1.திமுகவை ஊழல் கட்சி என்பார்கள்.அதனால் ஆதரிக்க மாட்டேன் என்பார்கள்.ஆனால் இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் பதவி இழந்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
குறள் 995, பண்புடைமை.
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் என்று உணர்ந்த அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
I just wish I age and mature gracefully to have the heart you have Thalaivaa @mkstalin 🖤❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
ஸ்கிரீன் டைமை குறைக்கும் பொருட்டு எண்டமூரி வீரேந்திரநாத் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்.
"தூக்கு தண்டனை" ஏற்கனவே படிச்சிருக்கேன்.
இந்த ஒரே வாரத்துல துளசி தளம், காதல் செக் ரெண்டும் முடிச்சிருக்கேன். பட்டாசு.🧨
Started "பர்ண சாலை". இனிமே நாமளும் Book fair போய் photo போடணும்.😌
Power loses its meaning the moment it begins with excuses :
From the huts of the poor to the halls of authority, dignity has always demanded responsibility over justification. A poor man, though burdened by hunger and hardship, rarely welcomes a guest by displaying the nakedness of his poverty. Instead, he conceals his helplessness behind silence, restraint, or even sternness, because human dignity often refuses to beg for sympathy.
Leadership, too, is tested in such moments. A person who ascends to power upon a bridge of promises cannot, after wearing the crown, retreat into the shelter of excuses. The throne is not merely an ornament of prestige; it is a solemn covenant with the hopes of the people. Every word spoken before attaining power becomes a moral debt owed to society.
The people do not seek rulers who narrate obstacles like weary storytellers. They look for courage that can withstand storms, conviction that survives adversity, and action that transforms promises into reality. Difficulties may shadow every age of governance, yet true leadership reveals itself not in comfort, but in the strength to carry responsibility without complaint.
In the end, history does not preserve the echoes of excuses. It remembers only those who stood firm beneath the burden of their word and transformed public trust into enduring action.
// “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.//
மூச்சுக்கு முன்னூறு தடவை தீயசக்தி தீயசக்தின்னு கத்தி திட்டுன திமுகவோட கூட்டணி கட்சிகள் போட்ட பிச்சையில் தான் தூய சங்கி (சக்தி) தவெக தன் முதல் ஆட்சியை அமைத்தது என்பது வரலாற்றில் அழியாத எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாமல் இல்லை. கேட்கக் கூடாது என்று இருக்கிறார்கள்.
விதைக்கப்பட்ட வெறுப்பும், தனி மனித வழிபாடும் கண்ணை மறைக்கிறது.
விதைத்த அனைத்தையும், விதைத்தவர்கள் ஒரு நாள் அறுவடை செய்தே தீர வேண்டும்.
தவெகவின் ஆரம்பம் தொட்டு இப்பவரை யார் அந்த கட்சியை பாஜக பிடியில் தள்ளியது யார்னு ஒரு சின்ன recap..
கரூர் 41 கொலை சம்பவத்தில் நேர்மையான அதிகாரியிடம் விசாரணை பொறுப்பை கொடுத்தவுடன் தனக்கு சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று கேட்டது யார்?
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் அதை வைத்து அழுதது யார்?
தேர்தல் பரப்புரையில் பாஜக பற்றி வாயே திறக்காதது யார்?
தேர்தல் முடிவுக்கு பின் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் காங் ஆதரவை ஆளநர் கேட்காமலேயே கொண்டு போய் கொடுத்து இந்த இக்கட்டான சூழலை உருவாக்கியது யார்?
கம்யூனிஸ்ட், விசிக ஆதரவு கிட்டத்தட்ட உறுதியான நிலையில் 118 என்ற நம்பரை எட்டிய பின் 121 நபர்களின் ஒப்புதலின் தேவை ஏன் ஏற்பட்டது?
NDA கூட்டணி கட்சியான அமமுக வின் ஆதரவு பெற்றது தன்னிச்சையான முடிவா மற்ற கூட்டணி கட்சிகளிடம் விவாதிக்கப்பட்டதா? அப்படி இல்லை என்றால் ஏன் அமமுகவிடம் ஆதரவு கேட்டனர்? யார் கேட்டது?
அவர் கையெழுத்து போடுவதை வீடியோ எடுத்து குதிரை பேரம் நடப்பதற்கான ஆதாரமாக வெளியிட்டது யார்?
இந்த கேள்வி எல்லாம் தவெகவை நோக்கி எழுப்பாமல் திமுக மீது பழி போடுவதை மட்டுமே பேசு பொருளாக வைத்திருக்கும் மர்மம் என்ன?
எதிர்கட்சிகள் குறிப்பாக திமுக ஆட்சி அமைக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று சொல்லி வருகிறது.
ஆனால் முதல் நாளில் இருந்து தவெகவின் செயல்திட்டமே ஆட்சி அமைக்க தாமதப்படுத்துவதில் தான் குறியாக உள்ளனர் என்பது தெளிவாகிறது..
பாஜகவின் செயல்திட்டத்துக்கு தவெக துணை போவது கண்கூடாக தெரிகிறது...
குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இது புரியாமல் இல்லை.
1. ஒரு கட்சிய சார்ந்த ஒரு எம்.எல்.ஏ, கட்சி அனுமதி இல்லாம, தனியா போயி வேற ஒருத்தருக்கு ஆதரவு குடுக்க முடியாது. கட்சி ஒப்புதல் வேணும். இல்லாட்டி கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயலாம்.
2. இங்க சொல்லப்படுறது வேற, கையெழுத்தே போடலங்கிறாப்ல. அது ஃபோர்ஜரி. அந்தளவுக்கு மோசமா போயிருப்பாய்ங்கன்னு தோணல.
3. தனிப்பட்ட முறையில ஒரு எம்.எல்.ஏ-வை இழுக்கணும்னு நினைச்சிருந்தாங்கன்னா, குதிரை பேரம்னு கேஸ் போட வாய்ப்பிருக்கு.
இதையெல்லாம் தாண்டி, ஒரே நேரத்துல தான் கொள்கை ரீதியா எதிர்க்கிறதா சொல்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியோட வேட்பாளர்கிட்டயும், அரசியல் ரீதியா எதிர்க்கிற திமுக கூட்டணி கிட்டயும் எப்படி இவங்க ஆதரவு கேட்கலாம்னு ஒரு அடிப்படைக் கேள்வி வரணும். ஆனா வராது. இது வெறும் அதிகாரத்திற்கான மாற்றமே தவிர, அரசியல் மாற்றம் இல்லங்கிறத புரிஞ்சிக்கிறதுக்கு பெரிய அறிவாளியா இருக்கணும்னு அவசியம் இல்லை.
மாநில நலனுக்காக தவெக ஒரு நிலையான ஆட்சி அமைக்கட்டும்.
தவெக ஒரு உண்மையான மாற்றுன்னு அவங்களைத் தேர்ந்தெடுத்து, தன்னைத்தானே கன்வின்ஸ் பண்ணிக்கிறவங்களோட நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும்னு தான் விரும்புறேன்.
That being said, I don’t think these things will age well for the state.
TVK has the popular vote that clearly means they must be invited to form government & prove their majority in the assembly.
That’s an ideal world, this is BJP’s Barath. The Governor will pull every tool in their playbook to subvert this. For 5 years the DMK fought them tooth & nail over every piece of legislation.
If TVK says Goveror is not allowing & throws up their hand that is not enough. They are being given ample time to prove they have the requisite numbers.
It is not reasonable to expect parties who have won seats based on the DMK platform to support them, that would be a betrayal of their voters.
TVK are being given an early lesson on what they ridiculed as payasam. Now they need to show how they will fight it.
Progressive parties will try all they can to stop Presidents rule. The BJP have already telegraphed their intentions by serving an ultimatum to Tamilnadu with their education bill. We can’t allow the vacuum to subvert years of resistance.
Nobody is stopping the TVK from defeating these subversive tactics. But the buck stops with you. Best of luck 👍
We were filming MKS in a speech to the camera. I asked for a small correction that I thought would drive the point home more aggressively. He refused on the basis that it was unfair to the opposition. That man is the last of his kind. Stay away from rumors guys 🙏
If I know anything about MK Stalin, I assure you he will never permit that kind of skulduggery. The DMK relishes its time in the opposition & will gladly assume that role.
Perception goes a long way than reality. And the penalty is usually very high. Countering perception is not just a part of any strategy, it is the baseline.
We are trying to bounce back! But they already started setting narrative in Insta & WA! If we don't go to these digital channels with the truth, we are never winning the perception again!
Atleast now do something! @TRBRajaa@DMKITwing@arivalayam@mkstalin@Udhaystalin
இதுவரை மக்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் ஓடிய தலைவர்களை தான் பார்த்திருப்போம். First time in history of democracy people couldn't face a leader and see him eye to eye due to guilt.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
Not necessarily. These are all starting packages. One could end up getting a higher number in any of these paths, before the next switch. Also a lot depends on the type of problems we work on, the decisions we take to solve those and the culture we learn in these places. So, may be it depends, but not always.
தன் எழுத்துக்கும் வாழ்வுக்கும் பெரிய இடைவெளி இல்லாத படைப்பாளி. அவருடைய எழுத்தே அவரை இந்த நெலமைக்கு தள்ளிருச்சோன்னு தோணும் அப்பப்ப. எழுத்தாளர் சி.மோகன் எழுதுன “ஜி. நாகராஜன்-எழுத்தும் வாழ்வும்”னு ஒரு புத்தகம் இருக்கு. படிக்கப் படிக்க மனசெல்லாம் ஒரு மாதிரி ஆயிரும்.
முக்கியமாக ஜி நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவல்...
"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்"
என்கிற தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகத்தை எழுதியவர்..
தலைவலி கை கால் குடைச்சல் என என்ன உடல் உபாதை ஏற்பட்டாலும் காயதிருமேனி தைலத்தை பூசி கொள்வது போல
மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழும்பொழுதெல்லாம், அந்த வாசகத்தை நினைத்துக் கொண்டால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்