma Posting orders given only to 100 doctors and claiming it to be 1100 is just a political gimmick. If only 300 vacancies are there at present why to release a provisional list of 1071 members. # MRB ASG posting for all 1071 candidates