இன்று லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்படும் காசி டிரான்ஸ்பார்மர் , கண்டக்டர் போன்ற ஊழல்கள் நடக்கும் பொழுது ஒரு பைனான்சியல் கண்ட்ரோலர். ஒரு Middle லெவல் பொது ஊழியர். அவர் தினமும் TNEB அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும். அவர் டெண்டர் முடிவு செய்யும் ஆய்வு குழுவில் இருப்பவர். காசி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் இல்லை. ஆனால் தினமும் அவர் தற்பொழுது ரெய்டு செய்யப்படும் தேனாம்பேட்டை வீட்டில் இருந்து காலை 10.40 மணிக்கு கிளம்பி 10.50 முதல் 11 மணி அளவில் அப்போதைய மின்சார துறை அமைச்சர் வசிக்கும் கிரீன்வேய்ஸ் சாலை செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று அங்கு தான் முழு நாளும் செலவு செய்வார்.
அதற்கான இங்கே பார்க்கும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் விசாரணை அமைப்புகளுக்கு கொடுத்தும் உள்ளது. டெண்டர் அதிகாரி காசி TNEB அலுவலகத்தில் வேலை செய்யாமல் அமைச்சர் வீட்டில் இருந்து வேலை செய்து தான் பல டெண்டர்களை முடிவு செய்தார். இதனால் தான் டிரான்ஸ்பார்மர் போன்ற ஊழல்களில் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட வேண்டியவர்!
ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
எ வ வேலு மற்றும் அவர் மகன் மலைப்பாம்பாடி ஏரியில் இருந்து ஏழு பக்கமும் மண் எடுத்தது எப்படி ?
முழமையாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!
https://t.co/1Sy7nX3YCZ
"எந்த தவறும் இல்லை.. 100 சதவீதம் சரியாக இருக்கிறது.." தேர்தலில் தோல்வி அடைந்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை.. கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட EVM-களை, 2-வது நாளாக பரிசோதிக்கும் பணிகள் குறித்து அதிகாரி பேட்டி
#Chennai | #EVM | #MKStalin | #PolimerNews
விண்கல் போல விவசாய நிலம், வீடுகளில் வந்து விழும் பாறை கற்கள்.. விவசாயிகள் அதிர்ச்சி.. !!
உயிருக்கு ஆபத்தான காஞ்சிபுரம் மாவட்டம் தம்மனூரில் செயல்பட்டு வரும் கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..
#Kanchipuram | #Farmers | #Quarry | #DistrictCollector | #Request | #PolimerNews
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
🚨 தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஒரு தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையின் அடிப்படையில், சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
💰 அச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹2,82,49,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இந்த தொகை தவெக MLA-விற்கு வழங்கப்படவிருந்த முன்பணமாக ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔎 மேலும் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🚨 Based on the investigation into the case registered over the alleged attempt to offer a bribe of ₹35 crore to a TVK MLA during the no-confidence motion against the Speaker of the Tamil Nadu Legislative Assembly, a search was conducted at Deepam Finance, located in Choolaimedu.
💰 During the search, unaccounted cash amounting to ₹2,82,49,000/- was seized. Preliminary investigation revealed that the seized cash had allegedly been entrusted to the accused, who had already been arrested in connection with the case, as an advance payment intended to be delivered to the concerned TVK MLA. Following these findings, two more persons have been arrested.
🔎 Further investigation is in progress.
🚔 Triplicane Police Station
#Triplicane #ChennaiPolice #SwiftAction
மாலையில் கட்சியில் இருந்து நீக்கம்.. இரவில் அதிரடியாக கைது.. ஒப்பந்ததாரரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தவெகவிலிருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீரா என்ற வீராசாமி கைது..
#Chengalpattu | #TVK | #Arrest | #PolimerNews
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், Daimler India Commercial Vehicles Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் / India South East Asia Australia Region (ISEAA) தலைவர் திரு. டார்ஸ்டன் ஷ்மிட் (Thiru. Torsten Schmidt) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept