#BiggBossTamil7 | #KamalHaasan | #BavaChelladurai | #Jovika | #Vichithra
"படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது" - கமல்ஹாசன்
கமலை விட ஏன் ரஜினி புகழடைஞ்சாருன்னு தெரிஞ்சிக்க இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது!
கமலோட 50 வருட சினிமா வாழ்க்கையில ரஜினியின் உச்சத்தையும், ரஜினி போல மக்கள் மனங்களையும் கமல் கவராமல் போனதுக்கு காரணம் அவரோட அதிமேதாவி ஆஃபாயில் தனத்தை விட ரஜினியோட யதார்த்தமான பேச்சும் - யதார்த்தமான வாழ்க்கை முறையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
கமலை நடிகனாக பார்த்த மக்கள், ரஜினியை நடிகனை தாண்டி தங்களின் ஒருவனாக பார்த்தனர்.
பொதுவாக கமல் A சென்டர் மக்களால அதிகம் விரும்பபடுவாரு. ரஜினி A Centre மக்களை விட B & C சென்டர் மக்களால் அதிகமா கொண்டாடப்படுறாரு.
இந்த மக்களுக்கு தேவை இட்லியும், தோசையும் தானே தவிர, PIZZA-ம் BURGER-ம் அல்ல.
இதை முதல்ல கமல் புரிஞ்சிக்கணும்.
கமலோட அப்பா ஒரு வழக்கறிஞர். அண்ணன்களும் வழக்கறிஞர்கள். அதனால அவருக்கு படிப்பு ஒரு பெரிய விஷயமா தெரிய வாய்ப்பில்லை. ஆனா ஏழ்மையான குடும்பத்து பின்னணில பொறந்து , கூலியா வேலை பார்த்து நடிகனாகி உச்சத்துக்கு வந்த ரஜினிக்கு வாழ்க்கையோட ஒவ்வொரு நிலையிலும் ஏற்படுற வலி நல்லாவே தெரியும் தெரியும்.
அதனால தான், MGR சிலை திறப்பு விழாவுல "படிப்பு தான் முக்கியம், நானே கட்சி ஆரம்பித்தால் கூட என் கட்சியில இணையாதீங்க , படிங்க - அது தான் வாழ்க்கைனு" சொன்னாரு.
எனவே, கமல் போன்ற அதிமேதாவிகள் கல்வியை பெருமைப்படுத்தணுமே தவிர சிறுமைப்படுத்துவது ஆபத்தானது அசிங்கமானது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாக்குற BIGBOSS நிகழ்ச்சில , கமல் படிப்பை குறைவா மதிப்பிட்டு பேசுறது குழந்தைகள் மனத்துல விஷத்தை விதைக்கிறதுக்கு சமம்.
இனியாவது தன்னோட அதிமேதாவித்தனத்தை தவிர்த்துட்டு, பெத்தவங்களோட வலியை புரிஞ்சிகிட்டு - ஒரு நடிகனா பேசாம நல்ல தகப்பனா பேசுனார்னா கமல் இன்னும் ��ல காலம் கமல் மக்கள் மனங்கள்ல நல்லவனா வாழ்வாரு.
தொடர்ந்து தன் அதிமேதாவித்தனத்தை காமிச்சிட்டே வந்தார்னா, பேரை இழந்து மரியாதையையும் இழந்து ஒரு சராசரி மனிதனா தான் நினைவுகூறப்படுவாரு.
Thalaivar @rajinikanth forever ❤️🙏💫