சும்மா இருந்த வைகோவை திமுக சுரண்டி விட்டது.. அவர்களது இரண்டு MLAக்களை தூக்கி விட்டது.. இனிதான் வைகோவின் 2.0 ஆட்டத்தை பார்ப்பீர்கள் ~ ஆதவ் அர்ஜூன்..
யோவ் அடுத்த எலக்சன்ல அந்த ஆளு வேற கூட்டணிக்கு போயிட்டானா உன்னையவே பீப் ஒலி ஒலிக்குற வார்த்தைகள்ல திட்டுவான்யா..
மதிமுக எதிர்க்கட்சியாக வர வேண்டும் - நெட்டைக்காலன்.
தம்பி... மாசக் கடைசியில் மாமூலைக் கொஞ்சம் ஏத்திக் கேட்டது தப்புதான்... அதுக்காக எங்களை கூட்டணியை விட்டு துரத்திடாதப்பா!..
இன்று இணையத்தில் தாராபுரத்தில் ஒருபையன் பேசியது தான் வைரலாக சுத்திட்டு வருகிறது..
அதாவது போன ஆட்சியில் 12 வகுப்பு மாணவர்களை படிக்க சொல்லி ஸ்பெஷல் கிளாஸ் வச்சாங்க இந்த ஆட்சியில் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க என்று..
உண்மையிலே புல்லரிக்கிறது.. 😡
ஆனால் பாருங்க மாணவர்களை குறை சொல்லும் நாம் ஆசிரியர்கள் ஓட்டு இம்முறை பெருவாரியாக தவெகவுக்கு போனதை பற்றி பேசுவதே இல்லை..
இரண்டு பக்கத்திலும் தவறு உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்..
நமக்கென்ன.. ஜெயிலர் ஆடியோ லான்ஜ் இல்லை தலைவர் மாஸா இரண்டு டயலாக் பேசிட்டு போயிருப்பாரே ச்சே..
சிவகார்த்திகேயன் படம் எப்பத்தான் வருமோ... ஒரே போர் அடிக்குதுப்பா..
படி படினு மட்டுமே இல்லாம ஸ்போர்ட்ஸ்லயும் அதிக கவனத்தையும் செலுத்தி தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு கொண்டு போன திமுக தீயசக்தி தாம்லே..
வயிறு எரிஞ்சு சொல்லனும் போல உள்ளது விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரகுறைவுனு... இன்னும் நிறைய நிறைய அனுபவிக்கனும்ல.. ஓட்டு போட்ட நீங்கள் எல்லாரும்.. 😡
@Udhaystalin 🖤❤️🙏
மதுராந்தகத்தில் தவெகவை ஆதரித்து விசிக சார்பில் நடத்த இருந்த பரப்புரை ரத்து
என்ன ஆசானே இப்படி திடீர்னு பரப்புரைய ரத்து பன்னீட்டீங்க
அட என்ன தலைவரே நீங்க பரப்புரைக்கு போன இடத்துல கட்சி மாறிய துரோகி, பொட்டி வாங்கிய புறம்போக்குனு மரகதம், புஸ்ஸிய விரட்டி அடிச்சி அவங்க தெறிக்க ஓடலயா
அதெல்லாம் ஆசான் முன்னாடி வந்து போகுமா இல்லையா பயப்பட தான செய்வாரு
பாதுகாப்பு
இப்போ சூப்பரா இருக்கா மேடம்
நிதி நெருக்கடியை சமாளிக்க
இருக்கவே இருக்கு
கரண்ட் பில் அப்புறம் என்ன?
விலைவாசி உயர்வு 100% தாண்டி 1000% போனா என்ன
மோதிரம் பள பளன்னு இருக்கு இல்ல
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நாளைக்கு நீங்க ரோட்ல போய்க்கிட்ருப்பீங்க.
ஒரு நாலு பேர் வந்து ஜெய் ஸ்ரீராம் சொல்லும்பானுக .நீங்க சிரிச்சுட்டே விளையாடாமப் போங்க பாஸ்னு சொல்லி நகரப் பார்ப்பீங்க.
அப்ப ஒருத்தன் பொடனிலயே போடுவான். நீ இந்து தான ஜெய் ஸ்ரீராம் சொல்லமாட்டியான்னு.
உங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியாது.
சுத்தி இருக்கவங்களும் இதை ஒரு பெருசாவே பாக்கமாட்டாங்க. ஒரு ஜெய் ஸ்ரீராம் சொல்றதால என்ன ஆகப்போகுது சொல்லிட்டுப் போகலாம்லன்னு உங்களுக்கு அட்வைஸ் கூட பண்ணுவாங்க.
டேய் நான் ஏன்டா சொல்லணும்? இதை சொன்னாத்தான் நான் இந்துவான்னு உங்களுக்குத் தோணும்.
ஆனா அடுத்த அடி விழும் முதுகுல. இப்ப சொல்லமுடியாதுன்னா அடுத்த கேள்வி நீ கிறிஸ்டியனா முஸ்லீமான்னு வரும். இல்ல இந்துதான்னு சொன்னா அப்ப சொல்லுடான்னு அடுத்த அடி விழும். அதை ஒரு நாலு பேரு வீடியோ எடுப்பானுக. இந்நேரம் உங்களுக்கு ரத்தம் வந்துருக்கும். அவனுங்க உற்சாகமாகி அடி வெளுக்க ஆரம்பிப்பானுக.
இப்ப என்ன நடக்கும்?
