Ajith - Vijaykanth star-night issue
Therinja matter dhan irundhalum
enna gethu man @Akracingoffl ..
Always has a clear, genuine perspective that sets him apart..
Padam varalanu kaduppu mayira irudhalum,indha madhiri oru video paartha,ellam parandhu poyittu❤️😭
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்
What a terrific incident in Malaysia, absolute #Baasha vibes!
🔥 மலேசியாவில் மனுஷன் இப்படிப் ஒரு சம்பவம் பண்ணியிருக்கார்!
That last punch 🔥 The way Thalaivar explained about the cobra to Ranjith....
Real Baasha-level mass! 😎
7 min absolute Goosebumps 🔥🔥Don't miss it!
#ThalaivarNirantharam #SuperstarRajinikanth
விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடுவதைக் காட்டிலும், ரஜினியை “பயந்தவர்”, “தோற்றவர்”, “Jealous” என நிறுவ பலருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.
ஏனெனில் சில அரசியல்/ரசிகர் ecosystems-க்கு வெற்றி மட்டும் போதாது.
முந்தைய பெரிய அடையாளத்தையும் மனதளவில் கீழிறக்க வேண்டும்.
அதற்கு உளவியலில் ஒரு பெயர் உண்டு - Comparative Insecurity.
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது அவர் பிஜேபியின் ஏஜென்ட் என விடாமல் பரப்பியது இங்குள்ள மீடியா. அப்போதும் இந்த ஷபீர் போன்ற பத்திரிக்கையாளர்கள் அந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள்.
இப்போது விஜய் கட்சி பெரும்பான்மைக்கு திணறிக் கொண்டிருந்தபோது, ஸ்டாலினை ரஜினி நட்பு ரீதியில் தேர்தல் தோல்விக்கு ஆறுதல் சொல்ல சந்தித்ததை வைத்து "விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க ரஜினி செயல்படுகிறார், திமுக - அதிமுக கூட்டணிக்கு பிஜேபி சொல்படி தூது போகிறார்" என்று பரப்பினார்கள்.
உண்மையில் திமுக - அதிமுக கூட்டணியை கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கு ரஜினி அவசியமே இல்லை.
ஏற்கனவே மோடியின் கூட்டணியில் EPS இருக்கிறார். ஸ்டாலினுக்கும் மோடிக்கும் பகை என்று கிடையாது, அவர்களுக்குள் இருப்பது கருத்தியல் மோதல் மட்டுமே. ஸ்டாலின் ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் ஸ்டாலினும் மோடியும் முகமலர்ச்சியோடு உரையாடி இருக்கிறார்கள்.
கலைஞரின் 100ம் ஆண்டு நினைவு நாணயம் வெளியீட்டுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். கலைஞர் சமாதிக்கே பிஜேபி குழு சென்றது.
இப்படிப்பட்ட அரசியல் கடந்த நட்பான சூழலில், "திமுக ஆதரவில் அதிமுக அரசு" என்றால், அதை மோடி நேரடியாகவே ஸ்டாலின், EPS இருவரிடமும் பேசி முடித்திருக்க முடியும். அதற்கு ரஜினியின் தூது அவசியமே இல்லை.
என்றாலும், ரஜினி மீது வன்மம் கொண்ட பத்திரிக்கையாளர்கள் கடந்த நான்கு நாட்களில் ரஜினி மீது ஆதாரமற்று பழியை சுமத்திக்கொண்டே இருந்தார்கள்.
ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை உறுதி செய்ய விஜய் திணறுவதை மறைக்க ரஜினி பக்கம் focus செய்தார்கள். வழக்கமாகவே ரஜினி எதிர்ப்பு ஆக்ஸிஜனில் வாழும் விஜய் ரசிகர்கள் இந்த பழி சுமத்தலை இன்னும் பெருக்கி பரப்பிவிட்டார்கள்.
இப்படி பரப்பப்படும் அவதூறுகளுக்கும், திட்டமிட்ட பிம்ப சிதைப்பு செயல்களுக்கும் காலம் பதில் சொல்லுமா என்பது காலத்துக்கே வெளிச்சம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மூ க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள் . நட்பு ரீதியா திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார் .இதுலே எந்த அரசியலும் இல்லே . இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
இந்த மனுஷனுக்காடா பொறாமை?
இனிமேலாச்சும் அவரு பேர் சொல்லி புலம்பாமல், மக்களுக்கு நல்லது பண்ணுங்க. என்னைக்கும் அவருக்கு பதவி ஆசையும் இல்லை, பொறாமையும் இல்லை.
#Rajinikanth