இன்றைய தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள ஶ்ரீ அழகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மழலை செல்வங்களை வாழ்த்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வி வியாபாரமாகி வரும் இந்த காலத்தில், சமூகத்தின் வருங்கால தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும் ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் கல்வி சேவை பாராட்டுதலுக்கு உரியது. தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான பள்ளி கல்வியும், சிறப்பான கல்லூரிகளும் அமைய வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.
இந்நிகழ்வில், ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் தாளாளர் திரு.செந்தில் அவர்கள், செயலாளர் திரு.அண்ணாதுரை அவர்கள், தலைமையாசிரியர் திரு. ஶ்ரீனிவாசன் அவர்கள், துணை தலைமையாசிரியைகள் திருமதி.சௌமியா அவர்கள், திருமதி. கவிதா அவர்கள், இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள், அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்கள், மாநில பொது செயலாளர் திரு. G.S.கிஷோர் குமார் அவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What if your wellbeing did not depend on what is happening around you?
Inner Engineering offers powerful tools to create balance, clarity, and joy from within.
What is one thing you are ready to leave behind — stress, self‑doubt, or overthinking?
Share in the comments.
Begin your journey: https://t.co/ip3WqPQgoV
India is proud of our fishermen! Highlighted efforts from Odisha, Lakshadweep and Karnataka which showcase how this sector is contributing to a self-reliant India.
#MannKiBaat
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகரமும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சிறப்புடையதுமான, நமது கோயம்புத்தூர், கடந்த 1804 ஆம் ஆண்டு மாவட்டமாக உருவாகி, இன்று 221 ஆண்டுகள் கடந்திருக்கின்றன என்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நமது மண்ணின் 221 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதில், அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஆங்கிலேயர் காலத்தில் ஒரு சாதாரண நிலப்பரப்பாக இருந்து, கடந்த 200 ஆண்டுகளில், கோயம்புத்தூர் மக்களின் கடின உழைப்பால், இன்று பல லட்சம் மக்களுக்கு வாழ்வளிக்கும் நகரமாக உருவாகியிருக்கிறது. கல்வி நிலையங்கள், தொழில் துறைகள், விவசாயம் என, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், கோயம்புத்தூருக்கு தனியிடம் உண்டு.
சுவையான சிறுவாணி தண்ணீரும், இனிமையான கொங்கு தமிழும், அற்புதமான தட்பவெட்ப நிலைக்கும், அன்பான மக்களுக்கும் பெயர்பெற்ற கோயம்புத்தூர், இன்று திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இந்த கையாலாகாத திமுக ஆட்சியை அகற்றி, நமது கோயம்புத்தூரின் பெருமையை மீட்டெடுப்போம்.
On Lachit Diwas, we remember Lachit Borphukan, a symbol of courage, patriotism and true leadership. His heroism continues to inspire generations. He played a key role in safeguarding the exemplary culture of Assam.
Thousands of participants at the Ecstasy of Enlightenment Program in London, creating an inner chemistry of joy and blissfulness. This possibility is open to anyone who strives to go beyond their limitations. -Sg