1. உங்களுக்குக் கோபம் வரும். நீங்க அடிக்கப் பார்ப்பீங்க. ஆளுங்க அதிகமாயிட்டாதால உங்களால ஒன்னும் பண்ணமுடியாது. கடைசியில அடிவாங்கிட்டு , வேற வழியில்லாம அதை சொல்லிட்டு வருவீங்க
2. சொல்லச் சொன்னதை சொல்லிடுவீங்க.
3. சுத்தி யார்னா ஹெல்ப்க்கு வர்றாங்களான்னு பாப்பீங்க. யாரும் வரப் போறதில்ல.
இப்ப உங்க சித்தாந்தம் கொள்கை எல்லாமே உங்க முன்னாடி வந்து கேலியா சிரிக்கும்.யாரைப் பாத்தாலும் தனித்தனி மதமாக பிரிஞ்சு போயிக்கிட்டே இருப்பாங்க அவங்கவங்களைக் காப்பாத்திக்க.
அப்ப நீங்க ஒரு முற்போக்கு ஆளைத் தேடுவீங்க. திமுகவோ , கம்யூனிஸ்டோ , திககாரனோ யாராவது மதம் இல்லங்கறவனைத் தேடுவீங்க. ஆனா யாரும் சிக்க மாட்டான். ஏன்னா அவன் அவன் பொழப்பைக் காப்பாத்தப் போயிருப்பான்.
தேர்தல்ல TVK, அதிமுகக்கு ஓட்டுப் போட்டாலோ அல்லது வேற யாராவது மூணாவது அணி , நாலாவதணி , நோட்டான்னு போட்டு ஓட்டைப் பிரிக்கவைச்சாலோ இதுதான் நடக்கும்.
இல்லன்னு உங்களால உறுதியா சொல்லமுடியுமா?
இதனால திமுக க்கு ஓட்டுப்போடுங்கன்னு சொல்லமுடியாது. ஏன்னா இது உங்க உரிமை. ஆனா ஒவ்வொருத்தரோட உரிமை , உரிமைன்னு பொது அமைதியை , சமத்துவத்தை. மனிதாபிமானத்தை , பாசிசக்காரர்களிடம் அடகுவைக்கமுடியாது.
நீங்க ஆகப்பெரிய இந்து பக்தனாக இருக்கலாம். ராமாயணம் மகாபாரதம்னு கரைச்சுக் குடிச்சுருக்கலாம்.
ஆனா ஒரு மதவெறி பிடிச்ச கும்பல் கிட்ட நீங்க மாட்டுனீங்கன்னா உங்க அடிப்படை அறிவுக்குப் புறம்பா நீங்க நடக்குறதை உங்க மனசாட்சி கேள்விகேட்டாலும் உங்களால எதிர்க்கமுடியாது.
துணையும் இருக்காது.
இது இந்து மதத்துக்கு மட்டுமில்ல.
எந்த நாட்டுல எந்த மதத்துலயும் அடிப்படைவாதிகளிடம் நாடு சிக்கினால் இதுதான் நடக்கும். இது எல்லா ஊர்கள்லயும் நடக்குது.
ஒவ்வொரு இடங்கள்ல ஒவ்வொரு மதத்தோட பேர்ல.
கிறிஸ்துவம் இஸ்லாம் ஏன் அகிம்சையை வலியுறுத்துற புத்தமதம் நிலவுற இலங்கைல கூட நடக்குது.
முற்போக்கானவர்களைத் தேர்ந்தேடுப்பதும் அவர்களைத் தக்க வைத்துக்கொள்வதும் நமது அடிப்படைக் கடமை.
நீங்க என்னென்ன காரணங்களுக்காக பிற்போக்குவாதிகளை ஆதரித்தாலும் உங்க அடிப்படை உரிமைகள் பறிபோவது நிச்சயம்.
சிக்கல் என்னன்னா அந்தப் பாசிசத்தையும், பிற் போக்கையும் ஒரு பெருங்கும்பல் ஆதரிக்கும். இனிவரும் தேர்தல்களில் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க. இல்ல யாருக்குன்னாலும் ஓட்டுப் போடுங்க. ஆனா எது பாசிசத்தைத் தடுக்கும் எது உரிமையை மீட்டுத்தரும் யார் நமக்காகப் போராடுவார்ங்கற உண்மையைப் புரிஞ்சு ஓட்டுப்போடுங்க.
ஓட்டு உங்கள் உரிமை .
சரியான ஓட்டு உங்கள் கடமை .
பிகு: இது உங்களைப் பயமுறுத்துவதற்காகவோ இல்லை மிகைப்படுத்தியோ கூறப்பட்டதல்ல. இயல்பாக நம் நாட்டிலோ பிற நாடுகளிலோ ஆங்காங்கே அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் திட்டமிட்ட சமூக வன்முறையே இவையெல்லாம். இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒன்றுபடுவோம்.
வாழ்த்துக்கள்.
பிகு 1 : இதுல List of Characters ..
*ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடிப்போர்= BJP
*சொன்னா கொறைஞ்சிடுவியா என்போர்= TVK
*வேடிக்கை பார்ப்போர்/Photo எடுப்போர்= அதிமுக
*Muslim-ன்னா வீட்டில் தமிழ் பேசுவியா?= சீமான்
*Wow Tamil Nadu has changed என்போர்= பார்ப்பான்
உங்களை மீட்க வருவோர் = திமுக மட்டுமே 🖤❤
பதிவை எழுதியவர் விமல் மணி.